Monday, September 9, 2024

ஹஜ் காலக்கெடு நீட்டிப்பு....!

ஹஜ் விண்ணப்பம் சமர்பிக்க வரும் 23ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு இந்திய ஹஜ் கமிட்டி அறிவிப்பு 

புதுடெல்லி, செப்.10-வரும் 2025ஆம் ஆண்டு ஹஜ் செல்ல விரும்பும் முஸ்லிம்கள் தங்களுடைய விண்ணப்பங்களை வரும் 23ஆம் தேதி வரை அளிக்கலாம் என இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய ஹஜ் கமிட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2025ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படும் ஹஜ் பயணத்திற்கான ஏற்பாடுகளை இந்திய ஹஜ் கமிட்டி தொடங்கி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி, இஸ்லாமியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், அந்த விண்ணப்பங்கள் செலுத்த வரும் 13ஆம் தேதி கடைசி நாள் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,. 

தற்போது பல்வேறு தரப்பினரிடம் இருந்து இந்த காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வந்ததால், அதனை ஏற்றக் கொண்டு வரும் செப்டம்பர் 23ஆம் தேதி வரை விண்ணப்பம் சமர்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டு இருப்பதாக இந்திய ஹஜ் கமிட்டி கூறியுள்ளது. விண்ணப்பம் செய்யும் முஸ்லிம்கள் தற்போது நடைமுறையில் உள்ள கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) வைத்திருக்க வேண்டும் என்றும், அந்த பாஸ்போர்ட் வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி வரை செல்லத்தக்க வகையில் இருக்க வேண்டும் என்றும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்யும் அனைவரும் இந்திய ஹஜ் கமிட்டியின் இணையதள முகவரியான https://hajcommittee.gov.in க்கு அனுப்ப வேண்டும் என்றும், அல்லது iPhone/Android Mobile App "Haj Suvidha" மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. விண்ணப்பம் செலுத்துவதற்கு முன்பு, இந்திய ஹஜ் கமிட்டி குறிப்பிட்டுள்ள வழிக்காட்டுதல்களை முறையாக படித்து அதன்படி விண்ணப்பம் சமர்பிக்க வேண்டும் என்றும் ஹஜ் கமிட்டி அறிவுறுத்தியுள்ளது. 

=======================


No comments: