Friday, October 16, 2015

நிறம் மாறும் பூக்கள்...!

நிறம் மாறும் பூக்கள்...!


அடிக்கடி நிறம் மாற்றிக் கொள்ளும் நபர்களை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்தித்து இருக்கலாம்.

அதனால் பல நேரங்களில் இப்படிப்பட்ட நபர்கள் ஏன்தான் நம்முடைய வாழ்க்கை பயணத்தில் வந்து செல்கிறார்களோ என நினைத்து நீங்கள் வருத்தப்பட்டு இருக்கலாம்.

குறிப்பாக உங்களது நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் உங்களிடம் அடிக்கடி நிறம் மாறி நடந்து கொண்டால் சே இவ்வளவு தானா இவர்கள் என நீங்கள் மனதிற்குள் நினைத்து வேதனை அடைந்திருக்கலாம்.

உங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை போன்று நானும் வாழ்க்கையில் பல அனுபவங்களை சந்தித்து இருக்கிறேன்.

தற்போதும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

ஆம் வசதி வாய்ப்புகளை பார்த்து பழகும் நபர்களைப் பற்றிதான் கூறுகிறேன்.

என்னுடைய நண்பர் ஒருவர் ஆரம்ப காலத்தில் சாதாரண நிலையில் இருந்தவர்.

தற்போது நம்மை விட கூடுதல் வசதி வாய்ப்பு அவருக்கு.

ஆனால் பண்பிலும் பழகும் முறையிலும் அவரிடம் நிறைய மாற்றங்கள்.

அவருடைய அந்தஸ்துக்கு நிகராக நாம் இல்லை என்ற சூப்பிரியாட்டி காம்ப்ளக்ஸ் நண்பருக்கு.

எனவே நம்முடைய நட்பை குறைத்து கொண்டு அவருடைய அந்தஸ்துக்கு தகுதியானவர்களுடன் மட்டுமே நட்பு வட்டாரத்தை அமைத்துக் கொண்டு இயங்கி வருகிறார்.

அதேநேரத்தில் நமக்கு ஏதாவது ஒரு வளர்ச்சி முன்னேற்றம் கிடைத்தால் அப்போது மட்டுமே நம்மிடம் தொடர்பு கொள்ள முயலுவார் அந்த நண்பர்.

நமது வீழ்ச்சி தோல்வி ஆகியவற்றின் போது நம்மை கண்டுகொள்ள மாட்டார்.

இதுபோன்ற நண்பர்கள் உறவினர்களை நாமும் கண்டுகொள்ள கூடாது.

வசதி வாய்ப்புகளை மட்டுமே பார்த்து உறவுமுறையை வளர்க்கும் நபர்களிடம் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இல்லையெனில் நம்முடைய வாழ்க்கையில் பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டிய சுழல் ஏற்படும்.

ஏன் அவமானம் கூட ஏற்படலாம்.

என் வாழ்க்கையில் வந்த சென்ற இதுபோன்ற நிறம் மாறும் நபர்களை நான் தற்போது முற்றிலுமாக ஒதுக்கி வைத்துவிட்டேன்.

கூடா நட்பு கேடாக முடியும் என்பது போல ஒருவரின் வசதியை மட்டும் பார்த்து பழகும் நபர்களின் நட்பை உதறி தள்ளியதால் தற்போது எனக்கு வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் இல்லை.

அவமானங்கள் இல்லை.

வாழ்க்கை அமைதியாக அதன் வழியில் சென்றுகொண்டிருக்கிறது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: