Tuesday, October 13, 2015

காலம் பதில் சொல்லியே தீரும்...!

காலம் பதில் சொல்லியே தீரும்...!


ம.ம.க. தொடங்கப்பட்ட நேரம் அது.

முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க வலிமையான இயக்கமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இருக்கும் போது புதிதாக ஒரு இயக்கம் தேவையா என சமுதாயத்தில் அக்கறை உள்ளவர்கள் வினா எழுப்பினார்கள்.

இதனால் முஸ்லிம் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும்.

பிளவுகள் உருவாகும் என அச்சம் தெரிவித்தனர்.

இந்த கேள்வி இப்போது ம.ம.க.வின். உண்மையான தலைவர் நான்தான் என கூறிக் கொள்ளும் ஜவாஹிருல்லாவிடம் அப்போது முன் வைக்கப்பட்டது.

ஊடகங்களும் இதே வினாவை எழுப்பின.

அதற்கு கண்ணியமான முறையில் ஜவாஹிருல்லா பதில் அளித்து இருக்கலாம்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் அதன் தலைவர்களை விமர்சனம் செய்யாமல் இருந்திருக்கலாம்.

மாறாக என்ன பதில் மற்றும் விளக்கம் சொன்னார் தெரியுமா.

காயிதே மில்லத் தொடங்கிய முஸ்லிம் லீக் தற்போது இல்லை.

அதன் தலைவர்கள் முஸ்லிம் லீக்கை சரியாக நடத்தவில்லை.

அதனால் அது வலிமையான இயக்கமாக செயல்படவில்லை என தாறுமாறாக விமர்சனம் செய்தார்.

சக முஸ்லிம் இயக்கத்தையும் அதன் செயல்பாடுகளையும் கிண்டலடித்தார்.

அத்துடன் ம.ம.க.தான் முஸ்லிம் சமுதாயத்தின் வலிமையான இயக்கம்.

உண்மையான முஸ்லிம் இயக்கம்.

மற்ற முஸ்லிம் இயக்கங்கள் அனைத்தும் போலி இயக்கங்கள்.

சுயநல இயக்கங்கள் என்ற பாணியில் கொக்கரித்தார்.

மீடியாக்களில் மற்ற முஸ்லிம் இயக்கங்களை அவமானம் செய்தார்.

ம.ம.க.வில் உள்ளவர்கள் வைரங்கள் என்றார்.

சுயநலம் இல்லாதவர்கள் என தமக்கு தாமே சான்றிதழ் கொடுத்துக் கொண்டார்.

இன்று நிலைமை என்ன.

ஜவாஹிருல்லா & கோவும்

தமீமுன் அன்சாரி & கோவும்

ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி வீசிக் கொள்கிறார்கள்.

மீடியாக்களில் பேட்டியும் அறிக்கைகளையும் கொடுத்து முஸ்லிம் சமுதாயத்தை எவ்வளவு அசிங்கப்படுத்த முடியுமோ அவ்வளவு அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதை சமுதாய அக்கறையுடன் எடுத்துக் கூறி விமர்சனம் செய்தால் ம.ம.க.வையும் அதன் தலைவர்களையும் தாக்கி எழுதுவதை தவிர்க்கலாமே சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.

வரலாற்று பாரம்பரிய இயக்கமாக விளங்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை கிண்டல் செய்த ம.ம.க. தலைவர்களுக்கு தற்போது காலம் பதில் சொல்லியுள்ளது.

சமுதாயத்தில் அவர்களுக்கு இருந்த கொஞ்ச நல்ல பெயரும் தற்போது இல்லை.

அதற்கு காரணம் அவர்களின் பக்கா சுயநலம்.

பதவி ஆசை.

தாம் என்ற ஈகோ.

இத்தகைய அரசியல் வியாதிகளை விமர்சனம் செய்வதில் ஒன்றும் தவறே இல்லை என்பதுதான் என் கருத்து.

ம.ம.க. விவகாரத்தை கூர்ந்து நோக்கும்போது ஒரு உண்மை தெரிய வருகிறது.

ஒரு இயக்கத்தை இறுமாப்புடன் கிண்டல் அடிப்பவர்கள் பின்னர் காலத்திற்கு பதில் சொல்லியே தீர வேண்டும்.

இது நிஜம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: