Friday, December 4, 2015

மறக்க முடியுமா மனித நேயத்தை....!

மறக்க முடியுமா மனித நேயத்தை....!


100 ஆண்டுகளில் சென்னை காணாத கனமழை மற்றும் வெள்ளத்தை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்தவர்களில் நானும் ஒருவன்.

கனமழை, வெள்ளம் காரணமாக அலுவலகப் பணிக்கு செல்ல மிகவும் சிரமம் அடைந்த ஆயிரக்கணக்கான சென்னைவாசிகளில் நானும் ஒருவன்.

மாநகரில் பேருந்துகள் சரியாக இயக்கப்படவில்லை.

உணவு விடுதிகள் செயல்படவில்லை.

சூடாக ஒரு டீ கூட சாப்பிட முடியவில்லை.

இப்படி

வெள்ளம் காரணமாக பல இக்கட்டான சூழ்நிலைகளை பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய கட்டாயம் எனக்கும்  ஏற்பட்டது.

ஊடகப் பணி என்பதால் அலுவலகத்திற்கு எப்படியும் கட்டாயம் செல்ல வேண்டிய நிலை.

இதனால், அலுவலகத்தில் தொடர்ந்து இரண்டு நாட்கள் தங்கி பணி புரிய வேண்டிய சூழ்நிலையும் உருவானது.

இப்படிப்பட்ட இக்கட்டமான சூழ்நிலையில் அலுவலகத்தில் இருந்த நண்பர்கள் ஆதரவு கரம் நீட்டியது வாழ்க்கையில் மறக்கவே முடியாது.



நிலைமையை நன்கு உணர்ந்த தலைமைச் செய்தி ஆசிரியர் மகேந்திரன் பொன்னையா, அலுவலகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் உணவுக்கான ஏற்பாடுகள்   சிறப்பாக செய்து கொடுத்தார்.

வெள்ளப்பகுதிகளில் இருக்கும் பணியாளர்கள் அலுவலகத்திற்கு வர வாகன ஏற்பாடுகளை செய்து தந்தார்.

இதேபோன்று, சக ஊழியர் ஆனந்த் வீட்டியில் இருந்து சுடசுட சாப்பாத்திகளை கொண்டு வந்து கொடுத்து, இரவு நேரப் பணிகளை சிரமம் இல்லாமல் செய்ய உதவி செய்தார்.



பகல் நேரங்களில் உடன் இருந்த தோழர் சீதாபதி, நான் பசியால் துடித்தபோது, எப்படியும் எனக்கு உணவு சாப்பிட வைப்பது என முடிவு கட்டி, பல இடங்களுக்கு அழைத்துச் சென்றார்.

ஆனால்,

அங்கு உணவு கிடைக்காததால், எந்தவித சிரமமும் அடையாமல், மீண்டும் ஒரு உணவு விடுதிக்கு அழைத்துச் சென்று,  என்னுடன் இணைந்து உணவு சாப்பிட்டது எப்படி மறக்க முடியும்.



இதேபோன்று, அலுவலகத்தில் இருந்த செய்தியாளர்கள் ஜெயக்குமார், ஜுட், சுபாஷ் பிரவு,  துணை ஆசிரியர் அய்யப்பன்,புவனா, சிவசங்கரன், சிவக்குமார், பிரபாகரன், ஆகிய தோழர்களும் அன்பு கரம் நீட்டினார்கள்.

சரியான நேரத்தில் தங்களால் அளவுக்கு சிறிய அளவில் இருந்தாலும் இவர்கள் செய்த மனித நேயத்தை நிச்சயம் வாழ்க்கையில் மறக்க முடியாது.

வெளியூர்களில் இருந்த நண்பர்கள் சிலர், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்கள்.

பத்திரமாக இருக்கிறீர்களா என்று கரிசனத்துடன் விசாரிததபோது, கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.

கனமழை, வெள்ளம் ஒவ்வொரு மனிதர்களின் உள்ளத்தில் இருக்கும் ஈகை குணத்தை, மனித நேயத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து காட்டியது.

சரியான தருணத்தில், சரியான நேரத்தில், அன்பு மழை பொழிந்து, தங்களது மனித நேயத்தை காட்டிய அனைத்து தோழர்களுக்கும் எனது நன்றிகள்.

வாழ்த்துக்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர். 

No comments: