Thursday, April 16, 2015

பயம்....!

பயம்....!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது விரைவில் தீர்ப்பு வரவிருக்கிறது.

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் ஜெயலலிதா விடுதலை ஆகி விட்டால் அவர் மீண்டும் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்பது உறுதி.

ஏன் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அவர் தலைமையிலான அதிமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வாய்ப்புகள் அதிகம் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

தற்போது திமுக தரப்பு செய்து வரும் சில செயல்களின் மூலம் இப்படி நடக்க வாய்ப்புகள் அதிகம் என்றே தோன்றுகிறது.

அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்க வேண்டும்.

கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை இடம் மாற்றம் செய்யக்கூடாது என திமுக தரப்பு போர்க்கொடி தூக்கி இருப்பதன் மூலம் எங்கே ஜெயலலிதா விடுதலை ஆகிவிடுவாரோ என்ற பயம் திமுகவிற்கு இருப்பது தெளிவாக தெரிகிறது.

ஜெயலலிதா விடுதலை ஆகிவிட்டால் சட்டப்பேரவை தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது.

மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைக்கும் கனவு கலைந்து போகும்.

எனவேதான் ஜெயலலிதா வழக்கில் திமுக மிகவும் அக்கறையுடன் இறங்கியுள்ளது.

ஆனால் திமுக தரப்பு எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கையும் ஜெயலலிதாவுக்கு சாதகமாக அமைந்து வருகிறது.

மக்களிடையே ஜெயலலிதாவுக்கு அனுதாபத்தை ஏற்படுத்தி வருகிறது.
இப்படிதான் தமிழக தேனீர் கடைகளில் ஓட்டு போடும் மக்கள் விவாதங்களை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் நடத்தும் இந்த விவாதங்களை கூர்ந்து கவனித்தால் நான் சொல்வது சரி என தெரியவரும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

No comments: