Monday, May 19, 2014

சிகரெட் வாங்க தடை.....!

நியூயார்க்கில் 21 வயதுக்குட்பட்டவர்கள் சிகரெட் வாங்க தடை.....!



அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சிகரெட் வாங்குவதற்கான குறைந்த பட்ச வயது 21 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த நியூயார்க் நகர் முன்னாள் மேயர் பூளூம்பெர்க் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் பரிந்துரை செய்தார்.

தற்போது  இந்த மசோதா அமலுக்கு வந்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 19ம் தேதி பூளூம்பெர்க் தனது பதவி காலம் முடிவடைவதற்கு முன் சிகரெட் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயதையும் 21ஆக பரிந்துரை செய்திருந்தார்.

தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள மசோவின்படி இனி சில்லறை விற்பைன நிலையங்கள் அனைத்திலும் 21 வயதிற்குட்பட்டவர்களுக்கு சிகரெட் போன்ற புகையிலைப்பொருட்கள் விற்கப்படமாட்டது என்ற அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சிகரெட் வாங்குபவர்களின் அடையாள அட்டைகளை விற்பனையாளர்கள்  ஸ்கேன் செய்து வயதை சரிபார்த்தபின்னரே சிகரெட்டை விற்பனை செய்துவருகின்றனர்.

மேலும் கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி முதல் பூங்காக்கள், ,உணவகங்கள், பார்கள்,  பொது சதுக்கங்கள் போன்ற இடங்களில் புகைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிகரெட்டிற்கான விற்பனை வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனையடுதது அமெரிக்காவில் சட்டம் நடைமுறைக்கு வந்தையடுத்து 21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு சிகரெட் புகைப்பது முற்றிலும் குறைற்துள்ளது.

அமெரிக்காவில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த சட்டத்தை போன்று இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் இதுபோன்ற சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்...

இளைஞர்களின் வாழ்வில் வதந்தம் வரும் அல்லவா....! புகைப்பிடிக்கும் பழக்கம் குறையும் அல்லவா...!

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: