Sunday, July 30, 2023

மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு....!

          கேரளாவில் மத நல்லிணக்கத்திற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு....!

நாட்டில் மதங்கள் இடையே நீடிக்கும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க பாசிச சக்திகள் முயற்சிகள் செய்துவரும் நிலையில், தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இந்து-முஸ்லிம் மக்களிடையே நல்ல புரிதல் இருந்து வருகிறது. அதற்கு பல எடுத்துக்காட்டுகள் இருந்து வருகின்றன. 

கேரளாவில் புதிய முயற்சி:

கேரள மாநிலத்தில் இந்து-முஸ்லிம்-கிறிஸ்துவ மக்கள் மத்தியில் நல்ல சகோதரத்துவ இணைக்கம் இருந்து வருகிறது. இந்நிலையில், மத நல்லிணக்கத்தை ஒரு புதிய நிலைக்கு கொண்டு செல்லும் வகையில், கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொல்லத்தில் உள்ள எலவரம்குழி என்ற கிராமத்தில் உள்ள இரண்டு சின்னங்களுடன் கூடிய உண்டியல்  ஒரே மேடையில் வெவ்வேறு மதங்களின் அம்சங்களைத் தாங்கி நிற்கின்றன. 

ஜும்ஆ மஸ்ஜித் மற்றும் மகாதேவா ஆலயம், 250 மீட்டர் இடைவெளியில், பரஸ்பர மரியாதை மற்றும் சகோதரத்துவத்தின் நீண்ட வரலாற்றைப் பகிர்ந்து கொள்கின்றன, எந்த பிரச்சாரமும் முறியாத பிணைப்பு. சின்னங்களை ஆங்காங்கே நிறுவுவது என்ற முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டு, ஆறு மாதங்களுக்கு முன் நடைமுறைக்கு வந்தது. மசூதி மற்றும் கோயில் இரண்டிற்கும் தனித்தனி சின்னங்கள் இருந்த நிலையில், ஒரு முன்மாதிரியாக இருக்கும் வகையில் புதியவற்றைக் கட்டுவதற்காக இரண்டையும் இடித்து . கட்டுமானத்திற்காக ஒரு பொதுவான குழுவை அங்குள்ள மக்கள் அமைத்தார்கள்.  இதற்காக ஷாஜி சண்முகம் என்பவர் நிலத்தை நன்கொடையாக வழங்கினார். சொத்துப் பத்திரங்களின்படி, நிலம் இப்போது மசூதிக்கும் கோவிலுக்கும் கூட்டாகச் சொந்தமாகியுள்ளது. இந்த இரண்டு சின்னங்களுக்கான உண்டியலில்  பக்தர்கள் காணிக்கை செலுத்துகிறார்கள். 

இணக்க நுழைவாயில்:

இரண்டு மத ஸ்தலங்களும் இணைந்து செயல்படுவது இது முதல் முறை அல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு முன், இரண்டு வழிபாட்டுத் தலங்களுக்கும் செல்லும் பிரதான சாலையில் பொதுவான வளைவு அமைக்கப்பட்டது. இணக்க நுழைவாயில் என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு இரு மதங்களுக்கும் சொந்தமான வசனங்கள் மற்றும் வேதங்களைக் எடுத்துக் காட்டுகிறது. எலவரம்குழி கேரளாவின் ஒரு உள் பகுதி, ஆனால் அது மிகவும் வலுவான மதச்சார்பற்ற தன்மையைக் கொண்டுள்ளது. ஈத் ஊர்வலத்தின்போது முஸ்லிம்களுக்கு  முதலில் இனிப்புகளை வழங்குவது கோவில் கமிட்டிதான் என்று அங்குள்ள முஸ்லிம்கள் பெருமையுடன் கூறுகின்றனர். 

ஆண்டு தொடக்கத்தில் கோயில் திருவிழா நடைபெறும் போது, மசூதியின் உறுப்பினர்கள் விழாக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர். திருவிழாவின் போது மஸ்ஜித் கமிட்டி கோவிலில் அன்னதானம் வழங்குகிறது. அமைதியான சகவாழ்வு மற்றும் மத நல்லிணக்கத்தின் தேவை தற்போதைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமானது. எதிர்காலத்தில் இதுபோன்ற பல முயற்சிகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்று கோவில் நிர்வாகி பணிக்கர்  கூறுகிறார்.

முஸ்லிம் வீடுகளில் தயாரிப்பு:

இதேபோன்று சபரிமலை யாத்ரீகர்களுக்கு முஸ்லீம் வீடுகளில் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. எலவரம்குழியில் வசிக்கும் அயூப் கான் இதுகுறித்து கூறும்போது, எங்களில் பெரும்பாலானோர் இங்கு பிறந்து வளர்ந்தவர்கள், வகுப்புவாத தடைகளை நாங்கள் நம்புவதில்லை. கட்டுமானத்திற்கு நிதியுதவி செய்ய சிலர் முன் வந்தாலும், பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. இது பொதுக் கருத்தை அறியும் ஒரு வழியாகும். ஒரு நபர் கூட அதை எதிர்க்கவில்லை மற்றும் அனைத்து குடியிருப்பாளர்களும் பங்களித்தனர், என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். 

சின்னம் தயாரித்த சிற்பி:

மத நல்லிணக்க சின்னங்களை தயாரிக்க கதகளியின் வீடான கொட்டாரகராவில் இருந்து ஒரு சிற்பி பணியமர்த்தப்பட்டார். இரு சமூகத்தினரிடமிருந்தும் கட்டிடக்கலை கூறுகள் இருப்பதை உறுதி செய்வதற்காக, வடிவமைப்பு மற்றும் வண்ணத் திட்டம் பக்தர்களுடன் கலந்தாலோசித்து சரி செய்யப்பட்டது. இது ஒரு பெரிய விஷயமாக நினைக்கவில்லை என்று கூறும் இந்து சமுகத்தைச் சேர்ந்த ராஜாமணி,  தினமும் காலையில் கோயிலுக்குப் போவேன். தற்போது ஒரே வித்தியாசம் என்னவென்றால், நான் காணிக்கை செலுத்தும்போதெல்லாம் இரண்டு காசுகளை எடுத்துச் செல்வதுதான் என்று பெருமையுடன் கூறுகிறார். 

நன்றி: தி இந்து நாளிதழ் - தமிழில் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: