Sunday, January 7, 2024

மதிப்புரை....!

நூல் மதிப்புரை 

நூல்                        :   கவிஞர் கமாலின் எல்லாம் ஒன்றே

தொகுப்பாசிரியர்: சேயன் இப்ராகிம்

வெளியீடு:            : நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், 

                                சென்னை - 600 017. போன்: 044 28343385 செல்பேசி: 94440 47786

விலை:                   : ரூ.120/-

தமிழ் இலக்கிய உலகம் நன்கு அறிந்த, மறைந்த கவிஞர்  பி.எம்.கமால், ஏராளமான கவிதைகளை எழுதிக் குவித்த ஒரு பிறவிக் கவிஞர். நூல் வடிவம் பெறாமல் இருந்த அவரது கவிதைகளில் முக்கியமானவற்றைத் தேர்வு செய்து "கவிஞர் கமாலின் எல்லாம் ஒன்றே" என்ற பெயரில், பிரபல இஸ்லாமிய எழுத்தாளர் சேயன் இப்ராகிம் மிக அழகாக தொகுத்துள்ளார். 

"ஆமீன்" என தொடங்கி, "கவிக்கோ அப்துல் ரகுமான்" வரை மொத்தம் 47 கவிதைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.  ஒவ்வொரு கவிதைகளும் மிகமிக எளிமையான தமிழ் நடையில் எழுதப்பட்டுள்ளதால், சாதாரண தமிழ் படித்த அனைவரும் எந்தவித சிரமமும் இல்லாமல் படித்து புரிந்துகொள்ள முடியும். அத்துடன், அழகிய கவிதை நடையையும் வாசகர்கள் ரசிக்க முடியும். இந்த நூலில் இஸ்லாமிய நெறி குறித்த ஏராளமான அழகிய கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம், இஸ்லாம் குறித்து முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், மாற்று மத தோழர்களும் எளிதாக புரிந்துகொண்டு தெளிவு பெற வாய்ப்பு ஏற்படும் என்பதை உறுதியாக கூறலாம். 

கவிஞர் கமாலின் எல்லாம் ஒன்ற கவிதை நூலை, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நூலகங்களில் இடம்பெற செய்ய வேண்டும். அதன்மூலம், அனைத்துத் தரப்பு மக்களும், ஒரு அழகிய, சிறந்த கவிதை நூலை வாசித்து பயன் அடையக் கூடிய வாய்ப்பு கிடைக்கும்.

- ஜாவீத்

No comments: