Saturday, June 21, 2025

அயதுல்லா அலி ஹொசைனி கமேனி....!

"அமெரிக்கா, இஸ்ரேலை துணிச்சலுடன் எதிர்க்கும் அயதுல்லா அலி ஹொசைனி கமேனி"

உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் இரண்டு தீவிரவாத நாடுகளான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், தற்போது ஈரான் மீது போர் தொடுத்துள்ளது. ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக பொய்யான குற்றம்சாட்டி, கடந்த ஜுன் 13ஆம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் திடீரென தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 400க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். ஈரான் நாட்டைச் சேர்ந்த பல விஞ்ஞானிகள் மற்றும் இராணுவ தளபதி கொல்லப்பட்டனர். இஸ்ரேலின் இந்த அடாவடி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த பத்து நாட்களாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இஸ்ரேலின் டெல் அவீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் பலத்த சேதம் அடைந்தன. முக்கிய இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய ஈரான், இஸ்ரேல் எதிர்பார்க்காத வகையில் அதிரடி உத்திகளை மேற்கொண்டு துல்லியமாக தாக்குதல்களை அரங்கேற்றியது. 

இதனால், இஸ்ரேல் பதறி, தனது கூட்டாளியான அமெரிக்காவிடம் கெஞ்சி, தற்போது ஈரான் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டாகச் சேர்ந்து தாக்குதல்களை நடத்தி வந்தாலும், எந்தவித மிரட்டல்களுக்கும் அஞ்சாமல், ஈரானின் உச்சத் தலைவரான  அயதுல்லா அலி ஹொசைனி கமெனி, மிகவும் துணிச்சலுடன் இந்த பயங்கரவாத நாடுகளை எதிர்க்கொண்டு வருகிறார்.  இதன் காரணமாக உலக மக்களின் ஹீரோவாக தற்போது இவர் மாறிவிட்டார் என்றே கூறலாம். பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் செய்துவரும் கொடூரச் செயல்கள் மற்றும் தாக்குதல்களை கண்டு உலகமே வேதனை அடைந்து இருந்துவரும் நிலையில், அந்த கொலைக்கார நாட்டின் மீது ஈரான் சரியான பதிலடி தாக்குதல் நடத்தி வருவதைக் கண்டு, உலக மக்கள் உண்மையில் மகிழ்ச்சி அடைந்தனர். இப்போதும் ஆனந்தம் அடைந்து வருகின்றனர். 

இத்தகைய சூழ்நிலையில் தான், அமெரிக்காவும் தற்போது ஈரான் மீது தாக்குதல் நடத்தி தொடங்கியுள்ளது. போர் தொடங்கிய 10 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், போரின் நிலைமை எப்படி போகும்? எப்படி திசை திரும்பும் என்பதை வரும் நாட்கள் சொல்லிவிடும். ஆனால், உலக மக்கள் பார்வையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மிகப்பெரிய பயங்கரவாத நாடுகள் என்றும், உலகில் அமைதியை விரும்பாத நாடுகள் என்றும் மிகத் தெளிவாக தெரிந்துவிட்டது. இப்படி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை மட்டுமல்லாமல், அதன் நட்பு நாடுகளையும் பயம் கொள்ள வைத்த, அச்சப்பட வைத்த  ஈரானின் உச்சத் தலைவரான  அயதுல்லா அலி ஹொசைனி கமெனி யார்? 80 வயதை கடந்தவிட்ட பிறகும்,கூட எந்தவித அச்சமும் இல்லாமல், அவர் ஏன் இந்த கொலைக்கார நாடுகளை துணிச்சலுடன் எதிர்க்கிறார் என்பதை நாம் அவசியம் அறிந்துகொள்ள வேண்டும். 

 அயதுல்லா அலி ஹொசைனி கமெனி :

அயதுல்லா அலி ஹொசைனி கமேனி கடந்த 1939 ஆம் ஆண்டு வடக்கு ஈரானில் உள்ள மஷாத் என்ற நகரத்தில் பிறந்தார்.  கமேனி, தனது குடும்பத்தில் பிறந்த 8 குழந்தைகளில் ஒருவர் ஆவார்.  மேலும் அவரது தந்தை ஒரு மார்க்க அறிஞர். இஸ்லாமிய கல்விப் பயின்றுக் கொண்டு இருந்த கமேனி, தனது 23 வயதில், கொமேனியின் புரட்சிகர இயக்கங்களில் ஒரு அங்கமான மாறினார்.  தனது படிப்பைத் தவிர, அவர் ஒரு மதச்சார்பற்ற எதிர்க்கட்சி அறிவுஜீவியாகவும் இருந்தார். மேலும் இசை, கவிதை மற்றும் வாசிப்பை ரசித்தார். மூன்றாம் உலகவாதத்தின் போது, ​​உலக முதலாளித்துவத்தை நிராகரிக்கும் சித்தாந்தத்தால் அவர் ஈர்க்கப்பட்டு, இந்த முதலாளித்துவ பொருளாதாரத்தை ஆதரிக்காத நாடுகளை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தார். 1960 மற்றும் 1970களில், கமேனி, அசாதி, எஸ்தேக்லால் மற்றும் ஜோம்ஹுரி-யே இஸ்லாமியி ஆகிய கொள்கைகளால் புரட்சிகரமாக்கப்பட்டார். 1979 புரட்சியின் போது அவர் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். பின்னர் 1981 முதல் 1989 வரை அதிபராக ஈரானின் இரண்டாவது உச்ச தலைவரானார் . இந்த நேரத்தில், அவர் ஈரான்-ஈராக் போரின் மூலம் நாட்டை வழிநடத்தினார்.

எப்போது ஈரானின் உச்ச தலைவரானார்?

ஈரானின் முதல் உச்சத் தலைவரான ஆயத்துல்லா ருஹோல்லா கோமெய்னி கடந்த 1989 இல் இறந்த பிறகு, ஆயத்துல்லா அலி ஹொசைனி கமேனி, ஈரானின் உச்சத் தலைவரானார். அவர் நிபுணர்கள் சபையின் உச்சத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஈரானின் உச்சத் தலைவராவதற்கு முன்பு, அவர் உச்சத் தலைவராக ஆவதற்கான தகுதிகளைக் கொண்டிருக்கவில்லை, ஏனெனில் ஈரானின் அரசியலமைப்பில், இஸ்லாமியக் குடியரசின் தலைவர் ஒரு மர்ஜா -இ-தக்லித் அல்லது ஒரு பெரிய ஆயத்துல்லாவாக இருக்க வேண்டும். இருப்பினும், அவர் ஹோஜ்ஜத் உல்-எஸ்லாமின் நடுத்தர பதவியை மட்டும் வகிக்கவில்லை. இந்தப் பிரச்சினைகளுக்கு, ஈரானிய அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் ஈரானின் உச்சத் தலைவரின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

ஆயத்துல்லா அலி ஹொசைனி கமேனி, 1989 ஆம் ஆண்டு, இஸ்லாமிய குடியரசை மாற்றினார். இஸ்லாமியப் புரட்சியின் தலைவராக தனது அதிகாரத்தை அவர் வென்றார். ஒரு உச்ச தலைவர் பதவியை அடைவதில் அவருக்கு சவால்கள் இருந்தன. ஆனால் ஈரானிய மக்களுக்காக அர்ப்பணித்த அவரது பணி மற்றும் அணுகுமுறை காரணமாக, அவர் அதை அடைய முடிந்தது.

சந்தித்த சவால்கள் :

கமேனி  தனது ஆட்சிக் காலத்தில், உள்நாட்டில் ஏற்பட்ட குழப்பங்கள் மற்றும்  சவால்களை மிகச் சிறப்பான முறையில் கையாண்டார். 1990களின் ஆரம்ப கட்டங்களில் பல உள் குழப்பங்கள் ஏற்பட்டன. ஆனால் அவரது அரசியல் பிரிவுகள் சீர்திருத்தவாதிகள் ஈரானில் மோசமான நிலைமைகளை நிலைப்படுத்துவதை உறுதி செய்தன. ஆயத்துல்லா அலி ஹொசைனி கமெனி ஈரானியர்களை ஒரு பிராந்திய சக்தியாக மாற்றினார். 1980கள் முதல் 1990 வரை, ஈரான் ஏற்கனவே ஈராக்குடன் போரில் ஈடுபட்டிருந்தது. மேலும் ஈரானுக்கு உலகளவில் பாதுகாப்பான நிலை இல்லை. ஆனால் அது ஈரானை அதன் பொருளாதாரத்தில் ஏற்றம் அடையச் செய்ததுடன், ஈரானிய நட்பு ஷியா அரசியல்வாதிகளை ஈரானை அதிகாரத்திற்குக் கொண்டு வந்தது.

தனது இளமை பருவத்தில் புரட்சிகர இயக்கத்தில் சேர்ந்த கமேனி,  ஷாவின் ரகசிய போலீசாரால் ஆறு முறை கைது செய்யப்பட்டார். 1979 புரட்சியைத் தொடர்ந்து, அவர் பதவிகளில் உயர்ந்தார். அந்த நேரத்தில் அயதுல்லா என்ற மூத்த பட்டத்தை வகிக்கவில்லை என்றாலும், அரசியலமைப்பு திருத்தத்திற்குப் பிறகு உச்சத் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார். லெபனானில் ஹெஸ்பொல்லா, ஏமனில் ஹவுத்திகள் மற்றும் ஈராக், சிரியா மற்றும் காசாவில் உள்ள மற்றவர்களை உள்ளடக்கிய ஒரு மூலோபாய கூட்டணியான "எதிர்ப்பு அச்சு" என்று அழைக்கப்படும் போராளிக் குழுக்கள் மற்றும் கூட்டணி அரசாங்கங்களை ஆதரிப்பதன் மூலம் அவர் பிராந்தியத்தில் ஈரானின் செல்வாக்கை விரிவுபடுத்தியுள்ளார்.

அமெரிக்க மிரட்டலுக்கு பணியாத கமேனி :

ஈரான் - இஸ்ரேல் இடையே போர் தொடங்கியப் பிறகு, ஜுன் 18ஆம் தேதி அமெரிக்க அதிபர், டொனால்ட் டிரம்ப், ஈரான் நிபந்தனையற்ற சரண் அடைய வேண்டும் என மிரட்டல் விடுத்தார். இல்லையெனின், ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி ஹொசைனி கமேனி கொல்லப்படுவார் என்றும் எச்சரிக்கை விடுத்தார். இந்த மிரட்டல் மற்றும் எச்சரிக்கை அனைத்தையும் தூக்கி காலில் போட்டு மிதித்துவிட்ட கமேனி, அமெரிக்க அதிபரின் கோரிக்கையை, மிரட்டலை நிராகரித்தார். மேலும்,  ஈரான் மீது தாக்குதல் நடத்தி இஸ்ரேல் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது என்று கூறினார்.

அமெரிக்கர்கள் “எந்தவொரு அமெரிக்க இராணுவத் தலையீடும் சந்தேகத்திற்கு இடமின்றி சரிசெய்ய முடியாத சேதத்துடன் இருக்கும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்” என்று அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பதிவு செய்யப்பட்ட உரையில் கமேனி கூறினார். “ஈரான், ஈரானிய தேசம் மற்றும் அதன் வரலாற்றை அறிந்த அறிவார்ந்த மக்கள் இந்த தேசத்துடன் ஒருபோதும் அச்சுறுத்தும் மொழியில் பேச மாட்டார்கள். ஏனெனில் ஈரான் தேசம் சரணடையாது.” என்று மிகமிக உறுதியாகவும் துணிவாகவும் திட்டவட்டமாகவும் அமெரிக்காவிற்கு பதிலடிகொடுத்தார். 

கமேனி, அமெரிக்காவை எச்சரித்தது அல்லது உலக சக்தியுடனான ஈரானின் இறுக்கமான உறவை அடிக்கோடிட்டுக் காட்டியது இது முதல் முறை அல்ல. 1989 இல் அயதுல்லா ருஹோல்லா கொமேனி இறந்ததிலிருந்து ஈரானின் உச்ச தலைவராக இருந்து வரும் 86 வயதான கமேனி, ஈரானிய புரட்சியின் கொள்கைகளைப் பாதுகாப்பதில் தனது வாழ்நாளின் பெரும்பகுதியைச் செலவிட்டார். எட்டு வருட ஈரான்-ஈராக் போர், 1997 ஆம் ஆண்டு அதிபர் முகமது கட்டாமியால் தொடங்கப்பட்ட சீர்திருத்த இயக்கத்தின் எழுச்சி, 1999 ஆம் ஆண்டு பொது எழுச்சிகள், சர்வதேச சமூகத்தின் பொருளாதாரத் தடைகள், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் முன்கூட்டியே இராணுவத் தாக்குதல்கள் மற்றும் உள்நாட்டு கொந்தளிப்பு ஆகியவற்றை அவரது ஆட்சி தாங்கி நின்றது. அவரது காலத்தில், "ஈரான் இஸ்லாமியக் குடியரசு ஒரு வலிமையையும் அரசியல் நம்பகத்தன்மையையும் நிரூபித்துள்ளது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: