"90 கோடி ரூபாய்க்கு ஏலத்திற்கு விற்பனையான வெள்ளை நிற பருந்து"
உலகம் பல்வேறு வகையான ஏலம் நிகழ்ச்சிகள் நடைபெறுவதை நாம் கண்டும் கேட்டும் இருக்கிறோம். அந்த வரிசையில் சவூதி அரேபியாவின் ரியாத்தின் வடக்கே உள்ள மல்ஹாமில் உள்ள அதன் தலைமையகத்தில் சவூதி பருந்து கிளப் ஏற்பாடு செய்த சர்வதேச பருந்துகள் ஏலம் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்று பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மொத்தம் 21 நாட்கள் நடைபெற்ற இந்த பருந்துகள் ஏலம் நிகழ்ச்சியில், மொத்த விற்பனை 13 மில்லியன் ரியால்களைத் தாண்டியது
இந்தாண்டு மொத்தம் ஆயிரத்து 103 பருந்துகள் விற்பனை செய்யப்பட்டதாக சவூதி ஃபால்கன்ஸ் கிளப்பின் (பருந்துகள் கிளப்) அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் வலீத் அல்-தவீல் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 23 நாடுகளைச் சேர்ந்த 67 பருந்து பண்ணைகள் பங்கேற்றன. ஏலம் கடந்த ஆண்டை விட வலுவான வளர்ச்சியைக் காட்டியது. விற்பனை மதிப்புகள் 23 சதவீதம் அதிகரித்தன. விற்பனையான பருந்துகளின் எண்ணிக்கை 27 சதவீதம் அதிகரித்தது. இதேபோன்று, இந்தாண்டு பங்கேற்ற நாடுகளின் எண்ணிக்கை 21 சதவீதம் அதிகமாக இருந்தது. மேலும் ஏலத்தில் பங்கேற்ற பண்ணைகளின் எண்ணிக்கையும் 20 சதவீதம் அதிகரித்தன. இது ஏல நிகழ்வின் தொடக்கத்திலிருந்து தொடர்ச்சியான வளர்ச்சியைக் காட்டும் வகையில் அமைந்து இருந்தது.
ரூ.90 கோடிக்கு விற்பனையான பருந்து :
இந்தாண்டு ஏலத்தில் விதிவிலக்கான பருந்துகள் இடம்பெற்றிருந்தன. இதில், இந்த ஆண்டின் மிகவும் விலையுயர்ந்த அரிய வகை பருந்து ஒன்று, 1 புள்ளி 2 மில்லியன் ரியால்களுக்கு விற்பனையான "கைர் ப்யூர் சூப்பர் ஒயிட்" அடங்கும். இதன் இந்திய மதிப்பு 90 கோடி ரூபாயாகும். அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆர்.எக்ஸ். பண்ணையைச் சேர்ந்த சூப்பர் வெள்ளை தூய கிர் ஃபார்க் என்ற பறவை, இந்த ஆண்டு மதிப்புமிக்க நிகழ்வில் விற்கப்பட்ட மிகவும் விலையுயர்ந்த பருந்தாக மாறி இருந்தது.
சவூதி பருந்துகள் கிளப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஏலம், உலகம் முழுவதிலுமிருந்து பருந்து வளர்ப்பாளர்களுக்கு ஒரு முக்கிய தளமாக மாற்றியது. பருந்து வாங்குபவர்களையும் ஆர்வலர்களையும் ஈர்த்தது. அதேநேரத்தில் சவூதி அரேபியாவின் வளமான பருந்து வளர்ப்பு பாரம்பரியத்தையும் பாதுகாக்கும் வகையில் இருந்தது. இத்தகைய நிகழ்வுகள் பருந்துகள் கலாச்சாரத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், சர்வதேச கவனத்தையும் முதலீட்டையும் ஈர்ப்பதன் மூலம் தேசிய பொருளாதாரத்தையும் வலுப்படுத்துகின்றன என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
பருந்துகள் அரேபிய பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. மேலும் சமூக ஊடகங்கள் அதன் பிரபலத்தைப் பரப்புவதால், பல நூற்றாண்டுகள் பழமையான இந்த பாரம்பரியத்தில் அதிகமான இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். ரியாத் ஏலம் உலகெங்கிலும் உள்ள சிறந்த பருந்துகளில் சிலவற்றைக் காட்டும் வகையில் இருந்தது.
நம்பகமான தளம் :
இந்த ஏலம் சவூதி அரேபியா மற்றும் சர்வதேச அளவில் இருந்து உயர்மட்ட வளர்ப்பாளர்கள் மற்றும் பருந்துகளை ஒன்றிணைக்கும் நம்பகமான தளமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இந்த ஏல நிகழ்ச்சி அறிவு பரிமாற்றத்தை வளர்ப்பதுடன், இந்த செழிப்பான துறையில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குகிறது என்று பருந்துகள் சிளப்பின் செய்தித் தொடர்பாளர் வலீத் அல்-தவீல் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஏலம் தொடங்கப்பட்டது. இதில் உள்ளூர் மற்றும் சர்வதேச பருந்து பண்ணைகள் மிகவும் ஆர்வத்துடன் இடம்பெற்றன. பருந்து இனப்பெருக்கப் பண்ணைகளுக்கான பிரத்யேக பிரிவுகள், பருந்து உபகரண சப்ளையர்கள், "எதிர்கால பருந்துகள்" பெவிலியன் மற்றும் பராமரிப்பு மற்றும் இனப்பெருக்க நுட்பங்களை வெளிப்படுத்தும் பருந்து வளர்ப்பாளர்களின் ஊடாடும் ஆர்ப்பாட்டங்கள் ஆகியவை இந்த நிகழ்வில் இடம்பெற்றன. இந்த விரிவான அணுகுமுறை, உலகளவில் பருந்து ஆர்வலர்கள் மற்றும் நிபுணர்களுக்கு ஏலத்தை ஒரு முதன்மையான இடமாக மாற்றியது.
முக்கிய சீசன் :
சவூதி பருந்துகள் கிளப்பின் சீசன் 122 நாள் ஏலங்கள், கண்காட்சிகள், பந்தயங்கள் மற்றும் சாம்பியன்ஷிப்களுடன் தொடர்கிறது. வரவிருக்கும் நிகழ்வுகளில் சவூதி சர்வதேச பருந்துகள் மற்றும் வேட்டை கண்காட்சி (அக்டோபர் 2-11), மால்வா பந்தயம் (அக்டோபர் 5-10), சவுதி ஃபால்கன்ஸ் கிளப் ஏலம் (அக்டோபர் 1 - நவம்பர் 30), சவுதி ஃபால்கன்ஸ் கிளப் கோப்பை சாம்பியன்ஷிப் (நவம்பர் 23-30) மற்றும் சீசன் இறுதிப் போட்டி - கிங் அப்துல்அஜிஸ் ஃபால்கன்ஸ் விழா (டிசம்பர் 25 - ஜனவரி 10, 2026) ஆகியவை அடங்கும். இந்த மாறுபட்ட திட்டம் உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் பருந்துகள், ஆர்வலர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment