Monday, July 1, 2024

உரை.....!

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் 27வது ஆண்டு மாநாடு...!

இ.யூ.முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் பங்கேற்று உரை....!

கொழும்பு, ஜுலை.01-ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 27வது ஆண்டு மாநாடு, கொழும்புவில் ஜுன் 30ஆம் தேதி நடைபெற்றது. இந்த நாட்டில் சிறப்பு விருந்திரான இ.யூ.முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூப்பகர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், கடந்த 1995ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தொடங்கப்பட்டது. 34 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்ட இந்த போரம் தற்போது, ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் இதுவரை பல மாநாடுகள், ஊடகக் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு, சிறப்பான ஊடகப் பணிகள் ஆற்றப்பட்டு இருப்பதை அறியும்போது உண்மையில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. 

ஊடக அறம்:

பொதுவாக ஊடகங்களின் அறம் என்னவென்றால், அவை உண்மைச் செய்திகளை கொண்டு வர வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஊடகங்கள் இயங்க வேண்டும். அதுதான் ஊடக அறமாகும். குறிப்பாக முஸ்லிம் மீடியாவின் பணிகள் மிகவும் வியப்பு அளிக்கும் வகையில் இருக்க வேண்டும். அனைவருக்கும் பயன் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும். 

இஸ்லாம் என்று சொன்னாலே, அமைதி, சகோதரத்துவம்  என்பது தான் இஸ்லாமாகும். ஆனால், இன்று இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகவும், அன்புக்கு முரண்பட்டவர்களாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்படுவதை நாம் பார்க்க முடிகிறது. 

ஸ்ரீலங்காக முஸ்லிம் மீடியா போரம்:

இந்த காலக்கட்டத்தில் தான், முஸ்லிம் மீடியாவின் பத்திரிக்கைப் பணி எப்படி இருக்க வேண்டும் என்பதை, ஸ்ரீலங்காக முஸ்லிம் மீடியா போரம் வடிவமைத்து நன்கு செயல்பட்டு வருகிறது.  இஸ்லாமிய மார்க்கத்தின் உண்மையான செய்திகளை எடுத்துச் சொல்லக் கூடியவர்களாக தான் இஸ்லாமிய ஊடகங்கள் இருக்க வேண்டும். இஸ்லாம் என்பது எந்த மதத்திற்கும் முரண்பட்ட மார்க்கம் இல்லை. இஸ்லாமிய மார்க்கம் யாரையும் அழிக்க வேண்டும் என்று கூறும் மார்க்கம் இல்லை. இஸ்லாம் மார்க்கம் என்பது எல்லா மதங்களின் நம்பிக்கையை கேலி செய்யும் மார்க்கம் இல்லை. அதன்படி, உண்மையான செய்திகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வது தான் இஸ்லாமிய செய்தித்தாளின் பணியாகும்.

தீவிரவாதத்திற்கு இடமில்லை:

இஸ்லாமிய மார்க்கத்தில் தீவிரவாதிற்கு இடமில்லை. இஸ்லாம் அமைதி, சகோதரத்துவம் கொண்டது. இஸ்லாமிய மார்க்கம் ஒரு அழகிய வாழ்க்கை மாடலாகும். நடுநிலையான மார்க்கமாகும். தீவிரவாத போக்கிற்கு இஸ்லாத்தில் இடமில்லை. பல்வேறு மதங்கள், சாதிகள் வாழக்கூடி மக்கள் மத்தியில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. இந்த முரண்பாடுகளை ஓரமாக வைத்துவிட்டு, உடன்பாடுகளுடன் வாழ வேண்டும். நமக்கும் கிறிஸ்வது மதத்திற்கும் உள்ள உடன்பாடு என்ன, இந்து மதத்ற்கு உள்ள உடன்பாடு என்ன ஆகியவற்றை நாம் எடுத்துச் சொல்ல வேண்டும். உடன்பாடுகளோடு வாழ்ந்தால் தான் நாம் அமைதியாக வாழ முடியும். பிரச்சினைகளை குறித்து பேசிக் கொண்டே இருந்தால், நாம் அமைதியாக வாழ முடியாது. இதை நாம் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். 

முஸ்லிம் மீடியா போரத்தின் மூலம் பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டு இருப்பதை அறியும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஊடகத்துறை தொடர்பான கல்வி பெற இந்த அமைப்பு துணை நின்று இருக்கிறது. 34 உறுப்பினர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு தற்போது 950 உறுப்பினர்களுடன் இருக்கிறது. 

மணிச்சுடரின் ஊடகப் பணி:

நாங்கள் சார்ந்த இருக்கும் இ.யூ.முஸ்லிம் லீக்  மற்றும் அதன் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் மிகப்பெரிய ஊடகப்பணிளை செய்து இருப்பதையும் செய்துக் கொண்டு இருப்பதையும் அறியும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது. மணிச்சுடர் நாளிதழ் மூலம் கடந்த 40 ஆண்டு காலமாக நாம் மிகச் சிறந்த முறையில் ஊடகப் பணி செய்துக் கொண்டிருக்கிறோம். இலங்கையில் இருந்து வரும் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரையும் தமிழகத்தில் உள்ள உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் ஊடக நிறுவன்ங்கள் ஊடகவியலாளர் அனைவரையும் சதிந்கும் வாய்ப்பை  நாம் உருவாக்கி தருகிறோம். 

பத்திரிகை நடத்துவது என்பது சாதாரண விஷயமில்லை. நெருப்பு ஆற்றில் நீந்தி வருவது போன்றது. அதுவும் நாளிதழ் நடத்துவது என்பது தினமும் பிரசவம் செய்வது போன்றவது தான். அப்படிப்பட்ட ஊடகப் பணிகளில் உங்களோடு, இணைந்து நாங்களும் பணியாற்றிவது நினைக்கும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது. 

அமைதி செய்தி:

இந்த பூமியில் வந்துபேசுவது எங்களுக்கு சந்தோஷம் அளிக்கிறது. இலங்கை என்பது இந்தியாவோடு ஆசிய நாடுகளோடு இணைந்து செயல்படும் நாடு. இஸ்லாமிய நம்பிக்கையின் படி, இஸ்லாத்தின் முதல் தூதர் ஆதம் (அலை)அவர்கள் வந்த இடம் இந்த பகுதிதான். இந்த பகுதியில் தான் அமைதியை நிலைநாட்ட வந்தார்கள். இதை எல்லா மதத்தைச் சேர்ந்தவர்கள் அறிவார்கள். இந்த அமைதி செய்தியை நாம் அனைவரிமுடம் கொண்டுச் சென்று சேர்க்க வேண்டும். முஸ்லிம் மீடியாக்களில் நாம் பணியாற்றும்போது, முஸ்லிம் சார்ந்த பிரச்சினைகளை அனைத்து ஊடகங்கள் வெளியிடும் வகையில் நாம் செயல்பட வேண்டும். முஸ்லிம்களின் உண்மைச் செய்தியை கொண்டு வர வேண்டும். முஸ்லிம்களின் உண்மை நிலையை ஆட்சியாளர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இதைத் தான் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் அழகாக சொன்னார்கள். சிறுபான்மை சமுதாயமாகிய நாம் உரிமைகளுக்காக போராட வேண்டும். சமுதாயத்தின் குரலை ஆட்சியாளர்களுக்கு எடுத்துக் கூறுவது நமது கடமை. 

நான் தமிழக சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, சமுதாயத்தின் பிரச்சனைகள் குறித்து ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று இருக்கிறேன். அந்த பணியைதான் தற்போது முஸ்லிம் மீடியா போராம் செய்துகொண்டிருக்கிறது. அந்த வகையில் ஒரே பாதையில் ஒரே நோக்கத்தின் அடிப்படையில் நாம் பயணித்துக் கொண்டு இருக்கிறோம். நாம் முஸ்லிம்களாக இருக்கும்போதும் நம்முடைய மொழியை நம்முடன் இருந்து பிரிக்க முடியாது. 

சூழ்ச்சிகளை வீழ்த்த வேண்டும்:

நம்மை பிரிக்க, அன்னியப்படுத்த பல்வேறு சூழ்ச்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. நாம் அனைவரோடும் இணைக்கமாக வாழ வேண்டும். நாம் பின்பற்றும் மார்க்கம் இஸ்லாமாக இருந்தாலும், நாம் அனைவரிடமும் இணைக்கமாக வாழ வேண்டும். பல்வெறு நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்ததாலும், இஸ்லாம் என்ற அடையளத்துடன் இருக்க வேண்டும். இணைந்து வாழ்வதைத் தான் இஸ்லாம் விரும்புகிறது. இஸ்லாம் சகோரத்துவம், சமாதானத்தை விரும்புகிறது. இந்த பணிகளில் முஸ்லிம் மீடியா போரம் ஈடுபட்டுள்ளது. உங்களோடு இணைந்து பணியாற்றுவதில் மிக்க மகிழ்ச்சி  அடைகிறோம். 

இந்த போரத்தின் தலைவராக இருக்கும் என்.எம்.அமீன் அவர்கள், இலங்கைக்கு மட்டும் முஸ்லிம் மீடியா போராத்தின் தலைவராக இருக்கவில்லை. தமிழ்நாட்டிற்கு வரும்போது எங்களில் ஒருவராக இருந்து பணியாற்றுகிறார். அவருடன் இணைந்து பணியாற்றுவதில் எங்களும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. முஸ்லிம் மீடியா பாரத்தின் வரலாற்று அழகிய முறையில் எடுத்துக் கூற வேண்டும். அந்த வரலாறு மூலம் இளம் தலைமுறையினர் பயன் அடைவார்கள். எங்கள் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதின் அவர்கள் பெற்ற அனுபவத்தை எங்களுடைய பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நாங்கள் பயன்படுத்திக் கொள்கிறோம். 

அமைதியை விரும்பும் மக்கள்:

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு பிரச்சினைகள் இருந்து வருகின்றன. இந்திய மீடியாக்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அப்படி இருந்தும் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்ட இடத்தில் பா.ஜ.க. வெற்றி பெற முடியவில்லை. அங்கு தோல்வி அடைந்தது.  ராமநாதபுரம் தொகுதியில் இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனியை வீழ்த்த சூழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. ஆனால் அவை வெற்றி பெறவில்லை. முன்னாள் முதலமைச்சரை மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் நவாஸ் கனி வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன்மூலம் நாட்டில், மக்கள் அமைதியை விரும்புகிறார்கள் என்பது உறுதியாக தெரியவருகிறது. 

தேசிய ஒருமைப்பாடு, சமய நல்லிணக்கம் ஆகியவற்றில் உறுதியாக இருக்கும் முஸ்லிம்கள், சமுதாயத்தின் காலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும்.  தங்களது அடையங்கள் மாற்ற அனுமதிக்க கூடாது. அந்த வகையில் முஸ்லிம் ஊடகங்களும் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு கேஏ.எம்.முஹம்மது அபூபக்கர் பேசினார்.

மாநாட்டில் இ.யூ.முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்ராஹிம் மக்கி, முஸ்லிம் லீக் யூத் லீக் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் எம்.நயினார் முஹம்மது கடாபி, ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன், பொருளாளர் ஜெஸ்மின், துணைத் தலைவர் மூத்த ஊடகவியலாளர் எம்.ஏ.எம்.நிலாம், மீடியா போரத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் என்.ஏ.எம்.சாதிக் ஷிஹான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: