Friday, May 8, 2015

வாழ்த்து சொல்வதற்கு மார்க்கத்தில் தடையா...?

வாழ்த்து சொல்வதற்கு மார்க்கத்தில் தடையா...?


முகநூல் நண்பர் ஒருவருக்கு அவரது பிறந்த நாளில் வாழ்த்துக்கள் தெரிவித்து நற்செய்தி அனுப்பி இருந்தேன்.

அடுத்த சில நிமிடங்களில் இஸ்லாத்தில் இதுபோன்ற செயல்களுக்கு அனுமதி இல்லை. இனி வாழ்த்துச் செய்திகளை யாருக்கும் அனுப்ப வேண்டாம் என்ற பாணியில் அந்த சகோதரர் கருத்தை பதிவு செய்திருந்தார்.

நான் அதிர்ச்சி அடைந்தேன்.

தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என அனைவருக்கும் ஸலாம் கூறுங்கள் என்பது இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அறிவுரை.

இதுவும் வாழ்த்து கூறும் வழக்கத்தின் ஒரு அங்கம் என கூறலாம்.

ஆனால் பிறந்த நாள் வாழ்த்து கூறக்கூடாது என சகோதரர் கூறுகிறார்.

அப்போ வீட்டில் புது வரவாக குழந்தை பிறக்கும் போது சம்பந்தப்பட்ட தம்பதியினருக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு வாழ்த்து கூறக் கூடாதா ?

பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பேரில் நடத்தப்படும் கும்மாளம் குத்தாட்டம் ஆகிய செயல்கள்தான் கூடாது என்பது மார்க்க அறிஞர்களின் அறிவுரை.

ஒருவர் தனது பிறந்த நாளில் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வது மார்க்கம் தடை செய்வதாக எனக்கு தெரியவில்லை.

வாழ்த்து கூறுவதற்கு தடை என வீண் குழப்பத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற நபர்களால்தான் தமிழகத்தில் இஸ்லாம் குறித்து முஸ்லீம்களுக்கும் மாற்று மத சகோதரர்கள் மத்தியில் குழப்பங்கள் தவறான புரிந்துணர்வு அதிகரித்து வருகிறது.

உண்மையிலே பிறந்த நாள் வாழ்த்து கூற இஸ்லாத்தில் அனுமதி இல்லையா ?

விவரம் தெரிந்தவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும்.

கடைசியாக ஒரு செய்தி.

என்னுடைய வாழ்த்துக்களை ஏற்க மறுத்த அந்த நபரை என் முகநூல் நண்பர்கள் பட்டியலில் இருந்து உடனடியாக நீக்கி விட்டேன்.

இதுபோன்ற குழப்பவாதிகளின் நட்பு நமக்கு எதற்கு ?

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

No comments: