Friday, March 1, 2024

பேட்டி....!

பெங்களூரு வெடிகுண்டு சம்பவம் - கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் நேரில் ஆய்வு மற்றும் பேட்டி:



பேட்டி....!

ஜனநாயகத்தை காப்பற்ற லாலு பிரசாத் யாதவ் அழைப்பு....!

பி.பி்.சி. தொலைக்காட்சிக்கு சிறப்பு பேட்டி:



அழைப்பு....!

மத்திய பாஜக ஆட்சியை வீழ்த்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் அழைப்பு:



கேள்வி....!

 • HMT 

• BHEL 

• IIT 

• IIM 

• AIIMS 

• NDI 

• DRI 

• ISRO 

• ONGC 

ஆகியவற்றை உருவாக்கியது காங்கிரஸ்.

நீங்கள் என்ன புதிதாக உருவாக்கினீர்கள்?

பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி...!



கண்டனம்....!

காட்டுமிராண்டித்தனத்தின் எல்லை இதுதான்.

பெண்ணாக இருந்தாலும் நாக்கு தடுமாறுகிறது.

 இதைப் படித்ததும் உள்ளம் நடுங்க வேண்டும்.

■ உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில், இரண்டு மைனர் சிறுமிகள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர், அவர்களது குடும்பத்தினர் செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வருகின்றனர்.

■ அவர் கூறுகையில், செங்கல் சூளை ஒப்பந்ததாரர் முதலில் சிறுமிகள் குளிப்பதை வீடியோ எடுத்தார், பின்னர் அவர்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.

■ அவர்கள் தங்கள் நண்பர்களையும் கூட்டு பலாத்காரம் செய்தனர்; இதனால் மனமுடைந்த சிறுமிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

■ கோபம் எங்கே? மக்கள் ஏன் கோபப்படுவதில்லை? நமது சமூகம் இவ்வளவு சீரழிந்து விட்டதா? மக்கள் இறந்துவிட்டார்களா? இந்த நாடும் இந்த உலகமும் பெண்களுக்கு இல்லையா? இந்த மிருகங்கள் ஏன் இவ்வளவு பயமற்றவையாக மாறிவிட்டன?

■ இந்த செய்தி ஏன் காணவில்லை? யார் பதில் சொல்வார்கள்? யார் நியாயம் செய்வார்கள்? வறுமை எப்படி இவ்வளவு விலை உயர்ந்தது? பெண்ணாக இருப்பதற்கு இதுதான் தண்டனையா?

■ உங்கள் மகளைப் பார்த்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதற்கு எப்பொழுது உதாரணம் காட்டப்படும்? எப்போது, ​​இறுதியாக?

@SupriyaShrinate



அதிரடி பேட்டி....!

பாஜக ஆட்சியில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளது உண்மையே....!

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பரபரப்பு கருத்து:



அழகான பத்து மசூதிகள்....!

 உலகின் மிக அழகான பத்து பள்ளிவாசல்கள்....!


பள்ளிவாசல்கள் என தமிழில் அழைக்கப்படும் மஸ்ஜித்துகள், இஸ்லாமிய கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். உலகில் இஸ்லாம் இரண்டாவது மிகப்பெரிய மார்க்கமாக இருந்து வருகிறது. முஸ்லிம்களின் மக்கள் தொகை தற்போது சுமார் 190 கோடி அளவுக்கு இருந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வரும் 2050ஆம் ஆண்டிற்குள் உலகில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து, இஸ்லாம் முதலாவது மிகப்பெரிய மார்க்கமாக வரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 

முஸ்லிம்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உலகில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ 63 லட்சத்திற்கும் மேற்பட்ட மஸ்ஜித்துகள் இருந்து வருகின்றன. ஒரு ஆராய்ச்சியின்படி, இந்தோனேசியாவில் அதிக எண்ணிக்கையிலான பள்ளிவாசல்கள் உள்ளன. இந்த மசூதிகள் இஸ்லாமிய கட்டிடக்கலை மற்றும் நமது முன்னோர்களின் புகழ்பெற்ற வரலாற்றின் சான்றாகும். வாருங்கள்...உலகின் மிகப் பழமையான மற்றும் பெரிய 10 மசூதிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம். 

 மஸ்ஜிதுல் ஹராம்- சவுதி அரேபியா: 

சவுதி அரேபியாவின் மக்கா நகரில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஹராம், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கு மிகவும் புனிதமான மற்றும் மிக முக்கியமான இடமாகும். மஸ்ஜிதின் நடுவில் முஸ்லிம்களின் கிப்லா உள்ளது. மஸ்ஜிதுல் ஹராம் உலகின் மிகப்பெரிய மசூதியாகும். உலகம் முழுவதிலுமிருந்து ஹஜ்ஜுக்காக வரும் மில்லியன் கணக்கான முஸ்லிம்களின் மையமாகவும் இது உள்ளது. தற்போது, இந்த​​மசூதி 3 லட்சத்து 56 ஆயிரத்து 800 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஒரே நேரத்தில் தொழுகை செய்யலாம். 

மஸ்ஜித் நபவி-சவுதி அரேபியா: 

மஸ்ஜித் நபவி உலகின் மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றாகும். மேலும், முஸ்லிம்களின் இரண்டாவது புனிதமான இடமாகும். மதீனா நகரில் அமைந்துள்ள இந்த மசூதியின் அடித்தளம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் நாட்டப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹிஜ்ரா முடிந்த உடனேயே இந்தப் பள்ளிவாசலைக் கட்டுவதற்கு நபி நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டது மட்டுமின்றி, அதன் கட்டுமானத்திலும் கலந்து கொண்டார்கள். இது ரஷீத் கலிபா, உமையாத் கலிபா, அப்பாஸித் கலிபா மற்றும் ஒட்டோமான் பேரரசு உட்பட பல காலகட்டங்களில் விரிவுபடுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. நபியின் மசூதி என்று அழைக்கப்படும் இந்த பள்ளிவாசல், 4 லட்சத்து 50 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது, இதில் இதில் ஒரே நேரத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமாக மக்கள் தொழுகையை மேற்கொள்ள முடியும். 

அல்-அக்ஸா மசூதி-பாலஸ்தீனம்: 


முஸ்லீம்களின் முதல் கிப்லாவான இந்த பள்ளிவாசல், மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மஸ்ஜிதுல் நபவிக்கு அடுத்தபடியாக மூன்றாவது புனிதமான இடமாகும். அல்-அக்ஸா மசூதி முஸ்லிம்களின் பாரம்பரியம் என்பதை வரலாற்று ஆவணங்கள் நிரூபிக்கின்றன, ஆனால், யூதர்கள் இது சுலைமானி கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டது என்று கூறுகின்றனர். இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனத்தின் ஜெருசலேமில் அல்-அக்ஸா மசூதி உள்ளது. இது ஜெருசலேமில் உள்ள மிகப்பெரிய மசூதியாகும், இதில் 4 லட்சம் முஸ்லிம்கள் ஒரே நேரத்தில் தொழுகை செய்யலாம். 

பைசல் மஸ்ஜித்-பாகிஸ்தான்: 


பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் அமைந்துள்ள இந்த பள்ளிவாசல், உலகின் நான்காவது பெரிய மசூதியாகும். இது 1986 இல் கட்டப்பட்டது. கட்டுமானத்திற்கு நிதியுதவி வழங்கிய சவுதி பட்டத்து இளவரசர் கிங் பைசல் என்பதால் பள்ளிவாசலுக்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த மஸ்ஜித் பாரம்பரிய இஸ்லாமிய கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த மசூதியில் ஒரே நேரத்தில் 3 லட்சத்துக்கும்மேற்பட்ட முஸ்லிம்கள் தொழுகை நடத்தலாம்.

 இஸ்திக்லால் மஸ்ஜித்-இந்தோனேசியா: 

இந்தோனேசிய தலைநகரான ஜகார்த்தாவில் அமைந்துள்ள இந்த மசூதி தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய பள்ளிவாசல் என்று கூறப்படுகிறது, இது 1978-இல் கட்டப்பட்டது. மசூதியின் நவீன வடிவமைப்பு இந்தோனேசியாவின் பல்வேறு கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது. இந்த மசூதி 9 புள்ளி 5 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது, இதில் 1 லட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம்கள் ஒரே நேரத்தில் தொழுகை செய்யலாம். 

ஹாசன் II மஸ்ஜித்-மொராக்கோ: 

மொராக்கோவின் காசாபிளாங்காவில் அமைந்துள்ள இந்த மசூதி 1993-ஆம் ஆண்டு கட்டப்பட்டது . இந்த பள்ளிவாசல், மொராக்கோ கட்டிடக்கலையின் தலைசிறந்த படைப்பாகும், இதில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் தொழுகை செய்யும் வசதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

பாட்ஷாஹி மஸ்ஜித்-பாகிஸ்தான்: 


பாகிஸ்தானின் லாகூரில் அமைந்துள்ள இந்த மசூதி 1673-இல் முகலாய பேரரசர் ஔரங்கசீப் அவர்களால் கட்டப்பட்டது. இந்த பள்ளிவாசல் முகலாய மற்றும் இஸ்லாமிய கட்டிடக்கலையின் அற்புதமான கலவையாகும். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஒரேநேரத்தில் இந்த மஸ்ஜித்தில் தொழுகை நடத்தலாம்.

சுல்தான் அகமது மஸ்ஜித்-துருக்கி: 


ப்ளூ மசூதி என்றும் அழைக்கப்படும் இது துருக்கியின் வரலாற்று நகரமான இஸ்தான்புல்லில் அமைந்துள்ளது. 17-ஆம் நூற்றாண்டில் இந்த மஸ்ஜித் கட்டப்பட்டது. இதன் 6 மினாரட்டுகள் நீல ஓடுகளால் ஆனவை. இந்த மசூதியில் ஒரே நேரத்தில் ஒரு லட்சம் முஸ்லிம்கள் தொழுகை நடத்தலாம். நீல மசூதி சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமானது.

ஷேக் சயீத் மஸ்ஜித்-ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: 


அபுதாபியில் அமைந்துள்ள இந்த மசூதி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மிகப்பெரிய மசூதியாகும். கடந்த 2007-இல் இந்த பள்ளிவாசல் கட்டப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நிறுவனர் ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் நினைவாக இந்த பள்ளிவாசலுக்கு பெயரிடப்பட்டுள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 41 ஆயிரம் முஸ்லிம்கள் தொழுகை நடத்த வசதி செய்யப்பட்டுள்ளது. மசூதியின் மகத்துவத்தை மேலும் கூட்டிச் செல்லும் உலகின் மிகப்பெரிய கம்பளம் மற்றும் சரவிளக்குகளும் இதில் உள்ளன. 

பர்சா கிராண்ட் மஸ்ஜித்-துருக்கி: 


ஒலு காமி என்றும் அழைக்கப்படும் பர்சாவின் கிராண்ட் மசூதி, துருக்கியின் பர்சாவில் அமைந்துள்ளது. இந்த பள்ளிவாசல் 14-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது செல்ஜுக் மற்றும் ஒட்டோமான் கட்டிடக்கலையின் கலவையாகும். மசூதியில் 20 குவிமாடங்களும் இரண்டு மினாரட்டுகளும் உள்ளன. இதில் ஒரே நேரத்தில் 5 ஆயிரம் இஸ்லாமியர்கள் இந்த மஸ்ஜித்தில் தொழுகை நடத்தலாம்.

இந்தியாவில் புகழ்பெற்ற பள்ளிவாசல்கள்:

நாம் மேலே குறிப்பிட்ட 10 பள்ளிவாசல்களை போன்று, இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் இஸ்லாமிய பாரம்பரிய மற்றும் கலாச்சார முறைப்படி அழகிய கட்டிடக் கலையுடன் கட்டப்பட்ட ஏராளமான மசூதிகள் உள்ளன. குறிப்பாக, தலைவர் நகர் டெல்லியில் உள்ள பிரமாண்ட ஜஆமியா மஸ்ஜித், மத்திய பிரதேச தலைவர் போபாலில் உள்ள பிரமாண்டமான தாஜுல் மஸ்ஜித் ஆகியவை மிகவும் புகழ் பெற்றவை. இதேபோன்று, லக்னோ, ஆக்ரா, காஷ்மீரின் ஸ்ரீநகர், ஜெய்ப்பூர், மற்றும் சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் அழகிய பள்ளிவாசல்கள் இருந்து வருகின்றன. இதன் அழகை காண நாள்தோறும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அத்துடன், இந்த பள்ளிவாசல்களில், இஸ்லாமியர்கள் பெரும் அளவுக்கு சென்று ஏக இறைவனிடம் உலக நன்மைக்காக துஆ கேட்டு, தங்களுடைய ஆசைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொண்டு அமைதியும் மகிழ்ச்சியும் அடைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்