Friday, October 20, 2023

பொதுவாக.....!

படித்த முட்டாள்கள்....!

பொதுவாக டாக்டர்கள் வக்கீல்கள் குறித்து எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை.

அதற்கு காரணம் இந்த இரண்டு பேருக்கும் உலகத்தில் தாங்கள்தான் மெத்த படித்தவர்கள் என்ற எண்ணம் கொஞ்சம் அதிகம்.

அதைவிட மற்றவர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்ற நினைப்பு வேறு.

இதனால்தான் டாக்டர்கள் வக்கீல்களின் நடவடிக்கைகள் எப்போதும் கொஞ்சம் மாறுப்பட்டே இருக்கும்.

வக்கீல்களில் பலர் சட்டத்தை மதிக்கவே மாட்டார்கள்.

போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்காமல் வாகனங்களை ஓட்டுவார்கள்.

இதனால் போலீசாருக்கும் வக்கீல்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு நடக்கும்.

இதேபோல் டாக்டர்களின் நடவடிக்கைகளும் இருக்கும்.

சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் கருணை உள்ளத்துடன் டாக்டர்கள் நடந்துக் கொள்ளமாட்டார்கள்.

ஒரு நோயாளியை நான்கு பேர் மத்தியில்  எவ்வளவு அவமரியாதை செய்ய முடியுமோ அவ்வளவு செய்வார்கள்.

நோயாளிகளை சரியாக பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க மாட்டார்கள்.

பல டாக்டர்கள் நோயாளிகளை தங்கள் அருகில் அமர வைத்து அவர்களின் பிரச்சினைகளை கனிவுடன் கேட்காமல் தூரத்தில் நிற்க வைத்து மருந்து மாத்திரைகளை சீட்டில் எழுதி கொடுத்து அனுப்பி விடுவார்கள்.

இவர்களுக்கு எப்போதும் பணம்தான் குறிக்கோள்.

வேலூரில் ஒரு வக்கீல் இருக்கிறார்.

அவருக்கு தாம் பெரிய ராம்ஜெத்மலானி கபில் சிபில் அருண் ஜெட்லி என்ற நினைப்பு.

அவருடைய நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்தால் சிரிப்பு மட்டுமல்ல அவர் மீது வெறுப்பும் ஏற்படும்.

இதேபோல் சில டாகடர்களும் நடந்துகொள்வார்கள்.

அதேநேரத்தில் நல்ல உள்ளம் கொண்ட பல டாக்டர்கள் வக்கீல்கள் இருக்கவே செய்கிறார்கள்.

அதை மறுப்பதற்கில்லை.

மருத்துவம் மற்றும் சட்டம் இரண்டும் மிகவும் புனிதமான தொழில்.

குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு உயர்ந்த அர்ப்பணிப்பு உள்ளத்துடன் செய்ய வேண்டிய பணி.

இதை பெரும்பாலான டாக்டர்கள் வக்கீல்கள் உணர்ந்து கொள்வதில்லை.

அதனால் எப்போதும் இவர்கள் தெனாவட்டாகவே நடந்து கொள்வார்கள்.

மருத்துவர்கள் வழக்கறிஞர்கள் ஆகியோரிடம் எனக்கு ஏற்பட்ட அனுபவம்தான் அவர்கள் குறித்து இந்த மதிப்பு ஏற்பட காரணம்.

உங்களுக்கும் இதுபோன்ற அனுபவங்கள் ஏற்பட்டு இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 

No comments: