Friday, April 11, 2025

ஊடகவியலாளர்கள் பார்வையில் மணிச்சுடர்...!

 

"ஊடகவியலாளர்கள் பார்வையில்

மணிச்சுடர் 40வது ஆண்டு மற்றும் சிராஜுல் மில்லத் நூற்றாண்டு மலர்

மணிச்சுடர் 40வது ஆண்டு மற்றும் சிராஜுல் மில்லத் நூற்றாண்டு மலர் மிகச் சிறப்பாக வெளிவந்து, அனைத்து தரப்பினர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. குறிப்பாக, ஊடகவியலாளர்கள் மணிச்சுடர் 40வது ஆண்டு மற்றும் சிராஜுல் மில்லத் நூற்றாண்டு மலரை படித்து, தங்களுடைய பாராட்டுதல்களையும் கருத்துகளையும் தெரிவித்துள்ளனர். அதுகுறித்த ஒரு சிறப்புத் தொகுப்பை இப்போது காணலாம்.

அருமை...அருமை...அருமை...!

மணிச்சுடர் 40வது ஆண்டு மலரை ஆர்வத்துடன் படித்தேன். ஒவ்வொரு கட்டுரையும் அருமை. குறிப்பாக, சிராஜுல் மில்லத் அவர்கள் குறித்து எழுதப்பட்டுள்ள அனைத்து கட்டுரைகளும் ஒரு தகவல் களஞ்சியமாக இருக்கின்றன. சிறப்புச் செய்தியாளர் எஸ்..அப்துல் அஜீஸ் அவர்கள் மணிச்சுடர் நாளிதழின் 40 ஆண்டு பயணத்தை, தன்னுடைய அழகிய பாணியில் எழுதியிருப்பதற்கு என்னுடைய பாராட்டுதல்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.

                        - மைக்கல் ஜார்ஜ், மூத்த ஊடகவியலாளர்

                            சன் தொலைக்காட்சி (ஓய்வு)

சிறப்பான முயற்சி:

மணிச்சுடர் 40வது ஆண்டு சிறப்பு மலர் கிடைக்கபெற்றேன். ஒரு இஸ்லாமிய நாளிதழ் 40 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தப்படுவது மிகப்பெரிய சாதனை என்றே கூற வேண்டும். இத்தகைய சூழ்நிலையில் 40வது ஆண்டு மற்றும் சிராஜுல் மில்லத் நூற்றாண்டு மலரை வெளியிட்டு ஒரு சிறப்பான முயற்சியை மணிச்சுடர் நாளிதழ் நிர்வாகம் செய்துள்ளது. அதற்கான என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

                                  - ஸ்ரீதர், மூத்த ஊடகவியலாளர்

                                      சன் தொலைக்காட்சி

அருமையான மலர்:

மணிச்சுடர் 40வது ஆண்டு மற்றும் சிராஜுல் மில்லத் நூற்றாண்டு மலர் மிகச் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு பக்கத்திலும் அழகிய, அற்புதமான கட்டுரைகள் இடம்பெற்று இருப்பதை அறிந்து படிக்கும்போது, உண்மையிலேயே பல தகவல்களை அறிந்துகொள்ள முடிகிறது. சிறப்புச் செய்தியாளர் எஸ்..அப்துல் அஜீஸ் அவர்களின் கைவண்ணம் மலரை சிறப்புடன் கொண்டு வந்து இருப்பதை அழகிய முறையில் எடுத்துக் காட்டுகிறது. வாழ்த்துக்கள்.

                    - சுப்ரமணியன், மூத்த ஊடகவியலாளர்

                         தினமணி நாளிதழ்

நல்ல தகவல் களஞ்சியம்:

மணிச்சுடர் 40வது ஆண்டு மலரை ஒரு நல்ல தகவல் களஞ்சியம் என்றே கூறவேண்டும். பல அருமையான தகவல்களை திரட்டி, சிறப்பான முறையில் மலர் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. மலர் குழுவினர் அனைவருக்கும் எனது பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

                        - மாரியப்பன், மூத்த ஊடகவியலாளர்

                               நியூஸ் 7 தொலைக்காட்சி

மகிழ்ச்சி அளிக்கும் மலர்:

மணிச்சுடர் 40வது ஆண்டு சிறப்பு மலரை படிக்குபோது, மணிச்சுடரின் பயணம், சிராஜுல் மில்லத் .கா..அப்துஸ் ஸமது அவர்கள் மேற்கொண்டு ஊடகப் பயணம், சந்தித்த சவால்கள், உள்ளிட்ட பல அருமையான தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது. அதேபோன்று, தற்போதைய ஆசிரியர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள், மணிச்சுடர் நாளிதழை, தொடர்ந்து நடத்த மேற்கொண்டுவரும் நல்ல பணிகளையும் அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். மணிச்சுடர் சிறப்பு மலர், ஒரு மகிழ்ச்சி அளிக்கும் மலர் என்றே கூற வேண்டும்.

               - வழக்கறிஞர் முரளி, மூத்த ஊடகவியலாளர்

                   கலைஞர் தொலைக்காட்சி

மணிச்சுடரின் மணிமகுடம்:

மணிச்சுடரின் மணிமகுடமாக வெளிவந்துள்ள 40வது ஆண்டு மற்றும் சிராஜுல் மில்லத் நூற்றாண்டு மலரை வாசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அருமையாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த மலரில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் மறைந்த .கா..அப்துஸ் ஸமத் அவர்கள் குறித்தும், அவர் ஆற்றிய அற்புதமான பணிகள், ஆற்றிய உரைகள், சமுதாயத்திற்கு காட்டிய நல்வழிகள் ஆகியவை குறித்தும் நன்கு அறிந்துகொள்ள முடிந்தது. மலர் ஒரு அருமையான படைப்பு. மலரை தயாரித்த எஸ்..அப்துல் அஜீஸ் மற்றும் மலர் குழுவினர் அனைவருக்கும் என பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

                         - விஜய், ஊடகவியலாளர்

                             டி.டி.தமிழ் செய்திப்பிரிவு

அற்புதமான மலர்:

மணிச்சுடர் 40வது ஆண்டு சிறப்பு மலரை காணும் வாய்ப்பு கிட்டியது. ஊடகத்துறையில் பணிபுரியும் என்னைப் போன்ற இளம் தலைமுறையினருக்கு, இந்த மலர் ஒரு டானிக் என்றே கூற வேண்டும். பல்வேறு சவால்கள், நெருக்கடிகள் ஆகியவற்றுக்கு மத்தியில் மணிச்சுடர் நாளிதழ் தொடர்ந்து வெளிவந்துகொண்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறப்பு மலர் தயாரிப்பு ஈடுபட்ட அனைத்து தோழர்களுக்கும் எனது வாழ்த்துகளை கூறிக் கொள்கிறேன்.                                                                      

                       - வெற்றி, சிறப்புச் செய்தியாளர்

                           ராஜ் தொலைக்காட்சி

அனைவருக்கும் பாராட்டுதல்கள்:

மணிச்சுடர் 40வது ஆண்டு மலர் கிடைக்கப் பெற்றேன். மிகவும் அருமையாக இருந்தது. பல அரிய தகவல்கள் மலரில் இடம்பெற்று இருக்கின்றன. ஊடகத்துறையினருக்கு இந்த மலர் பல சிறப்பான தகவல்களை தருகிறது என்பது உண்மையாகும். ஊடகத்துறையினர் மட்டுமல்லாமல், அனைவரும் படிக்க வேண்டிய நல்ல மலர் மணிச்சுடர் 40வது ஆண்டு சிறப்பு மலர் என்றே கூற வேண்டும்.

              - ரஃபீக் அகமது, ஓய்வுபெற்ற தலைமையாசிரியர்

                    மேல்விஷாரம்

40 ஆண்டு பயணம்:

மணிச்சுடர் 40வது ஆண்டு சிறப்பு மலர் கிடைப்பெற்றேன். உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சி அளித்தது. ஒரு நாளிதழ் 40 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு மலரை வெளியிட்டு வருவதை அறியும்போது மனம் மகிழ்ச்சி அளிக்கிறது. வேலூரைச் சேர்ந்த தோழர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் அவர்கள், இந்த மலர் தயாரிப்பு சிறப்புடன் ஈடுபட்டு இருப்பதை காணும்போது உள்ளம் மகிழ்ச்சி அடைக்கிறது. அனைவருக்கும் வாழ்த்துகளுடன் பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்

         - டி.தயாளன், ஓய்வுபெற்ற சி.ஆர்.பி.எஃப். அதிகாரி,

             வேலூர்

No comments: