Thursday, June 23, 2016

யோகா நிகழ்ச்சியை நடத்துவதால் என்ன பயன்?

நாடு முழுவதும் மதுவிலக்கை கொண்டு வராமல் யோகா நிகழ்ச்சியை நடத்துவதால் என்ன பயன்?

நிதிஷ் குமார் கேள்வி.....!



ஜுன் 21-ந்தேதி 2-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் யோகா நிகழ்ச்சிகள் குறித்து விமர்சித்துள்ளார்.

நாடு முழுவதும் மதுவிலக்கை கொண்டு வராமல் யோகா நிகழ்ச்சியை நடத்துவதால் என்ன பயன்? என நிதிஷ் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

நான் சிறுவயது முதல் யோக பயிற்சி செய்து வருகிறேன்.

ஆனால், நான் அதை பெருமையாக சொல்லிக் கொண்டது இல்லை.

குஜராத்தில் மதுவுக்கான தடை நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே உள்ளது.

இதில் பிரதமர் மோடிக்கு எந்த பங்கும் இல்லை.

எனவே, அதற்கான பெருமை அவரை சேராது.

யோகா என்பது இயற்கையான ஒரு பயிற்சிதான்.

ஆனால், நாடு முழுவதும் மதுவுக்கு தடையை கொண்டு வராமல் யோகாவுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதில் எவ்வித பயனும் இல்லை.

மதுவுக்கு அடிமையானவர்களால் யோகப்பயிற்சியை செய்ய இயலாது.

மதுவை விற்று அரசு வருமானத்தை ஈட்டுவதை விடுத்து மாற்று வழிகளில் வருமானத்தை தேட வேண்டும்.

சர்வதேச யோகா தின நிகழ்ச்சி பொது நிகழ்ச்சி அல்ல.

அது பா.ஜ.க.வின் கட்சி சார்ந்த நிகழ்ச்சியாகவே நான் கருதுகிறேன்.

யோகா தினம் குறித்தும், மதுவிலக்கு குறித்தும் நிதிஷ் குமார் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

உண்மையை உரக்க சொன்ன நிதிஷ்குமாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

S.A.Abdul Azeez
Journalist.

No comments: