சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற 27 முஸ்லிம் இளைஞர்கள்....!
40வது இடத்தைப் பிடித்த இராம் சவுத்ரி முஸ்லிம் மாணவர்களில் முதலிடம் பிடித்து சாதனை....!!
புதுடெல்லி, ஏப்.23- ஒன்றிய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) சார்பில் நடத்தப்படும் 2024ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் தேர்வின் இறுதி நிலையான நேர்முகத் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை (22.04.2025) வெளியிடப்பட்டன. இந்த தேர்வுகளில் வெற்றி பெற்ற ஆயிரத்து ஒன்பது பேரில் மொத்தம் 27 முஸ்லிம் இளைஞர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் முதல் 30 தரவரிசைகளில் ஒரு முஸ்லிம் கூட இடம்பெறவில்லை.அதேநேரத்தில் 40வது இடத்தைப் பிடித்த இராம் சவுத்ரி முஸ்லிம் மாணவி முதலிடத்தில் உள்ளார்.
சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள்:
நாட்டில் சிவில் சர்வீசஸ் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் மற்றும் ஐஎஃப்எஸ் பதவிகளுக்கான நியமனங்களைப் பெறுவதற்காக நடத்தப்பட்ட யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுகளின் இறுதி முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன, இதில் 27 முஸ்லிம் இளைஞர்கள் உட்பட ஆயிரத்து 9 மாணவ மாணவியர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்தத் தேர்வுகளில் வெற்றி பெற்ற முதல் 10 பேரில் மூன்று பெண்கள் உள்ளனர். அதேநேரத்தில் தேசிய அளவில் முதலிடத்தில் இருப்பவர் சக்தி துபே ஆவார்.
முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு:
இந்த முறை, நாடு முழுவதும் வெற்றி பெற்ற முதல் 40 மாணவர்களில் ஒரு முஸ்லிம் மாணவர் கூட இடம்பெறவில்லை. ஒட்டுமொத்தமாக, நடப்பு ஆண்டின் முடிவுகளை மதிப்பாய்வு செய்தால், ஆயிரத்து 9 மாணவ மாணவியர்களில் 27 முஸ்லிம் இளைஞர்களின் வெற்றி, கடந்த 10 ஆண்டுகளில் மிகக் குறைந்த விகிதமாகும் என்பதால், அவை முஸ்லிம்களுக்கு ஏமாற்றமளிப்பதாகக் கருதப்படுகிறது.
கடந்த 2023 தேர்வு முடிவுகளில், 51 முஸ்லிம் இளைஞர்கள் வெற்றி பெற்றனர். அப்போது மொத்த வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 16 ஆகும். 2009 தேர்வுகளில், வெற்றி பெற்ற 791 பேரில் 31 முஸ்லிம் இளைஞர்கள் அடங்குவர். இதேபோல், 2020 யுபிஎஸ்சி தேர்வுகளில், வெற்றி பெற்ற 761 பேரில் 31 முஸ்லிம் இளைஞர்கள் அடங்குவர். 2021 தேர்வுகளில், வெற்றி பெற்ற 685 பேரில் 21 முஸ்லிம் இளைஞர்கள் அடங்குவர். 2022 தேர்வுகளில், வெற்றி பெற்ற 933 பேரில் 30 முஸ்லிம் இளைஞர்கள் அடங்குவர்.
புது தில்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் அமைந்துள்ள ரெசிடென்ஷியல் கோச்சிங் அகாடமியைச் சேர்ந்த மொத்தம் 78 மாணவ மாணவியர் யு.சி.எஸ்.சி. தேர்வுகளில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது, அதில் இதுவரை 32 பேர் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளனர். மேலும் இந்த 32 வெற்றி பெற்றவர்களில் 12 பேர் பெண்கள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற முஸ்லிம் மாணவ மாணவியரின் பட்டியல்:
இராம் சவுத்ரி – 40வது இடம்
ஃபர்கண்டா குரேஷி – 67வது இடம்
முகமது முனீப் பட் - 131வது இடம்
அதிபா அனம் அஷ்ஃபாக் அஹ்மத் – ரேங்க் 142
வாசிம் உர் ரஹ்மான் - 281வது இடம்
எம்.டி. நயாப் அஞ்சும் - தரவரிசை 292
முகமது ஹாரிஸ் மிர் – 314வது இடம்
முகமது சவுகத் அசீம் - 345வது இடம்
அலிஃப் கான் - 417வது இடம்
நஜ்மா ஏ சலாம் – ரேங்க் 442
ஷகீல் அகமது - 506வது இடம்
ஷா முகமது இம்ரான் முகமட் இர்ஃபான் - 553 வது இடம்
முகமது அஃப்தாப் ஆலம் – 560வது இடம்
மொஹ்சினா பானோ - 585வது இடம்
அபுசாலியா கான் - ரேங்க் 588
சயீத் முகமது ஆரிஃப் மொயின் – தரவரிசை 594
ஹசன் கான் - 643வது இடம்
காஞ்சி கசாலா முகமதனிஃப் - 660 வது இடம்
முஹம்மது சலா டி ஏ - ரேங்க் 711
சதாஃப் மாலிக் - ரேங்க் 742
யாசர் அகமது பாட்டி - ரேங்க் 768
ரியாஸ் வாட்சன் ஜே – தரவரிசை 791
ஜாவேத் மேவ் – 815வது இடம்
பீர்சாடா எம் உமர் - 818வது இடம்
நசீர் அஹ்மத் பிஜ்ரான் – 847வது ரேங்க்
அர்ஷத் அஜிஸ் குரேஷி – 993வது ரேங்க்
இக்பால் அகமது - 998வது இடம்
- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment