Monday, June 2, 2025

யுனானி மருத்துவக் கல்லூரி சார்பில் மருத்துவ முகாம்.....!

 கலைஞரின் 102வது பிறந்தநாள்:

சென்னை அரசு யுனானி மருத்துவக் கல்லூரி முதுகலை பிரிவு சார்பில் 

சிறப்பு மருத்துவ முகாம்.....!

சென்னை, ஜுன்.3- மறைந்த தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 102வது பிறந்தநாளை யொட்டி, சென்னை அரும்பாக்கம் அரசு யுனானி மருத்துவக் கல்லூரி முதுகலை ஐபிடி பிரிவு சார்பில் இன்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. அப்போது கல்லூரி முதல்வர் மருத்துவர் ரிஸ்வானுர் ரஹ்மான், ஆர்.எம்.ஓ. மருத்துவர் என்.நிப்பன்னை முதுகலை ஐபிடி பிரிவு தலைவர் டாக்டர் எஸ. நிஜாமுத்தீன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில்,  மருத்துவர்கள்  வசீம், பர்வேஸ், அன்வர், அக்ரம், மதிஹா, ரசியா, அஷ்ரஃப், யாஸ்மீன், ஃபர்ஹீன், தஸ்லீம், ஆயிஷா, அசதுல்லா ஆகியோர் பங்கேற்று யுனானி மருத்துவம் குறித்து நோயாளிகளுக்கு விளக்கம் அளித்து சிகிச்சைக்கான ஆலோசனைகளயும் இலவச மருந்துகளையும் வழஙகினர். 

குறிப்பாக, யுனானி மருத்துவத்தில் அஸ்பாப்-இ-சித்தா ஜரூரியா என்ற "ஆறு அத்தியாவசிய காரணிகள் குறித்து விளக்கம் அளித்தனர். 


மனிதனின் ஆரோக்கியத்தை காக்கவும், நோயிலிருந்து பாதுகாக்கவும் ஒரு திறவுக்கோலாய் இருக்கும், வளிமண்டல காற்று (ஹவாயே முஹீத்) உணவுகள் மற்றும் பானங்கள் (மாகூல் ஒ மஷ்ரூப்) ஓய்வு மற்றும் உடல் செயல்பாடு (ஹர்கத் ஒ சுக்குன் பதனி) உளவியல் செயல்பாடு மற்றும் ஓய்வு (ஹர்கத் ஒ சுக்குன் நப்சானி) தூக்கம் மற்றும் விழிப்பு (நோம் ஒ யக்ஸா) உடலின் திரவங்களை நீக்குதல் மற்றும் தக்கவைத்தல் (இஸ்டிஃப்ராக்  ஓ இஹ்திபாஸ்) வளிமண்டல காற்று (ஹவாயே முஹீத்) ஆகியவை குறித்து நோயாளிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. 

==========================


No comments: