Tuesday, August 29, 2023

இணையதள அடிமை....!

கோடி நன்மைகளை வாரி வழங்கும் இணையதளங்களுக்கு எளிதில் அடிமையாகும் போக்கு இளைஞர்களிடையே தற்போது அதிகரித்துள்ளது. 

இணையதளங்களில் மூழ்கி கிடக்கும் இளைஞர்களால், குடும்ப உறவுகள் சீர்குலைந்து,  மன நோய்க்கும். ஆளாகும் நிலை உருவாகிறது.  

வீட்டில் இருந்தபடியே பயணச்சீட்டு பதிவு! வெளிநாட்டு  நண்பர்களுடன் உரையாடல்!! கை நுனியில் வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்கள்!!! 

இப்படி, கோடி நன்மைகளை வாரி வழங்குகின்றன நவீன இணையதளங்கள். இது மட்டுமல்லாமல், கணினி விளையாட்டு முதல், புதிய தொழில்நுட்பம் வரை,  பல தகவல்கள் இணையதளங்களில் கொட்டிக் கிடக்கின்றன. 

இதனால், மாணவர்கள்,  இளைஞர்கள் என அனைத்து தரப்பினரையும் தன்வசமாக்கியுள்ளது இணையதளம். 

வீட்டுக்கு வீடு தொலைக்காட்சி பெட்டிகள் என்ற நிலை மாறி தற்போது இணையதளங்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளன. 

மடிக்கணினி, கைப்பேசியில் இணையதளம்  என்ற நவீன  தொழில் நுட்ப வளர்ச்சி, இளைஞர்களை சுண்டி இழுத்து பல மணி நேரம் இணையதளத்திலேயே மூழ்கச் செய்கிறது.  

இதனால், குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பு குறைந்து, உறவுகள் சீர்குலைந்து போக இணையதளம் முக்கிய காரணியாக அமைந்து விடுகிறது.

இணையதளங்களின் வசதியால் கவரப்பட்ட இளைஞர்கள், தற்போது அதற்கு அடிமையாகி வருகின்றனர். 

பிரான்ஸ் நாட்டு ஆய்வாளர் ஒருவர், அண்மையில் நடத்திய ஆய்வில், உலக அளவில் 20 விழுக்காட்டினர் இணையதளங்களுக்கு அடிமையாகிய இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது நீடித்தால் மிகப் பெரிய விபரீதங்களை ஏற்படும் என மனநல வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். 

அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து என்ற பொனமொழியை மனதில் ஏற்றிக் கொண்டு இணையதளங்களை பயன்படுத்த வேண்டும். 

இதன்மூலம் மட்டுமே, இணையதள பலன்களை அனுபவித்து, மிகப் பெரிய ஆபத்துகளில் இருந்து தப்பிக்கலாம். 

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: