வக்பு திருத்தச் சட்ட விவகாரத்தில் இஸ்லாமிய அறிஞர்களின் வழிக்காட்டுதலின் படி சமுதாயம் நடக்க வேண்டும்....!
குல்பர்காவில் நடந்த கண்ட பொதுக்கூட்டத்தில் இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய செயலாளர் எச்.அப்துல் பாசித் பேச்சு...!!
குல்பர்கா, மே.09- வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக கர்நாடகா மாநிலம் குல்பர்காவில் அகிலய இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் சார்பில் அண்மையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தேசிய செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ., எச்.அப்துல் பாசித் கலந்துகொண்டார். ஏராளமான அறிஞர் பெருமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்கள். அப்துல் பாசித் ஆற்றிய உரையில் வக்பு திருத்தச் சட்ட விவகாரத்தில் உலமா பெருமக்களின் ஆலோசனைகளை ஏற்று சமுதாயம் நடக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
அழகிய வாழ்க்கை முறை:
இஸ்லாமிய சமுதாயம் ஒரு அழகான வாழ்க்கை நெறிமுறையை மக்களுக்கு எடுத்துகாட்டுகிறது. ஒரு அரசு எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதையும்த் தருகிறது. அப்படிப்பட்ட இஸ்லாமிய சமுதாயத்தை அழிக்க தற்போது நாட்டில் மிகப்பெரிய சதி நடைபெறுகிறது. புதிய வக்பு திருத்தச் சட்டத்தில் ஒரு விதியை அமல்படுத்தி இருக்கிறார்கள். அதில், நாம் மஸ்ஜித்தை கட்டுவதற்கு இடம் கொடுக்க முடியாது என வாரியத்தில் இடம்பெறும்இந்து சகோதரர் கூற முடியும். அனாதை இல்லங்களுக்கு இடம் கொடுக்க முடியாது என கூற முடியும். கிடைக்காது. முஸ்லிம்களின் மற்றும் இந்தியாவின் வரலாற்றை சிறிதும் அறியாதவர்கள் தற்போது ஒன்றியத்தில் ஆட்சியில் அமர்ந்து இருக்கிறார்கள்.
விஜயநகரத்தை ஆட்சி செய்த இந்து மன்னர்கள் நூற்றுக்கணக்கான மஸ்ஜித்துகள் கட்டி தந்து இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை இஸ்லாமிய சமுதாயத்தின் வளர்ச்சிக்கு கொடுத்து இருக்கிறார்கள்.
வக்பு சட்டத்தின் முக்கிய நோக்கம்:
ஆனால் இவர்கள் தற்போது வக்பு திருத்தச் சட்டம் கொண்டு வந்து இருப்பதன் முக்கிய நோக்கம் சிறுபான்மையின மக்களை பெரும்பான்மையின மக்களிடம் இருந்து தனிமைப்படுத்த வேண்டும் என்பதாகும். அதற்காக மதத்தின் அடையாளத்தை அவர்கள் பிடித்து இருக்கிறார்கள்.. அமெரிக்காவில் இந்திய தொழிலாளர்களின் கை, கால்களில் விலங்குகளை மாட்டி அனுப்பி வைத்தார்கள். ஆனால் அதுகுறித்து ஒரு எதிர்ப்பு வார்த்தை கூட ஒன்றிய அரசு தெரிவிக்கவில்லை. ஆனால் 300 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவிட்டவர்களின் கல்லறைகளை தோண்டி எடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
சமுதாயத்தின் கடமை:
இப்போது நமது முக்கிய பொறுப்பையும் மற்றும் கடமையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம், உலமா பெருமக்களின் கைகளில் இருந்து அவர்களின் நல்ல வழிக்காட்டுதலின்படி செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. இத்தகைய அமைப்பின் வழிக்காட்டுதலை எற்று அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் பணியாற்றி வருகின்றன.
வக்பு என்பது இஸ்லாமிய கலாச்சாரத்தின் ஒரு அடிப்படையாகும். அதை நாம் தனியாக பிரித்து பார்க்கக் கூடாது. இந்த சட்டம் குறித்து முஸ்லிம் தலைவர்கள், உலமா பெருமக்களுடன் ஆலோசனை நடத்தியபிறகு கொண்டு வரப்படும் என அரசு அறிவித்தது. ஆனால் அவர்கள் அற்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றவில்லை.
இதற்கு முன்பு சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என பிரிச்சினையை கொண்டு வந்து இந்து முஸ்லிம் பிரிவினை சண்டையை உருவாக்கி இருக்கிறார்கள். இதை நாடு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. நாம் தற்போது நமது உரிமையை காப்பாற்ற வீதிகளில் இறங்கி போராடிக் கொண்டு இருக்கிறோம். நாம் அரசிடம் கேட்பது பிச்சை இல்லை. உரிமைகளை தான் கேட்கிறோம். நாம் உரிமைகளை பெற்றே தீருவோம்.
வாக்குரிமையை மூலம் மாற்ற முடியும்:
வாக்குகளின் மூலம் மத்தியில் மக்கள் அவர்களை அரசில் உட்கார வைத்து இருக்கிறார்கள். அதேபோன்று வாக்குகளின் மூலம் கூட அவர்களை ஆட்சியில் இருந்து அகற்ற முடியம். நாம் எப்போது ஏக இறைவனுக்கு பயந்து அவனது கட்டளையை ஏற்று நடக்க வேண்டும். ஷரியத்தின் படி வாழ கற்றக் கொள்ள வேண்டும். பல்வேறு பிரச்சினைகளை அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் நீதிமன்றங்களை நாடி நல்ல தீர்வை பெற்று இருக்கிறது. எனவே உலமா பெருமக்களின் ஆலோசனை ஏற்று சமுதாயம் இனி செயல்பட வேண்டும். மஸ்ஜித்துகளையும் மஹல்லா ஜமாஅத்களையும் நாம் வலிமைப்படுத்த வேண்டும். உலமா பெருமக்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்படாமல் இருந்தால், நமக்கு நல்ல வழி நிச்சயம் கிடைக்காது. எனவே இஸ்லாமிய அறிஞர் பெருமக்களின் வழிக்காட்டுதலை ஏற்று நாம் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அப்துல் பாசித் பேசினார்.
- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment