Monday, April 22, 2024

மதிப்புரை....!

 

நூல் மதிப்புரை

நூல்             : களம் வென்ற வரலாற்று நாயகன்

ஆசிரியர்    : முனைவர் .ரசித்கான்

வெளியீடு  : நூர்ஜஹான் பதிப்பகம்,

                         எண் 21/10, நல்லெண்ண முதலி தெரு,

                         இராயப்பேட்டை, சென்னை - 600 014.

                         செல்பேசி: 90809 13636

                         E.mail: rasheedrubina@gmail.com

விலை                     : ரூ.600/-

உலக வரலாற்றில் ஒவ்வொரு தலைவர்களின் பேச்சும் கடலில் கண்டெடுத்த முத்துக்களாக ஒலிக்கின்றன. அந்த வகையில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கலைஞர் கருணாநிதி என்னும் பட்டறையில் தீட்டப்பட்ட உறைவாள், தேர்தல் போர்க்களத்தில் சூழற்றிய உரைவீச்சுகளை எதிர்கால சமூகத்திற்கு பலன் அளிக்கும் வகையில், சென்னை புதுக்கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் .ரசித்கான் மிகச்சிறப்பான முறையில், "களம் வென்ற வரலாற்று நாயகன்" என்ற இந்த நூலை படைத்துள்ளார்.


பத்திரிகைகள், ஊடகங்களின் ஆரூடங்கள்”, “எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களும், ஆரூடங்களும்”, “தோழமை இயக்கத் தலைவர்கள் நம்பிக்கை ஒளிக்கீற்று”. “உங்களின் ஒருவன் மடைதிறந்த நினைவோடை”, “தலைவரின் அறிக்கைகள், காணொலி வேண்டுகோள்’, “முரசொலி கட்டுரைகளும், கவிதைகளும் உருவாக்கிய உணர்வலைகள்”, “தேர்தல் கதாநாயகன் கழகத்தின் தேர்தல் அறிக்கை”, “100 நாட்களில் மக்கள் குறை தீர்க்கும் திட்டம்”, “அ.தி.மு.க. ஊழல் அமைச்சர்கள் ஆளுநரிடம் புகார்பட்டியல்”, “ஸ்டாலினின் ஏழு உறுதிமொழிகள்”, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி மக்கள் நெகிழ்ச்சி”, “கழகத் தலைவர் சுடர்விடும் சூரியனின் சூறாவளி பிரச்சாரங்கள்”, “வெற்றி முழக்கங்களும், வாழ்த்துக் குவியங்களும்”, “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” என்ற 14 தலைப்புகளில், பல்வேறு நாளிதழ்கள், பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைகள், ஆக்கங்கள், செய்திகள் மற்றும் தகவல்களை ஒன்று திரட்டி, தனது கடின உழைப்பின் மூலம், "களம் வென்ற வரலாற்று நாயகன்" என்ற இந்த அருமையான, அற்புதமான நூலை முனைவர் ரசித்கான் உருவாக்கியுள்ளார்.

மொத்தம் 655 பக்கங்களைக் கொண்ட இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் “தீரர்கள் வாழும் திராவிடர் நாட்டை வென்றவர் கிடையாது” என்ற கவியரசு கண்ணதாசனின் பொன்மொழியில் இருந்து தொடங்கி, “பேச்சு பெரியதுதான், ஆனால் மௌனம் அதைவிடப் பெரியதாகும்” என்ற தாமஸ் கார்லைலின் பொன்மொழிகள் இடம்பெற்று, நூலுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.

தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி ஏற்ப, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட அனைத்து முயற்சிகள் குறித்தும் மிக நேர்த்தியாக முனைவர் அ.ரசித்கான், "களம் வென்ற வரலாற்று நாயகன்" என்ற இந்த நூலில் அழகாக தொகுத்துள்ளார்.

மிகவும் சிறப்பான முறையில் எழுதப்பட்டுள்ள இந்த நூலை, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நூலகங்களில் கட்டாயம் இடம்பெறச் செய்ய வேண்டும். அதன்மூலம், ஆயிரக்கணக்கான வாசகர்கள் மற்றும் பொதுமக்கள், திராவிட மாடல் ஆட்சி குறித்தும், தேர்தல் களத்தில் எப்படி செயல்பட்டு, வெற்றி பெற வேண்டும் என்பது குறித்தும், அறிந்துகொள்ள நல்ல ஒரு வாய்ப்பு கிடைக்கும். பள்ளி, கல்லூரி நூலகங்களிலும் இந்த நூலை இடம்பெறச் செய்தால், தமிழக மாணவச் சமுதாயமும் நல்ல விளக்கங்களையும் தகவல்களையும் பெற முடியும்.

"களம் வென்ற வரலாற்று நாயகன்" நூல், ஒரு சாதாரண நூல் கிடையாது. அரிய தகவல்களைக் கொண்ட ஒரு வரலாற்றுப் பொக்கிஷமாகும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும், அவரது ஆளுமை திறனையும், அவரது அரசின் சாதனைகளையும் வளரும் தலைமுறையினர் தெரிந்துகொள்ள இந்த தொகுப்பு நூல் பெரிதும் உதவும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கவே முடியாது என்றே கூறலாம்.

- ஜாவீத்

No comments: