Sunday, February 23, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்...! (65)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்...!" 

நாள் - 65

மது அருந்தும் ஆண்களை, புகைபிடிக்கும் ஆண்களை, பெண்கள் விரும்புவது இல்லை...!

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா நண்பர்களே....

உண்மைதான்.

மதுவால் பல பாதிப்புகள் உண்டு என்பதை நாம் அனைவரும் அறிந்ததே.

மது குடிக்கம் பழக்கம் உள்ளவர்களுக்கு அவர்களது உடல்நலம் மட்டுமல்ல  மன நலமும்  பாதிப்பு அடைகிறது..

மதுவின் பாதிப்புகள் குறித்து பல பத்திரிகைகளில் அவ்வப்போது நல்ல கட்டுரைகள் வந்துக் கொண்டுதான் இருக்கின்றன.

அதை படிக்கும்போது நமக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது.

இதுபோன்ற ஒர் கட்டுரை, தினந்தந்தி நாளிதழில் கடந்த 02.02.2014 அன்று வெளிவந்தது.

ஆசையை கொல்லும் மதுவே தள்ளிப்போ என்ற தலைப்பில் வந்த அந்த கட்டுரையை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

================================================


ஆசையை கொல்லும் மதுவே தள்ளிப்போ..

மது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் திரவம்.

இது உடலை பாதிப்பதோடு நின்று விடாமல், உள்ளே இருக்கும் ஆசைகளையும் எரித்துவிடும்.

மதுவில் முழ்கி, ஆசைகள் அனைத்தையும் இழந்து செயல்பட முடியாத நிலைக்கு சென்று தாம்பத்ய வாழ்க்கையை இழந்தவர்கள் பலர் உண்டு...

மதுவில் இருக்கும் ஆல்கஹால் ரத்தத்தில் கலந்து விட்டால், உடலும், மனமும் பாதிப்பு அடைந்து, தாம்பத்ய செயல்பாட்டில் தளர்ச்சியை உருவாக்கி விடுகிறது. அப்போது, உடலுறவு ஆசை வெகுவாக குறைந்துவிடும்.

ஆண்களுக்கு செக்ஸ் உணர்ச்சி காட்சிகளின் மூலம் உருவாகும். ஒரு அழகான பெண்ணை பார்த்து விட்டால், பெரும்பாலான ஆண்களுக்கு ஆசை தோன்றும் என்று பாலியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

ஆனால், பெண்களிடம் அன்பான வார்த்தை, கனிவான தொடுதல், ஆதரவான பேச்சு மூலமே ஆசைகளை உருவாக்க முடியும்.

தாம்பத்ய உறவுக்கு உடல் அவசியம் என்றாலும், அதற்கான மெயின் சுவிட்ச் மூளையில்தான் உள்ளது. போதையை தூண்டும் ஆல்கஹாலின் முக்கிய வேலையே மூளையையும், நரம்பு மண்டலத்தையும் நேரடியாக தாக்குவதுதான்.

அதனால்தான், மது அருந்திய சிறிது நேரத்தில் உடல் கட்டுப்பாட்டை இழந்து தள்ளாடத் தொடங்குகிறது.


மூளையின் தூண்டல்தான் மனிதனை உடலுறவுக்கு தயாராக்குகிறது. தொடர்ச்சியாக மது அருந்தினால், மூளையின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்பட்டு தாம்பத்ய ஆசை துளிர் விடாமல் மரத்து, மறந்து போகும்.

மனதிற்குள் ஆசை எழுந்தாலும், உடல் தளர்ந்த நிலைக்குத்தான் செல்லும். இயங்கும் நிலைக்கு செல்லாது. அதனால், காலப்போக்கில் அவர்கள் அசையற்றவர்களாக ஆகிவிடுவார்கள்.

ஒருசிலர், மது குடித்து விட்டு உடல் உறவு கொண்டால் முழு திருப்தி கிடைக்கும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அது தவறு.

மது அருந்தி விட்டு உறவு கொள்ளும்போது, நேரம், காலம் கணக்கு எதுவும் தெரிவதில்லை. அதனால், திருப்தி அடைந்து விட்டதாக அவர்களே அவர்களை திருப்திபடுத்திக் கொள்கிறார்கள்.

முக்கியமான ஒரு விஷயம், மது நேரடியாக ஈரலை பாதிக்கிறது. ஈரலுக்கும் வீரியமான விந்து உற்பத்திக்கும் சம்பந்தம் உள்ளது. ஆண் ஹார்மோன் எனப்படும் டெஸ்டோஸ்டீரான் விதைப்பையில் உள்ள டெடிசில் இருந்து உற்பத்தியாகிறது.

இந்த ஹார்மோன் ரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் பயணம் செய்கிறது. ஈரலில் வந்து சேரும்போது, டெஸ்டோஸ்டீரானை தனியாக பிரித்து வீரியப்படுத்தி அனுப்பி வைக்கிறது. வீரியமான டெஸ்டோஸ்டீரான வீரியமான விந்து அணுக்கள் உற்பத்திக்கு காரணமாக இருக்கிறது.


தாம்பத்யத்துக்கு முக்கியமான இந்த வீரியப்படுத்தும் வேலையை செய்யும் ஈரலின் செயல்பாட்டை மதுவில் உள்ள ஆல்கஹால் கட்டுப்படுத்துகிறது.

மதுவை குடித்து கொண்டு தாம்பத்யம் செய்வதே சிறந்தது என்று கருதும் குடிமகன்களுக்கு அதனால், ஏற்படும் பாதிப்புகள் தெரிவதில்லை.

முதலில் மூளையை தாக்குவதால் உடல் உறவு தூண்டல் நாளடைவில் மறந்துவிடும்.

இரண்டாவது, ஈரல் பாதிக்கப்படுவதால் வீரியமான விந்து அணுக்கள் உற்பத்தி தடைப்பட்டு விடும்.

மேலும், ஒவ்வொரு முறை தாம்பத்யம் செய்யும்போதும், மதுவை அருந்தும் கட்டாயத்துக்கு உடம்பு பழகிவிடும்.

பின்னர், உடல் உறவு என்பது இரண்டாவது பட்சமாகி, முதல் இடத்தை மது ஆக்கிரமித்து விடும்.


குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள்கூட, பெரும்பாலும், மது அருந்திவிட்டுத்தான், அதை செய்கிறார்கள்.

மது அருந்தும் ஆண்களை, புகை பிடிக்கும் ஆண்களை பெண்கள் விரும்புவது இல்லை....

=====================================


தினந்தந்தி நாளிதழில் வந்த அருமையான கட்டுரைதான் இது...

சம்பந்தப்பட்டவர்கள் படித்து பயன் அடைந்தால் சரி....

நன்றி...தினந்தந்தி...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: