Sunday, November 30, 2025

அதிகரிக்கும் காற்று மாசுபாடு....!

 அதிகரிக்கும் காற்று மாசுபாடு - பாதுகாக்க என்ன வழி?

உலக மக்கள் தற்போது சந்தித்து வரும் மிகப்பெரிய பிரச்சினைகளில் மிகவும் முக்கிய பிரச்சினையாக மாசுபாடு இருந்து வருகிறது. காற்று மாசுபாடு என்பது மனிதர்கள், பிற உயிரினங்கள் அல்லது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் காற்றில் இருப்பது. மாசுபடுத்திகள் ஓசோன் அல்லது நைட்ரஜன் ஆக்சைடுகள் போன்ற வாயுக்களாக இருக்கலாம் அல்லது சூட் மற்றும் தூசி போன்ற சிறிய துகள்களாக இருக்கலாம். வெளிப்புற மற்றும் உட்புற காற்று இரண்டும் மாசுபடலாம்.  இப்படி காற்று உள்ளிட்ட பல்வேறு மாசுபாடுகளால், மனித இனம் தொடர்ந்து பிரச்சினைகள் மேல் பிரச்சினைகள் சந்தித்துக் கொண்டே இருக்கிறது. 

உலகம் முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், அவை இன்னும் முழு அளவில் பலன் அளிக்கவில்லை. இதனால், இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு அடைந்து வருகிறது. தலைநகர் டெல்லியில் வாழும் மக்கள் நாள்தோறும் காற்று மாசுபாடு காரணமாக பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகி வருகிறார்கள். அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், மக்களும் மாசுபாடுகளை குறைக்க தனிக் கவனம் செலுத்துவதில்லை. இதன் காரணமாக டெல்லி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் காற்று மாசுபாட்டின் தரம் மிகவும் வீரியம் அடைந்து மக்களை துன்புறுத்திக் கொண்டே இருக்கிறது. மாசுபாடு நமது ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். மாசுபாடு கண்களில் எரிச்சலையும் அரிப்பையும் ஏற்படுத்துகிறது.

மாசுபாடுகளால் ஏற்படும் பிச்சினைகள்  :

காற்று மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு மாசுபாடுகளில் இருந்து தப்பிக்க வழியே இல்லையா? என்ற கேள்வி எழுப்பினால், நிச்சயம் உண்டு என்று வல்லுநர்கள் ஆலோசனைகளை தருகிறார்கள். அந்த ஆலோசனைகளை மனதில் வாங்கிக் கொண்டு முடிந்த அளவு நாம் கவனத்துடன் செயல்பட்டால், மாசுபாடுகளால் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து ஓரளவுக்கு தப்பித்துக் கொள்ளலாம்.  டெல்லி, சென்னை மும்பையில் அதிகரித்து வரும் மாசுபாடு மக்களின் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். 

மாசுபாடு காரணமாக, சுவாசிப்பதில் சிரமம், தொண்டை வலி, நுரையீரல் நோய்கள் போன்ற பல பிரச்சனைகளை நாம் எதிர்கொள்கிறோம். இதன் காரணமாக, கண்கள் பல பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். கண்களில் நீர் வடிதல், சிவத்தல், வீக்கம் அல்லது அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, அதிகரித்து வரும் மாசுபாட்டின் போது நம் கண்களை நாம் சிறப்பு கவனம் செலுத்துவது முக்கியம். மாசுபாட்டின் போது நமது மற்றும் நமது குடும்பத்தினரின் கண்களை எவ்வாறு கவனித்துக்கொள்வது என்பதை நாம் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும். 

பாதுகாக்க என்ன வழி?

மாசுபாட்டின் காரணமாக கண்களில் தூசி சேரலாம். இது கண்களில் எரிச்சல் அல்லது அரிப்பை ஏற்படுத்தும். எனவே, கண்களில் சேரும் தூசி மற்றும் அழுக்குகளை அகற்ற ஒவ்வொரு நாளும் கண்களை சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும்.  நாம் எதைத் தொட்டாலும், அவற்றில் உள்ள கிருமிகள் மற்றும் தூசி நம் கைகளில் விழும். கைகளை கழுவாமல் கண்களைத் தொடுவது தொற்றுக்கு வழிவகுக்கும். எனவே, வெளியே செல்லும் போது சோப்பு போட்டு கைகளை நன்கு கழுவுங்கள், சானிடைசரைப் பயன்படுத்துங்கள். அழுக்கு கைகளால் கண்களை ஒருபோதும் தொடாதீர்கள்.

கண்களைத் தேய்ப்பது கண்களில் வறட்சி மற்றும் சிவப்பை ஏற்படுத்தும். எனவே, கண்களைத் தேய்ப்பதைத் தவிர்க்கவும். இது தவிர, மாசுபாட்டால் குவிந்துள்ள தூசி மற்றும் அழுக்கு கார்னியாவை சேதப்படுத்தும். ஒருபோதும் கண்களைத் தேய்க்காதீர்கள். அந்த பழக்கத்தை உடனே கைவிடுங்கள். மாசுபாட்டால் கண்கள் வறண்டு போகலாம். எனவே, உங்கள் மருத்துவரை அணுகிய பிறகு கண் சொட்டு மருந்து அல்லது கண் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தலாம். இது உங்கள் கண்களுக்கு ஈரப்பதத்தை அளிக்கிறது. அத்துடன் வறட்சி பிரச்சனையையும் தடுக்கிறது. இது தவிர, தொற்று அபாயத்தையும் குறைக்கிறது.

சன்கிளாஸ்கள் பயன்பாடு :

மாசுபாட்டைத் தவிர்க்க, உங்கள் நுரையீரலைப் பாதுகாக்க வெளியே செல்லும் போது ஆண்கள் முகமூடி, பெண்கள் தாவணியை பயன்படுத்த வேண்டும். இதேபோல், வெளியே செல்லும் போது உங்கள் கண்களை மாசுபாட்டிலிருந்து பாதுகாக்க சன்கிளாஸ்களைப் பயன்படுத்த வேண்டும். இது உங்கள் கண்களை புற ஊதா கதிர்கள் மற்றும் தூசியிலிருந்து பாதுகாக்கிறது. இது தொற்று அபாயத்தைக் குறைக்கிறது.

எந்தவொரு கண் பிரச்சனையும் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரைத் தொடர்பு கொள்ள வேண்டும்.  சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், பிரச்சனை மோசமடையக்கூடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே, எந்த வகையான கண் பிரச்சனையையும் புறக்கணிக்காதீர்கள். கண் தொற்று இருந்தால் மொபைல் போன்களைப் பயன்படுத்தவே வேண்டாம், ஏனெனில் இது உங்கள் கண்களை சோர்வடையச் செய்யலாம். உங்கள் மொபைல் போனில் ஏதேனும் முக்கியமான வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தால்,  அந்த நேரத்திற்கு மட்டும் அதைப் பயன்படுத்துங்கள்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை :

காற்று மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு மாசுபாடுகள் காரணமாக உயிரிழப்புகள் கூட நிகழ்வது தற்போது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. எனவே, மாசுபாடுகளில் இருந்து தப்பிக்க நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். அரசு  மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் கூறும் ஆலோசனைகளை ஏற்று மாசுபாடுகளில் இருந்து தப்பிக்க வேண்டும். காற்று மாசுபாட்டை குறைக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் சரியான முறையில் முழு ஒத்துழைப்பு அளிக்க முன்வர வேண்டும். இதன்மூலம் மட்டுமே, மாசுபாடு பிரச்சினைகளில் தப்பிக்க முடியும் என்பதை மனதில் உள்வாங்கிக் கொண்டு எப்போதும் நினைவில் வைத்துக் கொண்டு செயல்பட வேண்டும். அதை தவிர வேறு வழி இருக்கா? என்று கேள்வி எழுப்பினால் நிச்சயம் இல்லை என்றே கூற வேண்டும். எனவே  முன்னெச்சரிக்கை வழிகளில் சரியான முறையில் எச்சரிக்கையுடன் செயல்பட்டு உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

மத நல்லிணக்கம்...!

 Congratulations to the people of Jammu and Kashmir on showing such Hindu–Muslim unity. What a beautiful way of rejecting Israeli policies. We should stick to the Indian Constitution and reject the people who are hell-bent on dividing us! Jammu Kashmir - India Israel - Demolition.

- Sarah Hayat Shah.



நம்பிக்கை இழக்கும் நீதித்துறை.....!

 

" மக்களின் நம்பிக்கையை இழக்கும் நீதித்துறை " 

- ஜாவீத் -

மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபிறகு, நாட்டில் உள்ள அனைத்து தன்னாட்சி அமைப்புகளும், அதன் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டன. பாஜக ஆட்சியாளர்களின் சொல் அசைவுக்கு ஏற்ப, இந்த அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இதனை அண்மைக்காலமாக நடக்கும் சம்பவங்கள் மூலம் நன்கு உணர்ந்துகொள்ளலாம். இந்திய நீதித்துறை மீது மக்களுக்கு எப்போதும் ஒரு உயர்ந்து மதிப்பு மற்றும் நம்பிக்கை இருந்து வருகிறது. எந்தவொரு பிரச்சினை என்றாலும், நீதிமன்றத்தின் மூலம் தீர்வு கண்டுவிடலாம் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருந்து வருகிறது. ஆனால், தற்போது நீதித்துறையும், ஆட்சியாளர்களின் கண் அசைவுக்கு ஏற்ப செயல்பட ஆரம்பித்துவிட்டனவோ என்ற அச்சம் மற்றும் கேள்விக்குறி மக்களுக்கு எழுந்துள்ளது.

ஆட்சியாளர்கள் என்ன சொல்கிறார்களோ, அல்லது ஆட்சியாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி பிரச்சினையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற ஆசை காரணமாக,  நீதிமன்றங்களில் தற்போது தீர்ப்புகள் வெளியாகி வருகின்றன என்று பொதுமக்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் நீதிமன்றங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை மெல்ல மெல்ல தகர்ந்து வருகிறது. முஸ்லிம்களுக்கு எதிரான வழக்குகளில் நிலைமை இன்னும் மோசமாக இருந்து வருகிறது. இதற்கு பல எடுத்துக்காட்டுகள் இருந்து வருகின்றன.

சிறையில் உமர் காலித் :

 


2020 டெல்லி கலவரத்தில் சதி குற்றச்சாட்டுகள் தொடர்பாக முஸ்லிம் இளைஞர் உமர் காலித் செப்டம்பர் 2020 முதல் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுக்கள் மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்பட்டன. பிப்ரவரி 2020 டெல்லி கலவரங்களுக்குப் பின்னால் சிஏஏ-வுக்கு எதிரான போராட்டங்களின் போது பெரிய சதித்திட்டத்தை திட்டமிட்டதாக உமர் காலித், ஷர்ஜீல் இமாம், மீரான் ஹைதர், குல்பிஷா பாத்திமா மற்றும் ஷிஃபா-உர்-ரஹ்மான் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

காலித் மீது இந்திய தண்டனைச் சட்டம், 1980 இன் கீழ் கலவரம் (பிரிவு 147 மற்றும் 148), கொலை (பிரிவு 302), சட்டவிரோதமாக ஒன்றுகூடுதல் (பிரிவு 149) மற்றும் பகைமையை ஊக்குவித்தல் (பிரிவு 153A) உள்ளிட்ட பல குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 (பிரிவு 13, 16, 17, 18) மற்றும் ஆயுதச் சட்டம், 1959 (பிரிவு 25 மற்றும் 27) ஆகியவற்றின் கீழும் அவர் மீது குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. வடகிழக்கு டெல்லி கஜூரி காஸ் வழக்கில் கலவரம், நாசவேலை மற்றும் தீ வைப்பு சம்பவங்களுக்காக ஏப்ரல் 2021 இல் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட போதிலும், சதி குற்றச்சாட்டின் கீழ் அவர் செப்டம்பர் 2020 முதல் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

காலித் முதலில் மார்ச் 2022 இல் விசாரணை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரினார். ஆனால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. பின்னர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர் செய்த மேல்முறையீடு அதே ஆண்டு அக்டோபரில் தள்ளுபடி செய்யப்பட்டது. காலித் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் திரிதீப் பைஸ், அரசு தரப்பு வழக்கு முரண்பாடான சாட்சி கணக்குகள், தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கோள்கள் கொண்ட வாட்ஸ்அப் அரட்டைகள் மற்றும் சூழலுக்கு வெளியே வழங்கப்பட்ட பேச்சுகள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்திருப்பதாக வாதிட்டார். இருப்பினும் அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அவர் சிறையில் தனது இளமையை கழித்து வருகிறார்.  இப்படி பல எடுத்துக்காட்டுகள் நாட்டில் இருந்து வருகின்றன.

மௌலானா மஹ்மூத் மதானி வேதனை :

இத்தகைய சூழ்நிலையில், நீதித்துறை மற்றும் நீதிமன்றங்களின் செயல்பாடுகள் குறித்து ஜாமியத் உலமா-இ-ஹிந்த் தலைவர் மௌலானா மஹ்மூத் மதானி கடுமையாக விமர்சனம் செய்து தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார். அவரது கருத்துகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன என்றே கூற வேண்டும்.

நவம்பர் 29 தேதி சனிக்கிழமை மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஜாமியத் உலமா-இ-ஹிந்தின் தேசிய நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய மௌலானா மஹ்மூத் மதானி உச்சநீதிமன்றம் குறித்து சில கடுமையான கருத்துக்களை தெரிவித்தார். உச்சநீதிமன்றம் அரசாங்க அழுத்தத்தின் கீழ் செயல்படுகிறது என்றும் அவர் விமர்சனம் செய்தார்.

தொடர்ந்து பேசிய மதானி, நாட்டில் உள்ள முஸ்லிம் சமூகம் பாதுகாப்பற்றதாக உணர்கிறது என்று வேதனை தெரிவித்தார்.  "பாபர் மசூதி, மூன்று தலாக் மற்றும் பல வழக்குகள் தொடர்பான தீர்ப்புக்குப் பிறகு, சில ஆண்டுகளாக நீதிமன்றங்கள் அரசாங்க அழுத்தத்தின் கீழ் செயல்படுவதாகத் தெரிகிறது என்று மௌலானா விமர்சனம் செய்தார்.  நீதிமன்றம் ஞானவாபி மற்றும் மதுரா வழக்குகளை விசாரித்து வருகிறது. அதேநேரத்தில் வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான சட்டத்தையும் புறக்கணிக்கிறது என்று அவர் குற்றம்சாட்டினார்.

நீதிமன்றங்களின் தன்மை குறித்து கேள்விகளை எழுப்பிய பல சந்தர்ப்பங்கள் நமக்கு உள்ளன. அரசியலமைப்பைப் பின்பற்றும்போதும், சட்டத்தை நிலைநிறுத்தும்போதும் மட்டுமே உச்ச நீதிமன்றம் உச்சநீதிமன்றம் என்று அழைக்கப்பட தகுதியுடையது. அவ்வாறு செய்யாவிட்டால், அது 'உச்சநீதிமன்றம்' என்று அழைக்கப்படுவதற்குத் தகுதியற்றது என்றும் மௌலானா மஹ்மூத் மதானி கடுமையாக சாடினார்.

வாதத்தில் நியாயம் :

ஜாமியத் உலமா-இ-ஹிந்த் தலைவர் மௌலானா மஹ்மூத் மதானி அவர்களின் வாதத்தில் ஒரு நியாயம் இருக்கவே செய்கிறது. அவரது கருத்தை சமூக நலனில் அக்கறைக் கொண்ட பலரும் ஆமோதிக்கின்றனர். பல வழக்கறிஞர்கள் கூட, நீதிமன்றங்களின் செயல்பாடுகள் குறித்து அவ்வவ்போது வேதனையுடன் கருத்துகளை தெரிவித்து வருவதை சமூக ஊடகங்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. இதன் காரணமாக மக்களுக்கு நீதிமன்றங்கள் மீது இருந்து மரியாதை, மதிப்பு தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது என்றே கூறலாம்.

தற்போதைய சூழ்நிலை மாற என்ன செய்ய வேண்டும்? நீதிமன்றங்கள் யாருடைய அழுத்தத்திற்கும் ஆளாகாமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, இயங்க வேண்டும். ஆட்சியாளர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்ற அச்சம் இல்லாமல், நீதிமன்றங்கள் சட்டத்தின்படி, தீர்ப்புகளை வழங்க முன்வர வேண்டும். அப்படி உண்மையாகவே தீர்ப்புகளை, உத்தரவுகளை நீதிமன்றங்கள் வழங்கினால், எந்தவித வழக்குகளும் பதிவு செய்யப்படமால் பல ஆண்டுகள் சிறையில் வாடிக்கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள், விடுதலை செய்யப்படுவார்கள். அவர்களது வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும். இதன்மூலம் நீதித்துறையின் மீது ஏற்பட்டுள்ள களங்கம் நீங்கும். நீதித்துறை மீது புதிய நம்பிக்கை பிறக்கும்.

கடைசியாக, உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா அவர்கள் சொல்லியுள்ள ஒரு கருத்தை இங்கு நாம் நினைவில் கொள்வது மிகவும் அவசியம் ஆகும். 'ஒரு நீதிபதி வழங்கும் தீர்ப்பு காலத்தை தாண்டி நிலைத்திருக்க வேண்டும். அதனை நமது சட்ட அமைப்பு உறுதி செய்கிறது. தீர்ப்பு என்பது மணலில் எழுதப்பட்டதல்ல. அதனை மதிக்க வேண்டும். முகங்கள் மாறிவிட்டன என்பதற்காக முந்தைய தீர்ப்புகளை மாற்ற முயற்சிக்க கூடாது' என்று நீதிபதி நாகரத்னா அவர்கள் மிக அழகாக கூறியுள்ளார். அவரது இந்த கருத்தை நீதியரசர்கள் மற்றும் நீதிமன்றங்கள் கவனத்தில் கொண்டு, முகங்கள் மாறிவிட்டன என்று நினைத்துவிட்டு, தீர்ப்பை வழங்காமல், அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தீர்ப்பை நியாயமாகவும், விரைவாகவும் வழங்கினால் மட்டுமே மக்களுக்கு நீதிமன்றங்கள் மீதான நம்பிகை மேலும் அதிகரிக்கும்.

==============================

Friday, November 28, 2025

சவூதி பாரம்பரிய உணவு...!

“ சவூதி பாரம்பரியத்தை கொண்டாடும் கலாச்சார மாலை ”

சவூதி கைவினைத்திறன், பிராந்திய கலை மரபுகள் மற்றும் ராஜ்ஜியத்தின் பன்முகத்தன்மை கொண்ட பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட சமையல் அனுபவத்தை ஒன்றிணைத்த பாரம்பரிய கலையுடன் இணைந்து நடத்தப்பட்ட ஒரு சிறப்பு கலாச்சார நிகழ்ச்சி ரியாத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் அண்மையில் நடைபெற்றது. கடந்த வியாழக்கிழமை நடந்த இந்த நிகழ்ச்சி அனைவருக்கும் நல்ல விருந்தாக அமைந்து இருந்தது என்றே கூறலாம்.

பாரம்பரிய சமையல் அனுபவம் :

NOMAS (நோமாஸ்) என்பது மேரியட் ரியாத் டிப்ளமேடிக் காலாண்டில் அமந்துள்ள ஒரு சிறந்த உணவகமாகும். இது பாரம்பரிய சவூதி உணவு மற்றும் பாரம்பரியத்தை நவீன சூழ்நிலையுடன் கலக்கும் ஒரு சமையல் அனுபவத்தை வழங்குகிறது. இந்த உணவகம் கடந்த செப்டம்பர் 2025 இல் திறக்கப்பட்டது. இது உள்ளூர் பாணியில் வடிவமைக்கப்பட்ட உட்புறங்கள், கைவினைஞர்களால் உருவாக்கப்பட்ட விளக்குகள் போன்ற விவரங்கள் மற்றும் ராஜ்ஜியம் முழுவதும் உள்ள பகுதிகளின் கதைகள் மற்றும் மரபுகளை பிரதிபலிக்கும் தனிப்பயன் மேஜைப் பாத்திரங்கள் மூலம் சவூதி அடையாளத்தை வெளிப்படுத்துகிறது.

இந்த சிறப்பு நிகழ்ச்சியின் மாலையில் சவூதி கலை மற்றும் ராஜ்ஜியத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெறப்பட்ட பாரம்பரிய துண்டுகளின் நெருக்கமான காட்சி இடம்பெற்றது. உள்ளூர் கைவினைத்திறனின் ஆழத்தையும் செழுமையையும் பிரதிபலிக்கும் சிக்கலான ஜவுளி, பாரம்பரிய வடிவமைப்புகள் மற்றும் கைவினைப் பொருட்களை ஆராய பார்வையாளர்கள் அழைக்கப்பட்டனர். உணவகம் முழுவதும் காட்சி நீட்டிக்கப்பட்டது.

இந்தக் கூட்டம், பாரம்பரியக் கலையின் நிறுவனர் இளவரசி நூரா அல்-ஃபைசல் முன்னிலையில் நடைபெற்றது. 

ஒத்துழைப்பின் முக்கியத்துவம் :

அப்போது அவர் இந்த ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார்.இந்த நிகழ்வு விருந்தினர்கள் தங்களைச் சுற்றியுள்ள கலைத்திறனை உன்னிப்பாகப் பார்க்க ஊக்குவிக்கும் என்று நம்புவதாக இளவரசி நூரா கூறினார். மேலும், "நிகழ்ச்சிக்கு வரும்போது உங்கள் கண்களைத் திறந்து வைத்திருங்கள். அலமாரிகளில், சுவர்களில், நாற்காலிகளில் தலையணைகள் கூட, நீங்கள் காணும் அனைத்தும் எங்கள் கைவினைஞர்கள் மற்றும் கைவினைஞர்களிடமிருந்து வருகின்றன. ஒவ்வொரு படைப்பிலும் நிறைய விவரங்கள் உள்ளன. மேலும் பார்வையாளர்கள் அந்த வரலாறு மற்றும் படைப்பாற்றலால் சூழப்பட்டிருப்பதை உணர வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்" என்று வலியுறுத்தினார்.

பாரம்பரியக் கலை அதன் பாரம்பரிய ஆடைகளுக்குப் பெயர் பெற்றது. ஆனால் அமைப்பின் பணி ஃபேஷனுக்கு அப்பாற்பட்டது என்று அவர் கூறினார். "நாங்கள் ஆடைகளை மட்டுமே செய்கிறோம் என்று எல்லோரும் நினைக்கிறார்கள், ஆனால் நாங்கள் உற்பத்தி செய்யும் பல பொருட்கள் வீட்டுப் பொருட்கள் என்று அவர் கூறினார். "எங்களிடம் தட்டுகள், கோப்பைகள் உள்ளன. மேலும் நாங்கள் மேஜைப் பாத்திரங்களுக்குள் இன்னும் நகர்கிறோம். இந்த கண்காட்சி அந்த பன்முகத்தன்மையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது."

சவூதி சமையல் பாரம்பரியம் :

தேர்ந்தெடுக்கப்பட்ட இரவு உணவு சவூதி சமையல் பாரம்பரியத்தையும் எடுத்துக்காட்டுகிறது. நோமோசின் சமையல்காரர் அஹாத் பிராந்திய சுவைகள் மற்றும் பாரம்பரிய பொருட்களால் ஈர்க்கப்பட்ட ஒரு மெனுவை வழங்கினார். பின்னர் விருந்தினர்களுக்கு கதை சொல்லும் ஒரு மாலை வழங்கப்பட்டது. இது காட்சிப்படுத்தப்பட்ட கலைப்படைப்புகளுக்குப் பின்னால் உள்ள கலாச்சார தாக்கங்களைக் கொண்டாடியது.

இளவரசி நூரா இந்த நிகழ்வின் பின்னணியில் உள்ள கூட்டாண்மைக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.  மேலும் கூறினார்: “ஆர்ட் ஆஃப் ஹெரிடேஜ் நிறுவனத்தில் நாங்கள் செய்யும் பணி குறித்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். மேலும் இந்த நிகழ்விற்காக மேரியட் குழுவில் அற்புதமான கூட்டாளர்களைக் கண்டறிந்துள்ளோம். எங்கள் கைவினைஞர்களையும் அவர்களின் கைவினைத்திறனின் அழகையும் முன்னிலைப்படுத்த இதுபோன்ற ஒரு இரவு உணவை விட சிறந்த அமைப்பு என்ன?” என்றார் அவர். மேலும் அவர் கூறினார்: “இங்கே இருந்ததற்கும் எங்கள் கைவினைஞர்களின் பணியை ஆதரித்ததற்கும் மிக்க நன்றி. இது எங்களுக்கு மிகவும் முக்கியம். மேலும் ஒவ்வொரு படைப்பிற்கும் பின்னால் உள்ள கதைகளைக் கண்டுபிடிப்பதில் அனைவரும் மகிழ்ச்சியடைவார்கள் என்று நம்புகிறேன்.”

பாரம்பரிய முறையில் உணவு :

உலகம் எவ்வளவு தான் வேகமாக முன்னேறி சென்றாலும், பாரம்பரிய உணவு முறை என்பது எப்போதும் மாறாத ஒரு அழகிய கலாச்சார முறையாகும். இந்த முறையை பின்பற்றி நாம் நமது பாரம்பரிய உணவு முறை வகைகளை உண்டு வாழ்ந்தால் நிச்சயமாக ஆரோக்கிய வாழ்வு கிடைக்கும். பாரம்பரிய வாழ்வு முறை மிகவும் எளிமையான ஒரு அழகிய முறை என்பதை எப்போதும் நினைவில் நமது வாழ்க்கை நல்ல உணவை போன்று இனிக்கும்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

மத நல்லிணக்கம்...!

 Hindu–Muslim brotherhood!

Jammu-based journalist Arfaz Daing’s home was unjustifiably demolished by the Jammu Development Authority yesterday in a selective action, despite many similar structures standing in the same area.

In a powerful gesture of humanity and Hindu–Muslim brotherhood, a Hindu family in Jammu today donated 5 marlas of land to help him rebuild his home. Says, If they break his 10-marla plot, we will give him 20. This is the faith that teaches us to stand with the victim, to stand against injustice, and to stand firmly for righteousness.

Let brotherhood prevail. Let humanity win.



காற்று மாசு...!

 Every mother I meet tells me the same thing: her child is growing up breathing toxic air. They are exhausted, scared and angry.

Modi ji, India’s children are choking in front of us. How can you stay silent? Why does your government show no urgency, no plan, no accountability?

India needs an immediate, detailed Parliament debate on air pollution and a strict, enforceable action plan to tackle this health emergency.

Our children deserve clean air - not excuses and distractions.




Thursday, November 27, 2025

சில கேள்விகள்...!

 வாக்கு திருட்டு...!

எஸ்.ஐ.ஆர்.

காங்கிரஸ் என்ன சொல்கிறது...!



Wednesday, November 26, 2025

தாக்கு....!

 RSS வாரிசான ஆளுநர் ஆர்.என்.ரவி காரல் மார்க்ஸ் குறித்து பேச அருகதையற்றவர். CPIM  தோழர் சண்முகம் தாக்கு..!



உறுதி...!

 அரசமைப்புச் சட்டம் அமலான தினம் இன்று...!

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உறுதி...!

Constitution day...!



பேச்சு...!

தாய்மொழிப் பற்று குறித்து தமிழ்நாட்டுக்கு ஆளுநர் ஆர.என்.ரவி  பாடமெடுக்க வேண்டாம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்....!




பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சிறப்பு நேர்காணல்....!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் ஐந்து தொகுதிகளில் போட்டியிட விருப்பம்.....!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சிறப்பு நேர்காணலில் தகவல்....!

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் -

2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு மத்தியில், அரசியல் கட்சிகள் எந்ததெந்த தொகுதிகளில் போட்டியிட வேண்டும்., எத்தனை தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். திமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் மட்டுமல்லாமல், அதிமுக கூட்டணியில்  உள்ள கட்சிகளும் தொகுதி நிலவரம், போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய இஸ்லாமிய இயக்கமான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கமும், 2026ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் தற்போது தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக கடந்த நவம்பர் 19ஆம் தேதி புதன்கிழமை அன்று திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில அவசர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழுக் கூட்டத்தில், 52 மாவட்டங்களைச் சேர்ந்த செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொண்டு சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக தங்களது கருத்துகளை தெரிவித்தனர். 

இந்நிலையில், வரும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து அறிந்துகொள்ள விரும்பினோம். மூத்த ஊடகவியலாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் அவர்கள், தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களை சென்னை மண்ணடியில் உள்ள காயிதே மில்லத் மன்ஜிலில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை அலுவலகத்தில் பேராசிரியர் அவர்களை சந்தித்து, இனிய திசைகள் மாத இதழுக்காக சிறப்பு நேர்காணல் நடத்தினார். அந்த நேர்காணலின் முழு விவரம் இதோ:

அவசர செயற்குழுக் கூட்டத்தில் ஆலோசனை :

திருச்சியில் நவம்பர் மாதம் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  மாநில அவசர செயற்குழுக் கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் மீண்டும் இணைந்து செயல்பட இயக்கம் முடிவு செய்துள்ளது. திமுக தலைமையில் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று, தற்போதைய நல்லாட்சி தொடரும். அதற்கான தேர்தல் பணிகளை  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இயக்கம் ஏற்கனவே தொடங்கியுள்ளது.

தேர்தலில் போட்டியிட வேண்டிய தொகுதிகள், அதன் எண்ணிக்கை ஆகியவை குறித்து மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர் தங்களுடைய எண்ணங்களையும் கருத்துகளையும் கூட்டத்தின் முன்பு வைத்தனர். கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் எங்களுக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் நாங்கள் தோல்வி அடைந்தோம். வரும் தேர்தலில் அந்த நிலை ஏற்படாது. 2026 தேர்தலில் 5 தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டும் என்கிற விருப்பம் எங்களுக்கு உள்ளது. கலைஞர் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு 16 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. வரும் தேர்தலிலும் அதை வலியுறுத்துவோம். பீகாரின் நிலைமை வேறு. தமிழ்நாட்டின் நிலைமை வேறு. தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க. ஆட்சிதான் அமையும், மு.க.ஸ்டாலின் ஆட்சி அனைத்துச் சமுதாய மக்களையும் உள்ளடக்கிய ஆட்சியாக இருக்கும்.

மஹல்லா ஜமாத்துக்கள் மாநாடு :

இந்திய யூனியன் முஸ்லீக் கட்சி சார்பில் அடுத்த ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி கும்பபோணம் சுவாமிமலை அருகே மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதில் 8 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநாட்டில் பங்கேற்கிறார். திருச்சி செயற்குழுக் கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் சில முக்கியக் கோரிக்கைகளாக 20 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் உள்ள முஸ்லிம்‘ சிறைவாசிகள் விடுவிக்கப்பட வேண்டும். இதற்கான உரிய நடவடிக்கையை முதலமைச்சர் எடுக்க வேண்டும். பட்டா இல்லாத பள்ளிவாசல்கள், மதரஸாக்கள் மற்றும் அடக்கஸ்தலங்களுக்கு பட்டா வழங்கப்பட வேண்டும். வாக்காளர் பட்டியலில் குழப்பங்கள் ஏற்படுவதைத் தடுக்க, எஸ்.ஐ.ஆர். (தனிநபர் தகவல் பதிவு) தொடர்பான நடைமுறைகளை ஒத்திவைத்துவிட்டு, தேர்தலுக்குப் பின்பு நடத்த வேண்டும். இது தொடர்பாக இ.யூ.முஸ்லிம் லீக்  சார்பிலும் உச்ச நீதிமன்றம், கேரள உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் வெளிநாடு வாழ் தமிழர்களையும் இணைக்க வேண்டும். தமிழறிஞர்களின் நூல்களை அரசுடமையாக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

ஐந்து முக்கிய தொகுதிகள் :

திருச்சி அவசர செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு, மஹல்லா ஜமாஅத் ஒருங்கணைப்பு மாநாடு மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் இயக்கம் தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறது. திருச்சியில் செயற்குழு நிர்வாகிகள் வழங்கிய ஆலோசனையின் படி, வரும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 5 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திமுக கூட்டணி தலைமையில் இருந்து வாங்கும் தொகுதிகளில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற்றே தீர வேண்டும் என்பது திருச்சியில் நடைபெற்ற அவசரச் செயற்குழுக் கூட்டத்தில் நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர். 

கடந்த தேர்தலில் நாங்கள் மூன்று தொகுதிகளை வாங்கி, போட்டியிட்டு தோல்வி அடைந்தோம். அத்தகைய சூழ்நிலையில், திரும்பவும் மூன்று தொகுதியா, ஐந்து தொகுதியா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும், 5 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது கட்சியின் நிர்வாகிகளின் எல்லோரின் விருப்பமாக இருந்து வருகிறது. இந்த கருத்தை தான் திருச்சி செயற்குழுக் கூட்டத்தில் பேசப்பட்டது.

இராமநாதபுரத்தில் திருவாடானை, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர் ஆகிய தொகுதிகள் நல்ல தொகுதிகள் என நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதேபான்று,  சென்னையில் ஆயிரம் விளக்கு தொகுதி, திருச்சியில் திருச்சி கிழக்கு தொகுதி, தஞ்சாவூரில் பாபநாசம் தொகுதி, நாகை மாவட்டடத்தில் நாகப்பட்டினம் தொகுதி, கடலூர் மாவட்டத்தில் ஒரு தொகுதி, கரூரில் அரவக்குறிச்சி தொகுதி என இப்படி, ஒரு பத்து இருபது தொகுதிகளின் பெயர்களை நிர்வாகிகள் பரிந்துரை செய்து கருத்துகளை தெரிவித்தார். 

இந்த பத்து, இருபது தொகுதிகளில் குறைந்தது 5 தொகுதியாவது வாங்க வேண்டும் என்பது செயற்குழுவில் நிர்வாகிகளின் விருப்பமாக இருந்தது. ஆனால் நாங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் 5 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற செயற்குழு நிர்வாகிகளின் கருத்துகள், விருப்பங்கள், ஆலோசனைகள் ஆகிய அனைத்தையும் கட்சி தலைமை தீவிரமாக ஆய்வு செய்யும். அதன்பிறகே, எந்தவெரு முடிவும் எடுக்கப்படும். 

தமிழக மக்கள் நல்ல தீர்ப்பு அளிப்பார்கள் :

வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு தமிழக மக்கள் நிச்சயம் ஆதரவு அளிப்பார்கள். தற்போதைய திராவிட மாடல் ஆட்சி, இந்திய நாட்டிற்கு மட்டுல்லாமல், உலகத்திற்கே வழிகாட்டும் ஆட்சியாக இருந்து வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு, மிகச் சிறந்த முறையில் செயல்பட்டு, கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ்நாட்டை இந்திய மாநிலங்களுக்கு வழிக்காட்டும் மாநிலமாக மாற்றியுள்ளது. 

அனைத்துத் தரப்பு மக்களும், திமுக ஆட்சிக்கு நன்மதிப்பு வழங்கி வருகிறார்கள். மக்களின் எண்ணங்கள் அனைத்தும், மீண்டும் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதாகவே இருந்து வருகிறது. சிறுபான்மையின மக்கள் மட்டுமல்லாமல், அனைத்துச் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களும் திமுகவின் ஆட்சியை பாராட்டு வருகிறார்கள். எனவே நூறு சதவீதம் மீண்டும் திமுகவே ஆட்சியைப் பிடிக்கும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள், திமுக ஆட்சிக்கு முழு ஆதரவு அளிப்பார்கள். திமுக ஆட்சிக்கு துணையாக இருப்பார்கள். ஒத்துழைப்பு வழங்குவார்கள். அந்த நம்பிக்கை  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்திற்கு இருந்து வருகிறது. 

இவ்வாறு சிறப்பு நேர்காணலில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள், தமது எண்ணங்களை மிகத் தெளிவாக தெரிவித்தார். அவரது விருப்பப்படி, தமிழ்நாட்டில், மீண்டும் திமுக ஆட்சி அமைந்து, திராவிட மாடல் நல்லாட்சி தொடர்ந்து தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் வேகமான வளர்ச்சியும், முன்னேற்றமும் அடைய வாழ்த்திவிட்டு விடைப்பெற்றோம். 

- சந்திப்பு : மூத்த ஊடகவிலாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

===========================================

Tuesday, November 25, 2025

குற்றச்சாட்டு....!

 பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகம்...!

வஞ்சிக்கப்படும் தமிழகம்...!

மதுரை எம்.பி. வெங்கடேசன் குற்றச்சாட்டு...!



அழகிய செயல்....!

 Churches in Germany are now inviting imams to recite Muslim prayers and calls of Allahu Akbar to appear more ‘inclusive.’

Would the opposite ever be allowed? I don’t think so.



Monday, November 24, 2025

மூன்று தலைமுறையாக முஸ்லிம் பெயரை இணைத்து பயன்படுத்தும் குடும்பம்....!

" மூன்று தலைமுறையாக முஸ்லிம் பெயரை இணைத்து பயன்படுத்தும் 

இராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர் பாட்சா முத்துராமலிங்கம் குடும்பம் "

- சில சுவையான தகவல்கள் -

தமிழகத்தில் எல்லோருடைய கவனத்தை கவரும் வகையில் இருக்கும் முக்கிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்றாக இராமநாதபுரம் தொகுதி இருந்து வருகிறது. இந்த தொகுதியின் உறுப்பினராக (எல்.எல்.ஏ.) இருப்பவர் காதர் பாட்சா முத்துராமலிங்கம். இப்படி முஸ்லிம் மற்றும் சகோதர சமுதாய பெயரை இணைத்துக் கொண்டு, தனது பெயரை காதர் பாட்சா முத்துராமலிங்கம் என வைத்துக் கொண்டு இருக்கும் இவர், உண்மையில், இஸ்லாமியரா அல்லது சகோதர சமுதாயத்தைச் சேர்ந்தவரா என்ற கேள்வி அல்லது குழப்பம் முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்துச் சமுதாய மக்களுக்கு ஏற்படுவது இயல்பாகவே இருந்து வருகிறது. காதர் பாட்சா முத்துராமலிங்கம் என்ற  ஒத்திசைவான பெயரில் பல சுவையான தகவல்கள் அடங்கி இருப்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். 

தனித்துவமான கலவையான பெயர் : 

உடன்பிறப்பே வா திட்டத்தின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை (நவம்பர் 24, 2025) சென்னையில் கட்சித் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினைச் சந்தித்த தி.மு.க. தலைவர்களில், ராமநாதபுரம் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.எல்.ஏ., காதர் பாட்சா முத்துராமலிங்கமும் ஒருவர். அவரது தனித்துவமான கலவையான முஸ்லிம் மற்றும் இந்து இணைந்த பெயர் நீண்ட காலமாக பொது ஆர்வத்தை ஈர்த்துள்ளது. திரைப்பட நடிகர் ஆர்யா முக்கிய வேடத்தில் நடித்த காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் என்ற தமிழ் திரைப்படத்தையும் கூட ஊக்கப்படுத்தியது. தமிழ்நாடு சட்டப்பேரவைச் சபாநாயகர் எம். அப்பாவு சட்டமன்றத்தில் காதர் பாட்சா முத்துராமலிங்கம் என்ற அவரது பெயரை அழைக்கும் போதெல்லாம், அது எப்போதும் கேள்விகளைத் தூண்டுகிறது. எம்.எல்.ஏ இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா என்று பலர் யோசிக்கிறார்கள். வியப்புடன் ஆச்சரியம் அடைகிறார்கள். 

காதர் பாட்சா முத்துராமலிங்கம் விளக்கம் : 

இப்படி அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், இராமநாதபுரம் தொகுதியில் உள்ள மக்களும், ஏன் தமிழக மக்களும், காதர் பாட்சா முத்துராமலிங்கம் பெயர் குறித்து தொடர்ந்து குழப்பத்தில் இருந்து வருகிறார்கள். இப்படி ஒரு பெயர் வைத்து பயன்படுத்துவதில் உள்ள உண்மையான காரணம் என்ன? போன்ற பல கேள்விகளுக்கு காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. அருமையான விளக்கத்தை அளித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். 

மூன்று தலைமுறைகளாக காதர் பாட்சா பெயர் :

“நாங்கள் மூன்று தலைமுறைகளாக ‘காதர் பாட்சா’ என்ற பெயரை பயன்படுத்தி வருகிறோம். என் தந்தை காதர் பாட்சா வெள்ளைசாமி தேவர், என் பெயர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், என் மகன் பாட்சா” என்று இராமநாதபுரம் எம்.எல்.ஏ., காதர் பாட்சா முத்துராமலிங்கம் மகிழ்ச்சியுடன் விவரிக்கிறார்.  இராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளராகவும் பணியாற்றும் இவர், தனது பாட்டி, மீரக்கல், மறைந்த ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கம் தேவரின் தாயார் இந்திரானிணியின் உறவினர் என்றும் பெருமையுடன் தெரிவிக்கிறார். 

மேலும் விவரிக்கும் காதர் பாட்சா முத்துராமலிங்கம், "பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர், முஸ்லிம் சமுதாய மக்களுடன் எப்போதும் பாசமும் அன்புன் செலுத்தி நெருக்கமாக இருந்தவர். தேவரின் தாயார் இறந்தபிறகு, அவர் குழந்தையாக இருந்தபோது, அவருக்கு சாந்தா பீவி என்ற முஸ்லிம் செவிலியர் பாலுட்டி வளர்த்தார்.  மேலும், கிறிஸ்துவ மிஷனரிகள் நடத்தும் பள்ளியில் அவர் கல்வி பயின்றார்.  இதன் காரணமாக தங்களுடைய குடும்பம், முஸ்லிம் சமுதாய மக்களுடன் இரண்டறக் கலந்து ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறது" என்று கமுதி தாலுகாவில் உள்ள மேலராமநதி கிராமத்தில் வசிக்கும் காதர் பாட்சா முத்துராமலிங்கம் மகிழ்ச்சியுடன் கூறுகிறார். 

தொடர்ந்து பேசிய அவர், "எங்களது குடும்பம் நீண்ட காலமாகவே இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் குறித்து மிகுந்த நன்மதிப்பு கொண்ட குடும்பமாக இருந்து வருகிறது. எனது பாட்டி மீரக்கல் பல ஆண்டு காலமாக குழந்தை இல்லாமல் வேதனை அடைந்து வந்த நிலையில், நாகூர் தர்காவிற்குச் சென்று பிரார்த்தனை செய்தார். இந்த பிரார்த்தனைக்குப் பிறகு, என்னுடைய தந்தை  பிறந்தார். நாகூர் ஆண்டவரின் ஆசி அவருக்கு கிடைத்ததால், காதர் பாட்சா என்ற பெயர்  அவருக்கு சூட்டப்பட்டது. பின்னர், வெள்ளைசாமி தேவர் என்ற பெயரும் இணைத்துக் கொண்டு, காதர் பாட்சா வெள்ளைசாமி தேவர் என்று அவர் அழைக்கப்பட்டார். பசும்பொன் முத்துராமலிங்கம் தேவரின் பாட்னாரின் பெயர் வெள்ளைசாமி தேவர் என்பதால், அதை என்னுடைய தந்தையின் பெயருடன் இணைத்து வைக்கப்பட்டது. 

சமூக நல்லிணக்கத்தின் கோட்டை :

இராமநாதபுரம் எப்போதும், இந்து முஸ்லிம் ஒற்றுமையை பிரதிபலிக்கும் சமூக நல்லிணக்கத்தின் கோட்டையாக இருந்து வருகிறது. கொடை வள்ளல் சீதக்காதி, இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர் சேதுபதியின் நெருங்கிய நண்பராக மட்டுமல்லாமல், ஆலோசகராகவும் இருந்தவர்.  இப்படி, இராமநாதபுரம், இந்து முஸ்லிம் சமுதாய மக்களின் கலவையாக எப்போதும் அமைதியாக வாழ்ந்து வருகிறது. பசும்பொன் முத்துராமலிங்கம் தேவரைப் பின்பற்றி,  தேவர் சமுதாய மக்கள், முஸ்லிம் சமுதாய மக்கள் மீது மிகுந்த அன்பு செலுத்தி, எப்போதும் ஒற்றுமையுடன், அமைதியாக வாழ்ந்து வருகிறார்கள். 

அந்த வகையில் எங்கள் குடும்பமும், மூன்று தலைமுறையாக  முஸ்லிம் பெயரை எங்கள் பெயர்களுடன் இணைத்து பயன்படுத்தி வருவது எங்களுக்கு பெருமையாக மட்டுமல்லாமல், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இதன்மூலம் இந்து - முஸ்லிம் ஒற்றுமை அனைத்துச் சமுதாய மக்கள் மத்தியில் எடுத்துரைக்க எங்களுக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இதை நாங்கள் தொடர்ந்துகொண்டே இருப்போம்" இப்படி தனது பெயருடன் காதர் பாட்சா என்ற முஸ்லிம் பெயர் இணைத்து அழைப்படுவது குறித்து பல சுவையான தகவல்களை இராமநாதபுரம் எம்.எல்.ஏ.,  காதர் பாட்சா முத்துராமலிங்கம் விவரித்தபோது மிகுந்த வியப்பாகவும் அதே நேரத்தில் சமூக நல்லிணக்கம் தழைக்க அவரது குடும்பம் செய்துவரும் பணியை பாராட்ட வார்த்தைகளே இல்லை.  

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

இப்தார்....!

 "In the Prophet's Mosque,

 every Monday and Thursday,

 Iftars are held for those who are fasting."



உண்மை என்ன?

 Islam does not encourage child marriage,

Rasulallah did not marry NANA Aisha at 6-9 rather at 16-19

Watch this video except if u naturally hate Islam and u aren’t willing to open ur heart then u can skip !!



Sunday, November 23, 2025

நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாகுபாடு....!

“ நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாகுபாடு ”

 - மௌலானா அர்ஷத் மதானி வேதனை -

ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபிறகு, நாட்டில் வாழும் 25 கோடிக்கும் மேலான முஸ்லிம்களுக்கு எதிராக காரியங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் உள்ள முஸ்லிம் பெயர்களை மாற்றுதல், முஸ்லிம்களை எப்போதும் ஒருவித பதற்றத்தில் வைப்பது, முஸ்லிம்களின் கவனத்தை வளர்ச்சிப் பணியில் செலுத்தாமல் தடுத்தல் என பல்வேறு வகையில் முஸ்லிம்கள் தற்போது பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டே வருகிறார்கள். நாட்டில் இஸ்லாமிய வெறுப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிறிய பிரச்சினையை கூட, மிகப்பெரிய பிரச்சினையாக மாற்றி, இஸ்லாமியர்கள் குறி வைக்கப்படும் நிகழ்வுகள் அண்மைக் காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 

இஸ்லாமிய வெறுப்பு மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக பரப்பப்படும் வதந்திகளுக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட முஸ்லிம் இயக்கங்கள் தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டே இருக்கின்றன. இந்திய நாட்டை உண்மையில் நேசிக்கும் முஸ்லிம்களை சந்தேக கண்ணுடன் ஒருபோதும் பார்க்கக் கூடாது என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனினும், ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில், முஸ்லிம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. மாறாக, தொடர்ந்து முஸ்லிம் வெறுப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதை தடுத்து நிறுத்த தீவிர நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. 

மௌலானா அர்ஷத் மதானி வேதனை :

இத்தகைய சூழ்நிலையில், நாட்டில் முஸ்லிம்களக்கு எதிராக பாகுபாடு அதிகர்த்து வருவதாக ஜாமியத் உலேமா-இ-ஹிந்த் தலைவர் மௌலானா அர்ஷத் மதானி வேதனை தெரிவித்துள்ளார். முஸ்லிம்கள் மீது திட்டமிட்ட பாகுபாடு திணிக்கப்பட்டு அவர்கள்  அரசியல் ரீதியாக ஓரங்கட்டப்பட்டு வருவதாக மௌலானா அர்ஷத் மதானி விமர்சனம் செய்துள்ளார். 

நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாகுபாடு, இஸ்லாமிய வெறுப்பு மற்றும் அரசியல் மற்றும் சமூக பற்றாக்குறை குறித்து அவர் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். தாருல் உலூம் தேவ்பந்தில் நடந்த ஒரு விழாவில் உரையாற்றிய மௌலானா அர்ஷத் மதானி, தற்போதைய பாஜக அரசாங்கம், முஸ்லிம்களின் அரசியல் தலைமை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகளைப் பறித்து வருவதாகக் குற்றம் சாட்டினார். சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அசாம் கான் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டமை, டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் முஸ்லிம்களைக் குறிவைத்தல் மற்றும் அல்-பலா பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஜவாத் அகமது சித்திக் கைது போன்ற பிரச்சினைகளை அவர் உதாரணங்களாகக் குறிப்பிட்டார்.

பன்முக சவால்களை எதிர்கொள்ளும் முஸ்லிம் சமூகம் :

நாட்டின் முன்னணி முஸ்லிம் அமைப்பாக இருப்பது ஜாமியத் உலமா-இ-ஹிந்த். அதன் தலைவராக இருக்கும் மௌலானா அர்ஷத் மதானி, முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாமல், நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும், நாட்டின் அமைதி, வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். தற்போது நாட்டில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் அதிகரித்து வரும் பாகுபாடு மற்றும் இஸ்லாமிய வெறுப்பு குறித்து அவர் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். அரசியல், சமூக மற்றும் பொருளாதார மட்டங்களில் முஸ்லிம் சமூகம் பன்முக சவால்களை எதிர்கொள்கிறது என்று மௌலானா கூறியுள்ளார். 

தாருல் உலூம் தேவ்பந்தில் உள்ள தனது செமினரியில் நடந்த விழாவில் உரையாற்றிய மௌலானா மதானி, சமீபத்திய டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் அசாம் கான் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதையும், பல தனிநபர்கள் குறிவைக்கப்பட்டதையும் மேற்கோள் காட்டினார். பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் முஸ்லிம்களின் அரசியல் தலைமை, சமூக அந்தஸ்து மற்றும் வேலை உரிமைகளை பறிக்கும் கொள்கையை பின்பற்றுகிறது என்று அவர் குற்றம் சாட்டினார். 

உலக அளவில் முஸ்லிம்கள் சாதனை :

தற்போது அமெரிக்காவின் நியூயார்க்கில் தஹ்ரான் மம்தானி மற்றும் இங்கிலாந்தின் லண்டனில் சாதிக் கான் போன்ற முஸ்லிம்கள் உயர் பதவிகளை வகிக்க முடியும். ஆனால் ஒரு முஸ்லிம் இந்தியாவில் ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஆவது மிகவும் கடினம் என்று மௌலானா மதானி கூறினார். ஒரு முஸ்லிம் துணைவேந்தர் பதவியை அடைந்தாலும், அவர் அசாம் கானைப் போல சிறைக்கு அனுப்பப்படுகிறார் என்று அவர் வருத்தப்பட்டார். 

"தற்போது அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கிறது?" என்ற கேள்வியை அவர் எழுப்பினார். முஸ்லிம்கள் ஒருபோதும் எழுந்திருக்காமல், வளர்ச்சி அடையாமல், பல்வேறு துறைகளில் சாதிக்காமல் இருக்க பா.ஜ.க. அரசாங்கம் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது" என்று மௌலானா குற்றம்சாட்டினர்.  அல்-ஃபலா பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான ஜவாத் அகமது சித்திக், பணமோசடி மற்றும் போலி சான்றிதழ்கள் குற்றச்சாட்டில் 13 நாள் அமலாக்க இயக்குநரகத்தின் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். அத்துடன், மத்தியப் பிரதேசத்தில் உள்ள அவரது மூதாதையர் வீட்டிற்கு இடிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது, என்று மௌலானா மதானி குற்றம்சாட்டினார். அவரது கூற்றுப்படி, இந்த சூழ்நிலை நீதித்துறை அமைப்பு பற்றிய கேள்விகளையும் எழுப்புகிறது. ஏனெனில் ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்படாமல் தொடர்ந்து சிறையில் அடைக்கப்படுகிறார்.

முஸ்லிம்கள் முன்னேறுவதைத் தடுக்கிறார்கள் :

இந்தியாவில் 75 ஆண்டுகள் காலமாக சுதந்திரம் இருந்தபோதிலும், கல்வி, தலைமைத்துவம் மற்றும் நிர்வாக கட்டமைப்புகளில் முஸ்லிம்கள் முன்னேறுவதைத் தடுக்கிறார்கள் என்று மௌலானா மதானி மேலும் கூறினார். பா.ஜ.க. அரசாங்கம் முஸ்லிம்களின் காலடியில் இருந்து தரையை இழுக்க விரும்புகிறது. மேலும் இந்த இலக்கை பெருமளவில் அடைந்துள்ளது என்றும்மௌலானா மதானி தெரிவித்தார். 

ஜாமியத் உலேமா-இ-ஹிந்த் தலைவர் மௌலானா அர்ஷத் மதானியின் வேதனையும் குற்றச்சாட்டுகளும் மிகவும் கவனத்தில் எடுத்துக் கொண்டு சிந்திக்கப்பட வேண்டியவையாகும். பல்வேறு வகைகளில் இந்திய முஸ்லிம்கள் நாட்டில் தொடர்ந்து சந்திக்கும் பிரச்சினைகள் காரணமாக அவர்கள் அமைதியான வாழ்க்கையை வாழ முடியாத ஒரு சூழல் தற்போது உருவாக்கப்பட்டு இருக்கிறது. எஸ்.ஐ.ஆர். போன்ற வகையில் முஸ்லிம்களின் வாக்குகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர்ந்து பிரச்சினைகளையும் வேதனைகளையும் சந்தித்து வரும் இந்திய முஸ்லிம்களின் அமைதியான வாழ்க்கைக்காக, முன்னேற்றத்திற்காக மௌலானா அர்ஷத் மதானி குரல் எழுப்பி இருப்பது ஆட்சியாளர்கள் கவனத்தில் கொண்டு, நாட்டை உண்மையாக நேசிக்கும் 25 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்களை அமைதியாக வாழ வழிவகை செய்ய வேண்டும். அவர்களின் முன்னேற்றம் நாட்டின் உண்மையான முன்னேற்றம் என்பதை நினைத்து செயல்பட வேண்டும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


தாக்கு...!

 Mr Gyanesh Kumar @ECISVEEP you are responsible for aiding & abetting the suicide of BLO Rinku Tarafdar, 52 , who took her own life last night. In her suicide note she mentioned clearly that only the EC  was responsible for her death.

- Mahua Moitra...



விமர்சனம்.....!

 தேர்தல் ஆணையம்...!

ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் விமர்சனம்...!

முழு விவரம் இதோ....



சவால்....!

 "HD Kumaraswamy is a traitor.

I will quit politics if he can prove I am in touch with Amit Shah."

- Karnataka DCM D K Shivakumar



உரை...!

 Dearborn Muslim woman whose family has been in America since the 1640’s speaks in response to the anti-Islam protests.



Saturday, November 22, 2025

டிரம்ப்-மம்தானி சந்திப்பு....!

 " டிரம்ப்-மம்தானி சந்திப்பு: கவனிக்க வேண்டிய அம்சங்கள் "

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில் மக்களின் ஆமோக ஆதரவுடன் மிகப்பெரிய வெற்றியை பெற்ற முஸ்லிம் வேட்பாளர்  சஹ்ரான் மம்தானி, பல அதிரடி நடவடிக்கைகள் மூலம் நியூயார்க் மக்களின் கவனத்தை மட்டுமல்ல, அமெரிக்கா மற்றும் உலக மக்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். தேர்தலில் மிகவும் துணிச்சலான பேச்சுகள், மக்களிடம் வாக்கு கேட்கும் முறையில் புதிய அணுகுமுறை, எளிமையான வாழ்க்கை பணிகள் என அனைத்தும் கொண்டவர் தான் சஹ்ரான் மம்தானி. பாலஸ்தீன மக்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்துவரும் அவர், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயார்க் வந்தால் நிச்சயம் கைது செய்யப்படுவார் என்றும் தேர்தலுக்கு முன்பு மட்டுமல்லாமல், மேயராக தேர்வு செய்யப்பட்ட பிறகும் கூட மிக தெளிவாக, உறுதியாக தெரிவித்து வருகிறார்.

பாலஸ்தீன மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா நிதி உள்ளிட்ட எந்தவித உதவிகளையும் வழங்கக் கூடாது என்பது மம்தானியின் நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டில் அவர் மிகமிக உறுதியாகவும் இருந்து வருகிறார். அமெரிக்க மக்களின் வரிப் பணம், பாலஸ்தீன மக்கள் கொல்வதற்கு பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் உறுதிப்பட கூறி வருகிறார். மேயராக தேர்வு செய்யப்பட்ட பிறகு, முதல்முறையாக வாஷிங்டன் நகருக்கு சஹ்ரான் மம்தானி சனிக்கிழமை (22.11.2025) சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். சஹ்ரான் மம்தானியின் வாஷிங்டன் பயணம் தற்போது உலகம் முழுவதும் வரவேற்றைப் பெற்றுள்ளது. அதற்கு முக்கிய காரணம், சஹ்ரான் மம்தானியின் புதிய அணுகுமுறை என்றே கூற வேண்டும். 

டிரம்ப்-மம்தானி சந்திப்பு :

நியூயார்க்கில் இருந்து வாஷிங்டன் சென்ற மம்தானி, அமரிக்க அதிபர் டொனால்ட் டிரப்பை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார்.  டிரம்ப்-மம்தானியின் இந்த சந்திப்பு பலரை, குறிப்பாக பழமைவாதிகளை ஆச்சரியப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. சில வாரங்களுக்கு முன்பு, மம்தானி தலைமையிலான நியூயார்க்கிற்கு "முழுமையான மற்றும் முழுமையான பொருளாதார மற்றும் சமூக அழிவு" ஏற்படும் என்று அதிபர் டிரம்ப் விமர்சனம் செய்து இருந்தார்.  மேலும், கூட்டாட்சி நிதியை நிறுத்தி வைப்பதாகவும் அச்சுறுத்தினார். 

ஆனால் வாஷிங்டன், டி.சி.யில், இருவரும் நட்பு சூழ்நிலையில் பேசிக் கொண்டிருந்தனர். மம்தானி நிர்வாகத்தின் கீழ் நியூயார்க்கில் வாழ்வது தனக்கு வசதியாக இருக்கும் என்று டிரம்ப் கூறினார். மேலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயரை வலுவான தலைமைத்துவ திறன்களைக் கொண்ட "பகுத்தறிவு நபர்" என்றும் டிரம்ப் பாராட்டினார். மம்தானியும் அந்த உணர்வை எதிரொலித்தார். நியூயார்க்கை அதன் குடியிருப்பாளர்களுக்கு மிகவும் மலிவு விலையில் மாற்ற டிரம்புடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகக் கூறினார். மம்தானியின் முயற்சிகளுக்கு உதவ விரும்புவதாகவும் டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறினார். மேலும், புதிய மேயரின் நியூயார்க்கர்களுக்காக பணியாற்றும் திறனில் நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார். பின்னர் சந்திப்பில், குடியேற்ற அமலாக்கம் மற்றும் மலிவு விலை குறித்த கவலைகளைப் பற்றி மம்தானி விவாதித்தார். சித்தாந்த வேறுபாடுகள் இருந்தபோதிலும், பொதுவான இலக்குகளில் ஒன்றாக இணைந்து பணியாற்ற முடியும் என்று இருவரும் ஒப்புக்கொண்டனர்.

அதிபர் டிரம்ப் கருத்து :

நியூயார்க் மேயர்  சஹ்ரான் மம்தானிவுடனான சந்திப்பு குறித்து, அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ள கருத்து, அமெரிக்க மக்களை மட்டுமல்லாமல், பல்வேறு அரசியல் தலைவர்களை வியப்பு மற்றும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.  “மம்தானி என்னிடம் குற்றத்தைப் பார்க்க விரும்பவில்லை. நானும் அவரிடம் குற்றத்தைப் பார்க்க விரும்பவில்லை. அதில் நாங்கள் உடன்படுகிறோம்” என்று டிரம்ப் கூறினார். 

“சோசலிசத்தின் பயங்கரமான விளைவுகளை” கண்டிக்கும் பிரதிநிதிகள் சபையின் வாக்கெடுப்பு குறித்து கேட்டபோது, ​​மம்தானி கவலைப்படவில்லை என்றார். ஒரு ஜனநாயக சோசலிஸ்டாக, தனது கவனம் வரவிருக்கும் வேலையில் இருப்பதாக அவர் கூறினார். “மக்களுக்கு வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம் என்பது எனக்குத் தெரியும். ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால், நியூயார்க் நகரத்தை வாழத் தகுதியானதாக மாற்ற நாம் செய்ய வேண்டிய வேலை” என்று மம்தானி கூறினார்.

ஜனநாயகத்தின் சரியான எடுத்துக்காட்டு :

அமெரிக்காவில் அதிபர் டிரம்புக்கும் நியூயார்க் நகர மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சஹ்ரான் மம்தானிக்கும் இடையிலான இந்த சந்திப்பு இந்தியாவில் உள்ள சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து கருத்து கூறியுள்ள காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூர், இந்தியாவில் இதுபோன்ற ஜனநாயக நடைமுறைகளைக் காண விரும்புவதாகக் கூறியுள்ளார். 

இந்த சந்திப்பு ஜனநாயகத்தின் சரியான எடுத்துக்காட்டு என்று சசி தரூர் தெரிவித்துள்ளார். நியூயார்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மற்றும் தெற்காசிய மேயராக மம்தானியின் வரலாற்று வெற்றியை முன்னதாகப் பாராட்டிய தரூர், மக்கள் தீர்ப்பிற்குப் பிறகு தலைவர்கள் எவ்வாறு தேர்தல்களில் கடுமையாகப் போராட முடியும். ஆனால் பொது நன்மைக்காக ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்பதையும் டிரம்ப்-மம்தானி சந்திப்பு காட்டுகிறது என்று அவர் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். டிரம்ப்-மம்தானி நல்லிணக்கத்தை பாராட்டிய தரூர், ஜனநாயகம் இப்படித்தான் செயல்பட வேண்டும் என்றும், தேர்தல்களில் உங்கள் கருத்துக்காக எந்தவித தடைகளும் இல்லாமல், உணர்ச்சிவசப்பட்டுப் போராடுங்கள். ஆனால் தேர்தல் முடிந்ததும், மக்களின் தீர்ப்பு வந்ததும், நீங்கள் இருவரும் சேவை செய்வதாக உறுதியளித்த நாட்டின் பொதுவான நலன்களுக்காக ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க கற்றுக்கொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிலும் இதுபோன்ற காட்சிகளைக் காண தாம் விரும்புவதாக கூறியுள்ள காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், அதற்காக தனது பங்கை ஆற்ற முயற்சிக்க போவதாகவும் தெரிவித்துள்ளார். 

உண்மையில் அதிபர் டிரம்புக்கும், நியூயார்க் நகர மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சஹ்ரான் மம்தானிக்கும் இடையிலான சந்திப்பு மிகமிக தெளிவான ஒரு பார்வையை, நல்ல அம்சத்தை, கருத்தை உலகின் முன் வைத்துள்ளது. தேர்தல்களின்போது எப்படி எதிர்த்து செயல்பட்டாலும், தேர்தல் முடிந்ததும், நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும். அப்போது தான், நாட்டில் உண்மையான வளர்ச்சி, அமைதி, முன்னேற்றம், பொருளாதார மேம்பாடு ஏற்படும். அந்த வகையில், அதிபர் டிரம்ப் மற்றும் நியூயார்க் மேயர் சஹ்ரான் மம்தானியின் வாஷிங்டன் சந்திப்பு இந்திய அரசியல் தலைவர்களுக்கு மட்டுல்லமல்லாமல், ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டு அனைவருக்கும்  ஒரு நல்ல பாடத்தை சொல்லியுள்ளது என்பது மறக்க முடியாத உண்மையாகும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


மன வேதனையுடன்...!

 Today at Masjid an-Nabawi, after completing all the necessary formalities, the final burial procedures were carried out for all the victims of the Makkah–Madinah Highway road accident who belonged to Hyderabad.



ஒழுக்கம்....!

 She really explained how discipline can change your entire life.



Meeting...!

 Trump on Mamdani (all in one place).

This is how democracy should work. Fight passionately for your point of view in elections, with no rhetorical holds barred. But once it’s over, & the people have spoken, learn to cooperate with each other in the common interests of the nation you are both pledged to serve. I would love to see more of this in India — and am trying to do my part.



Friday, November 21, 2025

விளக்கம்....!

 பீகார் சட்டமன்றத் தேர்தல்...!

SIR....!

முறைகேடுகள் எப்படி நடைபெறுகிறது...!

காங்கிரஸ் விளக்கம்...!



Thursday, November 20, 2025

78வது தப்லீக் ஜமாஅத் இஜ்திமா....!

 " போபாலில் நடைபெற்ற 78வது தப்லீக் ஜமாஅத் இஜ்திமா "

உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் மத்தியில் நல்ல ஒழுக்கச் சிந்தனைகள், பண்புகள், ஆன்மீக பயிற்சிகள், சகோரத்துவ குணங்கள் உள்ளிட்டவற்றை சொல்லித்தரும் ஒரு இஸ்லாமிய அமைப்பாக தப்லீக் ஜமாஅத் இருந்து வருகிறது. இந்தியாவின் பல நகரங்களில் தப்லீக் ஜமாஅத் மூலம், அவ்வப்போது இஜ்திமா எனும் மாநாடுகள் மிகவும் அமைதியான முறையில் நடத்தப்பட்டு வருகின்றன. எந்தவித ஆர்ப்பாட்டம், விளம்பரம் என எதுவும் இல்லாமல் வாய்மொழியாக பரப்படும் இஜ்திமா தொடர்பான தகவல்கள் மற்றும் செய்திகள் மூலம், முஸ்லிம்கள் தங்களுடைய சொந்த பணத்தை செலவு செய்து இத்தகைய இஜ்திமாவில் கலந்துகொண்டு, இறை நம்பிக்கையை மேலும் வலிமையாக மாற்றிக் கொள்கிறார்கள். நல்ல ஒழுக்கச் சிந்தனைகளை வளர்த்துக் கொள்கிறார்கள். 

78வது தப்லீக் ஜமாஅத் இஜ்திமா :

அந்த வகையில், மத்திய பிரதேச தலைநகர் போபாலில் அண்மையில் 78வது தப்லீக் ஜமாஅத் இஜ்திமா நடைபெற்றது. 600 ஏக்கர் பரப்பளவில் மிகவும் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இஜ்திமா,  நவம்பர் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்றது. இஜ்திமாவில் 240 உணவுக் கடைகள் அமைக்கப்பட, 25 ஆயிரம் தன்னார்வலர்கள் சிறப்பான பணியை செய்ய, உலகம் முழுவதும் இருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிகள் கலந்துகொண்டனர்.

இந்தியா முழுவதும் இருந்து மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழுக்கள் இந்த இஜ்திமாவில் கலந்துகொண்டு சிறப்பித்தன. இஜ்திமாவில் 300 நிக்ஹாக்கள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை தொடங்கிய இஜ்திமா திங்கள்கிழமை (17.11.2025)  காலை உலக அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான ஒரு பிரமாண்டமான 'துஆ' (பிரார்த்தனை) உடன் முடிவடைந்தது. இந்த இஜ்திமாவில், லட்சக்கணக்கான முஸ்லிம்கள் கூடியபோதும் எந்தவித பிரச்சினையும், நெரிச்சலும் ஏற்படவில்லை. சுமார் 10 லட்சம் வரை இஜ்திமாவில் மக்கள் கூடியதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

பிரமாண்ட ஏற்பாடுகள் :

போபாலின் புறநகரில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஐன்ட்கெடியில் இந்த 78வது தப்லீக் இஜ்திமா நடைபெற்றது. இந்த ஆண்டு, ஏற்பாட்டாளர்கள் பரந்த கூட்டத்தை இடமளிக்க மிகவும் சிறப்பான, முறையான ஏற்பாடுகளைச் செய்து இருந்தனர்.  பிரதான  பெவிலியன் 120 ஏக்கர் பரப்பளவையும், வாகன நிறுத்துமிடம் 350 ஏக்கர் பரப்பளவையும், முழு இஜ்திமா தளமும் கிட்டத்தட்ட 600 ஏக்கர் பரப்பளவையும் கொண்டு இருந்தது.. சமீபத்திய டெல்லி குண்டுவெடிப்பைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.  நிர்வாகக் குழு மற்றும் காவல்துறையினர் இருவரும் இஜ்திமா நடைபெறும் இடத்தை தீவிரமாக மேற்பார்வையிட்டு, மிகச் சிறந்த முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். 

இஜ்திமாவை ஒட்டி, ஒரு வாரமாக தன்னார்வலர்களின் உதவியுடன் போக்குவரத்து, மருத்துவம், போக்குவரத்து மற்றும் பிற உள்கட்டமைப்பு சேவைகள் நிர்வகிக்கப்பட்டன. கரோண்ட் சந்திப்பிலிருந்து ஐன்ட்கெடி வரை, ஜமாஅத்தினர் தொடர்ந்து வந்ததால் சாலைகள் தொடர்ச்சியான ஊர்வலத்தைப் போல இருந்தன. பலர் திங்களன்று இறுதி நிகழ்வுகளில் பங்கேற்க இரவு தங்கத் தேர்ந்தெடுத்தனர்.

உலக அமைதிக்காக துஆ :

இறுதி அமர்வு திங்கட்கிழமை (17.11.2025) காலை திட்டமிடப்பட்டு, மிகச் சிறந்த முறையில் நடைபெற்றது. அப்போது உலக அமைதிக்காக பிரமாண்டமான 'துஆ' காலை 10 மணியளவில் தொடங்கியபோது, அதில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அதில் கலந்துகொண்டு, கண்ணீர் சிந்தி, மனம் உருகி, இந்திய நாட்டின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் மேலும் உலக அமைதிக்காகவும், பாலஸ்தீன மக்களுக்காகவும்  ஏக இறைவனிடம் கையேந்தி  பிரார்த்தனை செய்தனர். 

இதற்கிடையில், பழைய இஜ்திமா தளமான தாஜ்-உல்-மசாஜித்-ராயல் சந்தைப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் கடைகள், குறிப்பாக அவசர மற்றும் பொது வாகனங்களைப் பாதித்தன. பிரதான அணுகு சாலைகளில் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் மற்றும் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தாலும், ராயல் சந்தையில் போக்குவரத்து மேலாண்மை குறைவாகவே இருந்தது.  

 300 நிக்ஹாக்கள் :

முதல் நாளில், பாரம்பரியத்தின் படி 300 நிக்ஹாக்கள் செய்யப்பட்டன. மௌலானா யூசுப் புதுமணத் தம்பதிகளுக்கு எதிர்பார்க்கப்படும் நடத்தை குறித்து வழிகாட்டுதலை வழங்கினார். குறைந்த கட்டணத்தில் ஜமாஅத்தினருக்கு உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 240 கடைகள் பல்வேறு பொருட்களை வழங்கின. இஜ்திமா குழுவைச் சேர்ந்த 25 ஆயிரம் தன்னார்வலர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள், நிர்வாகம் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த 5 ஆயிரம் ஊழியர்கள் உட்பட மொத்தம்  35 ஆயிரம் பணியாளர்கள் இஜ்திமா நடந்த இடத்தில் நிறுத்தப்பட்டனர். அவர்கள் சுகாதாரம், போக்குவரத்து, நீர் வழங்கல், பாதுகாப்பு மற்றும் உணவு ஏற்பாடுகளை நிர்வகித்து அழகிய முறையில் தங்களை சேவையை வழங்கினார்கள்.  தீயணைப்பு படை குழுக்கள் மற்றும் வாகனங்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. 

இந்த ஆண்டு நடந்த இஜ்திமா மற்றொரு பெரிய அளவிலான, உன்னிப்பாக நிர்வகிக்கப்படும் கூட்டத்தைக் குறிக்கும் வகையில் வெற்றிகரமாக அமைந்து இருந்தது. இது நிகழ்வின் நீடித்த முக்கியத்துவத்தையும், உலகம் முழுவதிலுமிருந்து பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை நடத்துவதற்குத் தேவையான பாரிய ஒருங்கிணைப்பையும் நிரூபிக்கும் வகையில் தப்லீக்  ஜமாஅத் இஜ்திமா அமைந்து இருந்தது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்