Tuesday, October 14, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (102)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....! "

நாள் - 102

டாஸ்மாக் கடையில் மது அருந்திய மூன்று பேர் பலி......!

முசிறி பழைய பஸ் ஸ்டாண்டில், டாஸ்மாக் கடையில் மது அருந்திய மூன்று பேர் பலியாயினர்.

திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்தவர் கணபதி. இவர், ஆற்று பாதுகாப்பு உபகோட்டத்தில், தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார்.

கடந்த 13.10.14 அன்று திருநாராயணபுரம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, நண்பர்களான, ஆட்டோ டிரைவர் செல்வம், கணேசமுருகன், ஆகியோருடன், முசிறி பழைய பஸ் ஸ்டாண்ட்டில் உள்ள, டாஸ்மாக் கடையில் மது குடித்துள்ளார்.

மது அருந்தி விட்டு, மூவரும், செல்வத்தின் ஆட்டோவில் வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

அப்போது, கணபதிக்கு மயக்கம் ஏற்பட்டதால், அவரை, முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால், வழியில் கணபதி இறந்தார்.இதையடுத்து, செல்வம், கணேசமுருகன் ஆகியோர், கணபதி உடலை முசிறி அரசு மருத்துமனையிலேயே விட்டு விட்டு, மீண்டும் பழைய பஸ் ஸ்டாண்டுக்கு வந்துள்ளனர்.

அங்கிருந்து வீட்டுக்கு செல்லும் வழியில், ஆட்டோவிலேயே படுத்து துங்கியுள்ளனர்.காலை, அவ்வழியாக சென்றவர்கள், செல்வம் மற்றும் கணேசமுருகன் ஆகிய இருவரும், ஆட்டோவில் தூங்குவது குறித்து, அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.



அவர்கள் வந்து பார்த்த போது, இருவரும் இறந்திருப்பது தெரியவந்தது. உறவினர்கள், அவர்களின் உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்று விட்டனர்.

தகவலறிந்த, ஆர்.டி.ஓ., ஜெய்னுலாப்தீன், ஆட்டோவில் இறந்து கிடந்த கணேசமுருகன், செல்வம் ஆகியோரின் உடலை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பும்படி, போலீசாருக்கு உத்தரவிட்டார்.

மது பழக்கம் எப்படியெல்லாம் மனிதர்களின் உயிர்களை கொல்கிறது பார்த்தீர்களா சகோதரர்களே..

இருந்தும் நம்முடைய இளைஞர் சமுதாயம் மதுவிற்கு அடிமையாகி வருகிறது..

எனவேதான் அரசு முன் கோரிக்கை வைக்கிறோம்...

தமிழகத்தில் உடனே பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: