Friday, September 1, 2023

பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் நம்பிக்கை...!

நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெற்று 

புதிய வரலாறு படைக்கும்....!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் 

பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் நம்பிக்கை.....!!


மும்பை, செப்02-

மும்பையில் நடந்த இந்தியா கூட்டணி தலைவர்களின் கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கலந்துகொண்டார். கூட்டத்திற்கு முன்பு, இந்தியா கூட்டணியின் அவசியம் குறித்து அவர் அளித்த சிறப்பு நேர்காணல் இதோ:

பல்வேறு இனங்களை கொண்ட நாடு:

இந்தியா என்பது பல்வேறு, மொழி, கலாச்சரம், பண்பாடு மற்றும் இனங்களை கொண்டு ஓர் அற்புதமான நாடு. இந்தியா என்பது வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கை கொண்ட நாடு. இந்தியா என்பது சமய நல்லணிக்கத்தின் ஒரு இதயமாகும். இதுதான் இந்தியாவின் கலாச்சராம், பண்பாடு ஆகும். இதுதான் இந்தியாவின் உண்மையான வரலாறு. இதுதான் நாட்டின் பழைமையான வரலாறு. இந்த பழைமையான வரலாற்றை மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட நாட்டின் அனைத்து தலைவர்களும் கடைபிடித்து தங்களுடைய பணிகளை மிகச்சிறந்த முறையில் ஆற்றினார்கள். விவேகானந்தர் உள்ளிட்டோர் ஆரம்பித்த இந்த பண்பாட்டை நம்முடைய தலைவர்கள் கடைப்பிடித்து, எதிர்கால தலைமுறைக்கு அளித்து வந்தார்கள். 

புதிய வரலாறு படைக்கும்:

இது உன்னத கொள்கைதான், இந்தியா கூட்டணியின் கருத்தாகும். இந்தியா கூட்டணி தனது பாட்னா, பெங்களுரு ஆலோசனைக்குப் பிறகு, தற்போது மும்பையில் கூடியுள்ளது. மும்பையில் நடைபெறும் இந்த கூட்டம், நாட்டின் வரலாற்றில் உண்மையாகவே ஒரு மைல்கல் என கூறலாம். 

இந்தியா கூட்டணியின் மும்பை கூட்டம், நாட்டில் புதிய வரலாறு படைக்கும். அத்துடன் வரும் தேர்தலில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெற்று, உண்மையில் புதிய வரலாற்றை உருவாக்கும். இதுதான் இந்தியா கூட்டணியின் இலக்காக இருந்து வருகிறது.

ஒற்றுமை, ஒருமைப்பாடு:

இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றிற்காக தொடர்ந்து பாடுபட்டு தனது பணிகளை ஆற்றி வருகிறது. கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் முஸ்லிம் சமுதாயம் பல்வேறு பலன்களை அடைந்து வந்தது. இ.யூ.முஸ்லிம் லீகின் கோரிக்கைகளை ஏற்று, காங்கிரஸ் அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியது.  முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு, சச்சார் கமிட்டி அமைப்பு, நீதிபதி மிஸ்ரா கமிட்டி அமைப்பு, ஆசாத் பவுண்டேஷன் அமைப்பு, அலி பல்கலைக்கழகம் அனைத்து மாநிலங்களிலும் தனது கிளைகளை அமைத்துக் கொண்டு செயல்பட அனுமதி என பல்வேறு நல்ல பணிகள் காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்றன. மறைந்த பிரதமர் இந்திரா காந்தி முதல் சோனியா காந்தி வரை, முஸ்லிம் சமுதாயம் பல்வேறு சலுகைகளை பெற்று வந்தது. 

பாஜக ஆட்சியில் பாதிப்பு:

ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, முஸ்லிம் சமுதாயத்திற்கு காங்கிரஸ் அரசால் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், சலுகைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. எனவே, இந்தியா கூட்டணி, முஸ்லிம் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட சலுகைகள், திட்டங்களை ஆகியவற்றை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். நாங்கள் நாட்டின் ஒற்றுமைக்காக பணியாற்றி வருகிறோம். நாட்டில் சமூக, மத நல்லிணத்திற்காக குரல் கொடுத்த வருகிறோம். 

ஜெய் இந்தியா, ஜெய் பாரத்:

எனவே, நாங்கள் தமிழ்நாட்டில் ஜெய் இந்தியா, ஜெய் பாரத் என்ற முழக்கத்தை கூறி வருகிறோம். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நாங்கள் இந்த முழக்கதை தொடர்ந்து சொல்லி வருகிறோம். இந்த முழக்கம் இந்தியா முழுவதும் ஒலிக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். ஒன்றுபடும் பாரதம், வெற்றி பெறும் இந்தியா என்ற கருத்து இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதுதான் உண்மையான இந்தியா. போலியான இந்தியா கிடையாது. பாஜக ஆட்சியில் போலியான இந்தியாவை உருவாக்கி, பிரிவினையை ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால், நாங்கள் ஒற்றுமையான, உண்மையான இந்தியாவை மீண்டும் கொண்டு வருவோம். 

இந்தியா கூட்டணியால் நாட்டிற்கு பலன் :

அது, மதசார்ப்பற்ற, அமைதியான, வேற்றுமையில் ஒற்றுமை, பல்வேறு கலாச்சாரங்கள் கொண்ட சிறப்பாக இந்தியாவாக இருக்கும். இதுதான் நமது நாட்டின் கலாச்சாரம். இதுதான் இந்தியா கூட்டணியின் முக்கிய இலட்சியம். அதற்காக நாங்கள் இங்கு கூடியிருக்கிறோம். இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சி தலைவர்களும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் நெறிமுறைகளையும், ஜனநாயகத்தையும், சமூக மற்றும் மதசார்ப்பற்ற கொள்கை, சமூக பாதுகாப்பு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அனைத்துத் துறைகளிலும் இடஓதுக்கீடு ஆகியவை இந்த கூட்டத்தில் விவாதிக்க உள்ளனர். கூட்டத்தில் நல்ல முடிவுகள் எடுக்கப்படும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இது அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் பலன் அளிக்கும். 

========================

No comments: