Thursday, January 2, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (36)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!"

நாள் :   36



புத்தாண்டையொட்டி டாஸ்மாக் கடைகளில்ரூ.270 கோடிக்கு மதுபானம் விற்பனை....!

அயல் நாட்டு மதுபானங்கள் ரூ.40 லட்சத்திற்கு விற்று தீர்ந்தன.....!!

என்ன நண்பர்களே அதிர்ச்சியாக இருக்கிறது....

நிச்சயமாக உங்களுக்கு எந்த அதிர்ச்சியும் இருக்காது....

காரணம் இது வழக்கமாக நடைபெறும் ஒன்றுதான் என்பது உங்கள் எண்ணம்..

உண்மைதான்.

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தன்று மதுவின் விற்பனை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

அதற்கு இந்தாண்டும் விதிவிலக்கு அல்ல.

புத்தாண்டையொட்டி 2 நாட்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ரூ.270 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 6 ஆயிரத்து 800 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இந்த கடைகளில் திருவிழா காலங்களில் விற்பனை பல மடங்கு அதிகரித்து வருகிறது.

தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை காலங்களில் மதுபானம் விற்பனை அமோகமாக இருக்கும்.


அதுபோல இந்த புத்தாண்டையொட்டி டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

இதனால், மதுவிற்பனை அமோகமாக நடைபெற்றது. பிராந்தி, விஸ்கி, ரம் போன்ற மது வகைகள் விற்பனையாகி உள்ளன. கிங் பிஷர், புல்லட் போன்ற பீர் வகைகளும் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டன.

குவாட்டர் என்றால் ஒரு பெட்டிக்கு 48 பாட்டில்களும், ‘‘ஆப்’’ என்றால் ஒரு பெட்டிக்கு 24 பாட்டில்களும், ‘‘புல்’’ என்றால் ஒரு பெட்டிக்கு 12 பாட்டில்களும் இருக்கும். பீர் பாட்டிலை பொறுத்தவரை 650 மில்லியாக இருந்தால் ஒரு பெட்டியில் 12 பாட்டில்களும், 325 மில்லியாக இருந்தால் (மினி பீர்) ஒரு பெட்டிக்கு 24 பாட்டில்களும் இருக்கும்.


2013-புத்தாண்டுக்கு முந்தைய நாள் ரூ.95 கோடிக்கு மது விற்பனை ஆனது. இந்த புத்தாண்டு முதல் நாள் ரூ.150 கோடி மதிப்பில் மதுபானம் விற்பனையாகியுள்ளது.

கடந்த ஆண்டு புத்தாண்டு அன்று ரூ.85 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆண்டு ரூ.120 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது. இதன்படி கடந்த 2 நாட்கள் மட்டும் ரூ.270 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி இருக்கிறது.

மாநிலம் முழுவதும் விற்பனை நிலவரத்தை பார்க்கும் போது சென்னை முதலிடம் பிடித்து உள்ளது.

தொடர்ந்து கோவை, மதுரை, திருச்சி, சேலம் மாநகரங்களில் மதுபாட்டில் அதிகளவில் விற்பனையானது. கடைவாரியாக பார்க்கும் போது குறைந்த கடைகளின் எண்ணிக்கைகளை கொண்ட நாமக்கல் மாவட்டத்தில் அதிகளவு மதுபாட்டில்கள் விற்பனையானது.


சென்னையை பொறுத்தமட்டில் திருவல்லிக்கேணியில் உள்ள 2 கடைகளில் தான் அதிகளவு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இங்கு நீண்ட கியூ வரிசையில் நின்று வாடிக்கையாளர்கள் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

அதேபோல் சென்னையில் உள்ள தனியார் ஷாப்பிங் மால்களில் அயல்நாட்டு மதுபானங்கள் விற்பதற்காக தொடங்கப்பட்டு உள்ள 4 எலைட் கடைகளிலும் ரூ.40 லட்சம் மதிப்பில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டன.

270 கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.


இதன்மூலம், அப்பாவி, நடுத்தர, ஏழை மக்களின் பணம் வீணாக செலவழிக்கப்பட்டுள்ளது.

பல குடும்பங்கள் வீதிக்கு வந்துள்ளன. பலரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இப்படிதான் நாம் நினைக்க வேண்டும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: