Monday, October 3, 2011

சொன்னார்கள்!

சொன்னார்கள்!


மின்வெட்டு !


தனித் தெலுங்கானாவை வலியுறுத்தி ஆந்திராவில் நடைபெறும் போராட்டங்கள்,  ஒரிசா மாநிலத்தில் ஏற்பட்ட வௌளப் பெருக்கு ஆகிய காரணங்களால்,  தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மின்சாரத்தின் அளவு பாதியாக  குறைந்துள்ளது.  இதனால், தமிழகத்தில் எதிர்பாராமல் மின்தடை ஏற்பட்டு மக்களுக்கு இன்னல்கள் உருவாகியுள்ளன.

தெலுங்கானா போராட்டம்,  ஒரிசா
வௌளம் ஆகிய நிலைமைகள் சீராகும்வரை, வெளிச்சந்தையில் மின்சாரத்தை வாங்கி, தற்போது ஏற்பட்டுள்ள மின்தட்டுப்பாட்டை போக்க ஆணையிட்டுள்ளேன்.  வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் கிடைத்தவுடன், மின் குறைபாடு சீர் செய்யப்படும்.



முதலமைச்சர் ஜெயலலிதா


தமிழகத்தில் மின்வெட்டு இருப்பதை ஒப்புக் கொண்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க.ஆட்சியில் மின்வெட்டு ஏற்பட்டபோதெல்லாம் கையாலாகாத அரசு என விமர்சித்தார்.  அந்த வாசகம் தற்போதைய அவர் தலைமையிலான அ.தி.மு.க. அரசுக்கும்  பொருந்துமா?


கலைஞர் மு.கருணாநிதி
தி.மு.க. தலைவர்




மின்தட்டுப்பாட்டை போக்க அ.தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நாள் ஒன்றுக்கு 5 மணி  நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு, அனைத்து தரப்பினரும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.



மருத்துவர் ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர்

No comments: