Sunday, November 10, 2013

சொன்னார்கள்........!




தேர்தல் கருத்துக் கணிப்பு விவகாரத்தில் பிஜேபி இரட்டை வேடம் போடுகிறது. கடந்த 2004ஆம் ஆண்டில், தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த பிஜேபி, தற்போது திடீரென தனது நிலையை மாற்றிவிட்டது ஏன் ?

                                                                          - மத்திய அமைச்சர் கபில்சிபல்


நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, காங்கிரஸ், பிஜேபி ஆகிய இரண்டு கட்சிகளின் ஆதரவு இல்லாமல் மத்தியில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது. மூன்றாவது அணி ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை.

                                                       - பிஜேபி மூத்த தலைவர் எல்.கே.அத்வானி


நாட்டில் சாதாரண மக்களுக்கு உரிய நீதி கிடைப்பது இன்னும் கனவாகவே உள்ளது. நீதித்துறை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பல முயற்சிகள் மேற்கொண்ட பிறகும், பெரும்பாலான மக்கள் நீதித்துறையின் மீது இன்னும் அவநம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

                                                   - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம்


ஆட்சியில் இருந்தபோது, மத்திய அரசின் மாதிரிப் பள்ளிகள் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கிவிட்டு, தற்போது அரசியல் ஆதாயத்துக்காக மாநில சுயாட்சி குறித்து திமுக தலைவர் கருணாநிதி பேசுகிறார்.

                                                                                  - முதலமைச்சர் ஜெயலலிதா


தேர்தல் பிரச்சார மேடைகளில் தம்முடையை கருத்துக்களையும், சிந்தனைகளையும் மட்டுமே பேசும் நரேந்திர மோடி, நாட்டிலுள்ள பிரச்சினைகள்  குறித்து எதுவும்  பேசுவதில்லை.

                                                                              - மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்



இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு காங்கிரஸ் கட்சியே காரணம். காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்திய எல்லைப்பகுதியில் சீனா அத்துமீறிய ஆக்கிரமிப்பு செய்தது.

                                                                 - குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி



தமிழர்கள் மீதான தொடர் அடக்கு முறையே, பிரதமர் மன்மோகன் சிங், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டிற்கு செல்லாததற்கு முக்கிய காரணம்.
                                                                      - மத்திய அமைச்சர் நாராயணசாமி


செஸ் விளையாட்டுப் போட்டிக்கு மட்டுமல்லாமல், தமிழகத்தில் விளையாட்டு கலையை வளர்க்க மிகுந்த அக்கறையோடு பல்வேறு பணிகளை திமுக ஆட்சியில் நிறைவேற்றினோம்.

                                                                            - திமுக தலைவர் கருணாநிதி


மதசார்பற்ற கொள்கை குறித்து தவறான பிரச்சாரம் செய்து மக்களை முட்டாள்களாக மாற்ற பிஜேபி முயற்சி செய்து வருகிறது.

                                                                                  - பிரதமர் மன்மோகன் சிங்


தொகுப்பு: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=======================

No comments: