Tuesday, October 20, 2015

முகத்தை பார்க்காதீர்கள்....!

முகத்தை, மதத்தை பார்க்காதீர்கள்....! 

இதயத்தை பாருங்கள்...!!


அமெரிக்காவைச் சேர்ந்த அகமது முகமது என்ற பள்ளி மாணவன் தனது புதிய கண்டுபிடிப்பான நவீன கடிகாரத்தை தாம் படிக்கும் பள்ளிக்கு கொண்டு சென்றார்.

அதை பார்த்ததும், அதில் வெடிகுண்டு பொருத்தப்பட்டு இருப்பதாகவும் விரைவில் வெடிக்கும் என்றும் சிலர் புரளி கிளப்ப, போலீசார் வந்து அகமதை கைது செய்தனர்.

பிறகு, தீவிர விசாரணைக்கு பிறகு அகமது விடுதலை செய்யப்பட்டார்.

முஸ்லிம் சிறுவனை தீவிரவாதி என்றும் கைது செய்த அமெரிக்க போலீசாரின் இந்த நடவடிக்கை உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கண்டனங்கள் எழுந்தன.

இதையடுத்து, தமது அதிபர் மாளிகைக்கு சிறுவன் அகமதை வரவழைத்து, தவறுக்கு மன்னிப்பு கேட்டார் அதிபர் ஒபாமா.

இந்நிலையில், ஒரு மனிதனின் நிறம், முகம் மற்றும் மதத்தை வைத்து அவரை எடை போடக்கூடாது என அகமது தெரிவித்துள்ளார்.


மனிதனை இதயத்தை பார்த்து அவரை எடை போட வேண்டும்.

மனித இதயத்தை பார்த்து அவனை தீர்மானிக்க வேண்டும் என அகமது கேட்டுக் கொண்டுள்ளார்.

இதயங்களின் மூலம் பிறரை எடை போடுங்கள் என்றும் தீர்மானிங்கள் என்றும் உலக மக்களை கேட்டுக் கொண்டுள்ளார் அகமது முகமது.

அகமதின் வேண்டுகோளில் நியாயம் இருப்பது உண்மைதான்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

No comments: