Monday, October 24, 2011

லிபிய முட்டாள்கள் !

லிபியாவை 42  ஆண்டுகள் வழி நடத்திச் சென்ற மம்மர் முஹம்மது அபு மின்யார் அல் கடாஃபி,  கடந்த 20 ஆம் தேதி புரட்சிப்டை என அழைக்கப்பட்ட அமெரிக்காவின் கூலிப்படையால், மிக கொடூரமாக, சித்தரவதை செய்து கொல்லப்பட்டார்.

சாத்தான் அமெரிக்காவின் சூழ்ச்சி வலையில் சிக்கிய லிபிய மடையர்கள்,  பிசாசு இங்கிலாந்தின் ஆசைகளை நிறைவேற்றியுள்ளனர்.

42 ஆண்டுகள் லிபியாவை ஆண்ட கடாஃபி, அரேபிய நாடுகளின் ஒற்றுமைக்காவும், ஆப்பிரிக்கா நாடுகளின் ஒற்றுமைக்காகவும்  தொடர்ந்து பாடுபட்டு வந்தார்.

லிபியாவில் மேலாதிக்க சக்திகள் கோலோச்சுவதை அவர் ஒருபோதும் விரும்பவில்லை.

மேலாதிக்க மற்றும் மேலை நாடுகளின் கலாச்சாரம்,  லிபியாவில் பரவுவதை கடாஃபி அனுமதிக்கவில்லை.

அரபு மொழி ஆட்சி மொழியாக்கப்பட்டது.

வணிக நிறுவனங்களில் ஆக்கிரமிப்பு செய்து வந்த பிறமொழிகள் அகற்றப்பட்டு, அரேபிய மொழி அலங்கரிக்க தொடங்கியது கடாஃபியின் ஆட்சி காலத்தில்தான்.

அமெரிக்காவின் அடாவடித்தனங்களுக்கு கடாஃபி கொஞ்சம் கூட அடங்கவில்லை.

அதனால்தான், லிபியா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. அதற்கும் கடாஃபி கவலைப்படவில்லை.

தனது ராணுவ பலத்தை அணு ஆயுத சக்தி மூலம் அதிகரிக்க முயற்சி செய்தார்.

இது, ஓநாய் அமெரிக்காவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நாய் இங்கிலாந்திற்கு கலக்கத்தை உருவாக்கியது.

எப்படியும் கடாஃபியை வீழ்த்த வேண்டும் என இந்த இரு பிசாசுகளும் ரகசிய ஒப்பந்தங்களை செய்துக் கொண்டன.

அதற்காக சதி வலையை விரித்தன.


லிபியாவின் எண்ணெய் வளத்தை கொள்ளையடிக்க வேண்டும்.

விடுதலை என்ற பெயரில் அந்த நாட்டு மக்களை அடிமைகளாக மாற்ற வேண்டும்.

இது அமெரிக்காவின் எண்ணம்.

இதற்காக நீண்ட, நெடிய திட்டத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது அமெரிக்கா.

இங்கிலாந்துடன் கைகோர்த்து, பிரான்ஸ் உள்ளிட்ட சில மேலாதிக்க நாடுகளை இணைத்துக் கொண்டு,   விரிவான திட்டத்தை செயல்வடிவில் கொண்டு வந்தது.

இந்த சதிகளை புரிந்துக் கொள்ளாத கடாஃபி,  அமெரிக்காவின் வலையில் எப்படியோ சிக்கிக் கொண்டார்.

அணு ஆயுதங்கள் தொடர்பான ரகசியங்கள் தெரிவிக்க முன்வந்தார்.

லிபியா வளம் பெறும் என நம்பினார். நட்பு நாடுகளை உதாசீனம் செய்தார்.

இப்படிதான் அமெரிக்கா ஆசை வார்த்தை கூறியது.

இங்கிலாந்தும் அதைதான் கூறியதால், லிபியாவின் நன்மைக்காக, வளர்ச்சிக்காக தன்னை மறந்து, அணு ஆயுதங்கள் குறித்து விவரங்களை அளித்தார்.

லிபியாவில் இருந்த அணு ஆயுதங்களை ஒழிக்கப்பட்டன.

அமெரிக்காவும், இங்கிலாந்தும் திருப்தி அடைந்தன.

மீண்டும் புதிய திட்டம் தீட்டின.

 அது லிபிய அதிபர் கடாஃபியை கொல்வது என்பதுதான்.

அதற்காக நேரம் பார்த்துக் கொண்டிருந்த இந்த பிசாசு நாடுகள், எகிப்து உள்ளிட்ட ஒருசில அரபு நாடுகளில் ஏற்பட்ட உள்நாட்டு புரட்சியை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டன.

லிபிய முட்டாள்கள் சிலரை வலைவீசி தேடி, தங்களுக்கு நண்பர்களாக மாற்றிக் கொண்டன இந்த பிசாசுகள்.

ஆசை வார்த்தைகளை அள்ளி வீசின.

இதில் மயங்கிய விழுந்த லிபிய முட்டாள்கள், அதிபர் கடாஃபிக்கு எதிராக புரட்சிப்படை என்ற பெயரில் புதிய படையை உருவாக்கி போராட ஆரம்பித்தன.

அதற்கு நேட்டோ படைகள் முழு ஆதரவு அளித்தன.

இதன்மூலம், 42 ஆண்டுகள் லிபியாவை வழிநடத்திச் சென்ற மாவீரன் கடாஃபிக்கு எதிராக கலவரங்கள், வன்முறைகள் தலை விரித்தாடின.

திரிபோலி உள்ளிட்ட லிபியாவின் முக்கிய நகரங்களில் வன்முறை வெடித்தன.

ஒவ்வொரு ஆட்சியாளர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் விரோதிகள் இருப்பது மறுக்க முடியாது.

அதுபோன்று, கடாஃபிக்கும் விரோதிகள் இருக்கவே செய்தனர்.

அந்த விரோதிகள், இந்தமுறை எப்படியும் கடாஃபியை வீழ்த்தியே தீர வேண்டும் என கங்கனம் கட்டிக் கொண்டன.

கடாஃபிக்கு எதிராக மக்களை திரட்ட இந்த கயவர்கள் முயற்சி செய்து அதில் சிறிதளவு வெற்றியும் பெற்றன.

நல்ல ஆட்சியில் மக்கள் சில துன்பங்களை சகித்துக் கொள்ள வேண்டும் என்பது எழுத முடியாத ஒரு சட்டம்.

இதனை ஏற்றுக் கொள்ள லிபிய மக்களில் சிலர் விரும்பவில்லை.

சுதந்திரம் என்ற பெயரில் இஸ்லாமிய கட்டுபாடுகளை நவீன லிபிய மக்கள் சிலர் விரும்பவில்லை.

இதனால், கடாஃபிக்கு எதிராக எழுந்த கலவரத்திற்கு ஆதரவு அளித்தனர்.

அமெரிக்காவும், இங்கிலாந்தும் மற்றும் பிறநாடுகளும் லிபியாவின் எண்ணெய் வளத்தை சுருண்ட திட்டமிட்டு இருப்பதை இந்த மக்கள் புரிந்துக் கொள்ளவே இல்லை.

சூழ்ச்சியை விளங்கிக் கொள்ளவில்லை.

இதனால், எரியும் வீட்டில் எண்ணெய் ஊற்றியது போன்று, அமெரிக்காவும், இங்கிலாந்தும் செய்த சூழ்ச்சிக்கு பலியாகி, எப்படியும் கடாஃபியை கொன்ற தீருவது முடிவு கட்டிக் கொண்டு, லிபிய மடையர்கள் தங்களது கொலை வெறியை வேகப்படுத்தினர்.

அணு ஆயுதங்கள் அனைத்து ஒப்படைத்த பிறகு, தமக்கு எதிராக எழுந்த தொடர் போராட்டங்கள், கலவரங்களை கடாஃபியால் கட்டுப்படுத்த முடியவில்லை.

நேட்டோ படைகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தியதாலும், லிபிய முட்டாள்களை  கொண்டே, கடாஃபியை கொல்ல திட்டமிட்டதாலும், எப்படியும் தப்பிக்க நினைத்தார் கடாஃபி.

தனது சொந்த ஊரான சிர்டேவிற்கு பறந்தார்.

தமக்கு எதிராக புரட்சிகள், வன்முறைகள், கலவரங்கள் வெடித்தபோதும், அவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓடவில்லை.

என்னுடைய உயிர் லிபியாவில்தான் பறிபோகுமே தவிர, வெளிநாட்டிற்கு நான் தப்பி ஓட மாட்டேன் என்றார் அந்த மாவீரன்.

இப்படிப்பட்ட மாவீரனை, நேட்டோ படை என்ற கூலிப்படையின் உதவியுடன் புரட்சிப்படை என்று அறிவிக்கப்பட்ட லிபிய முட்டாள் படைகள், எப்படியோ பிடித்துவிட்டன.


42 ஆண்டுகளாக லிபியாவை வழிநடத்திச் சென்ற அந்த மாவீரனை, அமெரிக்காவிற்கு அஞ்சாத அந்த வரலாற்று நாயகனை, கொடூரமாக, சித்தரவதை செய்து கொலை செய்தன.

அந்த காட்சிகளை ராய்டரில் பார்த்தபோது, கண் கலங்கி போனது.

உலக மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இப்படியும் நடக்குமா என ஒவ்வொருவரின் உள்ளம் கேட்டுக் கொண்டது.

லிபியாவின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பாடுபட்ட ஒரு நாயகனை, லிபிய மடையர்கள், முட்டாள்கள், அமெரிக்காவின் வஞ்சத்தில் வீழ்ந்து சித்தரவதை செய்து கொலை செய்தது எவ்வளவு பெரிய போர்க்குற்றம்.

துப்பாக்கியால் சுடப்பட்டு ரத்தம் சொட்டச் சொட்ட அந்த மாவீரன் கதறுகிறார். வலியால் துடிக்கிறார்.

ஆனால், கூலிப்படைகள் அவர் மீது மீண்டும் தாக்குதல்களை அரங்கேற்றுகின்றனர்.

ஈவு, இரக்கம் இன்றி சித்தரவதை செய்கின்றனர்.

இப்படி கொடூரமாக கொலை செய்த அந்த கயவர்களை நடுத்தெருவில் நிற்க வைத்து சுட வேண்டும்.

நேட்டோ படையின் மூலம் லிபியாவில் அட்டகாசம் செய்த அமெரிக்காவையும் இங்கிலாந்தையும் போர்க்குற்றவாளிகளாக உலக நாடுகள் அறிவிக்க வேண்டும்.

42 ஆண்டுகளின் ஆட்சியின்போது, கடாஃபி ஒருசில குற்றங்களை செய்து இருக்கலாம்.

அரசியல் விரோதிகளை கொலை செய்து இருக்கலாம்.

ஆனால், லிபியாவின் வளர்ச்சிக்கு கடாஃபி ஆற்றிய பங்களிப்பை ஒருபோதும் மறக்க முடியாது.

அரபுலக ஒற்றுமைக்காகவும், ஆப்பிரிக்கா நாடுகளின் ஒற்றுமைக்காகவும் அவர் செய்த முயற்சிகளை வரலாறு மறக்காது.

அப்படிப்பட்ட வரலாற்று நாயகனை, கூலிப்படைகள், லிபிய முட்டாள்கள் கொலை செய்துள்ளனர்.


லிபியா சுதந்திரம் அடைந்து விட்டதாக இன்று பிரகடனம் செய்து உள்ளனர்.

அட, லிபிய முட்டாள்களே, இப்போதுதான் நீங்கள் அடிமைகளாக மாறியுள்ளீர்கள்.

அமெரிக்காவின், இங்கிலாந்தின், பிரான்சின் கைகூலிகளாக மாறியுள்ளீர்கள்.

சிறிது காலம் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கலாம். விடுதலை கிடைத்து விட்டதாக கூடி, ஆடிப்பாடலாம்.

ஆனால், மேற்கித்திய கலாச்சாரம் என்பது இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு எதிரானது என்பதை விரைவில் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.

அப்போது கடாஃபியின் அருமை உங்களுக்கு தெரிய வரும்.

லிபியாவின் எண்ணெய் வளம் சுரண்டப்படும்போது, கடாஃபியின் சேவை உங்கள் முன்வந்து செல்லும்.

லிபியாவின் ஸ்திரத்தன்மைக்கும், வளர்ச்சிக்கும் கடாஃபி ஆற்றிய பணிகளை நீங்கள் கட்டாயம் நினைத்து பார்க்ககூடிய நேரம் வரும்.

அப்போது, சாத்தான் அமெரிக்காவையும், பிசாசு இங்கிலாந்தையும் லிபிய முட்டாள்களாகிய நீங்கள் நீச்சயம் தூற்றுவீர்கள்.

மீண்டும் ஒருமுறை விடுதலைக்காக போராடுவீர்கள்.

அப்போது, கடாஃபி போன்ற ஒரு மாவீரன், அமெரிக்காவை தொடர்ந்து எதிர்த்த ஒரு மாவீரன் நமக்கு  கிடைக்க மாட்டானா என நீங்கள் நிச்சயம் எதிர்பார்ப்பீர்கள்.

கடைசியாக ஒரு வார்த்தை.

மாவீரன் கடாஃபி குறித்து ஊடகங்கள் பரப்பும் தவறான பொய்யான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

இவையெல்லாம் மேற்கித்திய நாடுகளின் சூழ்ச்சியால் பரப்பப்படும் செய்திகள்.

உலக மக்களை மடையர்களாக மாற்ற வெளியிடப்படும் வதந்திகள்.

இதுபோன்ற செய்திகளால், கடாஃபி போன்ற மாவீரனின் புகழ் அழிக்க முடியாது. 


எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

1 comment:

Anonymous said...

அன்புள்ள நண்பரே, கடாபியின் கருத்துகளை படித்தேன். என்னுடைய கருத்துகளை ஏற்றுக்கொள்வீர்களா? 1969ல் மன்னரை அப்புறப்படுத்தி ஆட்சியைப் பிடித்த கடாபி, அதன் பின்னர் அதிகாரத் தோரணையில் மட்டுமே செயல்பட்டார். ஒட்டு மொத்த ஆப்பிரிக்காவின் தலைவனாக தன்னைக் கற்பனை செய்துக் கொண்டு அதை உண்மையாக்க கொடுங்கோலனாக உருவெடுத்தார். எதிர்ப்பவர் எவரானாலும் அழித்தார். தூதரங்கள், விமானங்கள், ஹோட்டல்கள் போன்றவை அச்சம் உண்டாக்குவதற்காகவே அழிக்கப்பட்டன. ஆடம்பரமான உடை, பெண் அதிகாரிகள் மட்டுமே கொண்ட பாதுகாப்புப் படை, வெளிநாட்டுப் பயணங்களில் 400 பேர் கொண்ட குழு, போகும் நாடுகளில் எல்லாம் கூடாரமிட்டு தங்குவது போன்ற ஆர்ப்பாட்ட ஆடம்பரங்களினால் உலகில் பந்தாக் காட்டியவர் மம்மர் கடாபி என்பது தாம் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்.
உள்நாட்டில் எதிர்ப்பவர்களை அழிக்கும் சர்வாதிகார போக்கினால் மக்களின் வெறுப்பு உச்சகட்டத்திலிருந்ததனால், டூனிசியாவில் எழுந்த எதிர்ப்பு அலைக்கு லிபியாவும் பலியானதுதான் முதல் காரணம். இதை சரியாக பயன்படுத்திக்கொண்டு அமெரிக்காவும், இங்கிலாந்தும் வெற்றி கண்டிருக்கிறதே தவிர, அவர்களாக கடாபியை ஒழித்துக்கட்டவில்லை. இவர் ரோடுபோட்டுக் கொடுத்தார் அவர்கள் சென்றனர் அவ்வளவுதான். அன்புடன் பாலமுருகன் தொடர்புக்கு www.saffroninfo.blogspot.com