Tuesday, April 28, 2015

ஒரு கன்றாவி...!!

ஓ.காதல் கண்மணி...!

ஒரு கன்றாவி...!!


பின்னே என்னங்க.

காதல் திருமணம் இவையெல்லாம் எவ்வளவு புனிதமானது.

அதை கொச்சைப்படுத்தும் வகையில் இந்த அறிவுஜீவி மணிரத்னம் படம் எடுத்து இளைய சமுதாயம் தவறான பாதைக்கு செல்ல வழி காட்டி இருக்கிறார்.

காதல் பண்ணு. ஆனால் கல்யாணம் பண்ணிக்காதே.
நல்லா ஜல்சா பண்ணு. பின்னர் விரும்பினால் கல்யாணம் பண்ணிக்கோ. இல்லே பண்ணிக்காமே அப்படியே ஜல்சாவை கன்டிநியூ பண்ணு என்ற புதிய தத்துவத்தை படத்தில் சொல்லி இளைஞர்களை அழிவுப் பாதைக்கு அழைத்து செல்கிறார் மணிரத்னம்.

இந்திய கலாச்சாரம் ஏன் மனித கலாச்சாரம் பண்பாடு நாகரிகம் ஆகியவற்றை உடைத்து சின்னாபின்னம் செய்யும் வகையில் இந்த படத்தின் மூலம் கலாச்சார படையெடுப்பை நடத்தியுள்ளார் இயக்குநர்.

அத்துடன் ஐ.டி. உள்ளிட்ட பெரு நிறுவனங்களில் பணியாற்றி கை நிறைய சம்பளம் வாங்கும் இளைஞர்கள் அனைவருமே பொம்பளே பொறுக்கிகள். இப்படிதான் அவர்களின் வாழ்க்கை இருப்பதாக படத்தில் மறைமுகமாக சொல்கிறார் மணிரத்னம்.

வழக்கம் போல இந்த படத்திலும் ரயில் பேருந்து டாக்ஸியில் பயணித்து காதல் கும்மாளம் அடிக்கும் நாயகன் நாயகிகள் மழையில் நனைந்தும் ஆடுகின்றனர்.

திருமண உறவையே சீர்குலைத்து தமிழர் பண்பாடு கலாச்சாரம் ஆகியவற்றிற்கு வேட்டு வைக்கும் இந்த படத்தை எதிர்த்து ஒரு தமிழர் அமைப்பு கூட குரல் கொடுக்காமல் மவுனம் சாதிப்பது ஆச்சரியம் அளிப்பது மட்டுமல்ல வேதனையும் தருகிறது.

ஓ.காதல் கண்மணி... ஒரு கன்றாவி.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

No comments: