இந்தாண்டு ஹஜ் குத்பா பேருரையை தமிழ், உர்தூ உட்பட 34 மொழிகளில் மொழிபெயர்க்க ஏற்பாடு....!
சவுதி அரேபியா அரசு அறிவிப்பு....!!
மக்கா, ஜுன்.02- இந்தாண்டிற்கான ஹஜ் குத்பா வரும் ஜுன் 5ஆம் தேதி வியாழக்கிழமை பிற்பகல் வழங்கப்படும் போது, 34 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஒரே நேரத்தில் அனுப்பப்படும் என சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.
மக்காவின் அரபாத்தில் உள்ள நமிரா மஸ்ஜித்தியில் வழங்கப்படும் வருடாந்திர ஹஜ் குத்பாவை மொழிபெயர்ப்பதற்கான திட்டத்தை இரண்டு புனித மஸ்ஜித்களின் விவகாரங்களுக்கான பொது தலைமைத்துவம் மேற்கொள்கிறது. ஹஜ் என்பது இந்த ஆண்டின் முக்கிய இஸ்லாமிய நிகழ்வாக இருப்பதால், கோடிக்கணக்கான முஸ்லிம்கள் ஹஜ் குத்பாவைக் கேட்டு பயன் பெறுகிறார்கள். பல ஆண்டுகளாக அரபாத் குத்பா பேருரையை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து அனுப்பப்படுகிறது. கடந்த வருடங்களில் 14 மொழிகளை எட்டிய நிலையில், இந்தாண்டு 34 மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
34 மொழிகளில் குத்பா :
அதன்படி, அரபு, உர்தூ, ஆங்கிலம், பிரெஞ்சு, இந்தோனேசிய, பாரசீக (ஃபார்சி), ஹவுசா, சீனம் (மாண்டரின்), ரஷ்யன், பெங்காலி, துருக்கியம், மலாய் (பஹாசா மெலாயு), ஸ்பானிஷ், போர்த்துகீசியம், இத்தாலியன், ஜெர்மன், பிலிப்பைன்ஸ் (டகாலோக்), அம்ஹாரிக் (எத்தியோப்பியா), போஸ்னியன், இந்தி, டச்சு, தாய், மலையாளம், சுவாஹிலி, பாஷ்டோ, தமிழ், அஜர்பைஜானி, ஸ்வீடிஷ், உஸ்பெக், அல்பேனியன், ஃபுலானி (ஃபுலா), சோமாலி, ரோஹிங்கியா, யோருபா, ஆகிய மொழிகளில் குத்பாவை கேட்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குத்பா கேட்பவர்கள் www.makkahlivetv.com வழியாக நேரலையில் டியூன் செய்து தங்களுக்கு விருப்பமான மொழியில் பிரசங்கத்தைப் பின்தொடரலாம். இந்த முயற்சி பல்வேறு மொழி பின்னணியைச் சேர்ந்த கோடிக்கணக்கான முஸ்லிம்கள் ஹஜ் குத்பாவின் ஆன்மீக வழிகாட்டுதலிலிருந்து பயனடைய முடியும் என்பதை உறுதி செய்கிறது.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment