Friday, August 15, 2025

இ.யூ.முஸ்லிம் லீக் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தினம்...!

 

இந்திய மாநிலங்களில் .யூ.முஸ்லிம் லீகின் வளர்ச்சி வேகம் எடுத்துள்ளது

.யூ.முஸ்லிம் லீகின்வரலாறு தெரியாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வன்மமாக பேசுகிறார்

இஸ்லாமிய மதம் குறித்து பரப்பப்படும் பொய் செய்திகளை தடுக்க அனைவரும் பணியாற்ற முன்வர வேண்டும்

79வது சுதந்திர தினத்தையொட்டி .யூ.முஸ்லிம் லீக் தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேச்சு

 

சென்னை, ஆக.16- இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வரலாறு தெரியாமல், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, வன்மமாக கருத்து தெரிவித்து இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என .யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின விழா :

நாட்டின் 79வது சுதந்திர தின விழா 15.08.2025 வெள்ளிக்கிழமையன்று நாடு முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் சென்னையில் உள்ள .யூ.முஸ்லிம் லீக் தலைமை அலுவலகமான காயிதே மில்லத் மன்ஸிலில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் கே..எம்.முஹம்மது அபூபக்கர், அனைவரையும் வரவேற்று பேசினார். அப்போது, தமிழக அரசின் சார்பில் தலைவர் அவர்களுக்கு வழங்கப்பட்ட தகைசால் தமிழர் விருது, பெற்ற மகிழ்ச்சியில் முஸ்லிம் லீக் தொண்டர்கள் சுதந்திர தின விழாயை சேர்த்து கொண்டாடுவதாக அவர் குறிப்பிட்டார். தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது முஸ்லிம் சமுதாயத்திற்கு அளிக்கப்பட்ட பெருமை என்று குறிப்பிட்ட அவர், விழாவிற்கு வந்த அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

பேராசிரியர் உரை :

இதைத் தொடர்ந்து விழா பேரூரையை ஆற்றிய பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தகைசால் தமிழர் விருது தமக்கு அளித்து தமிழக முதலமைச்சர் மு..ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து பேசிய அவரது உரையின் விவரம் வருமாறு :

இ.யூ.முஸ்லிம் லீக் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழாவிற்கு வந்துள்ள அனைவருக்கும் 79வது சுதந்திர தின வாழ்த்துகளை கூறிக் கொள்கிறேன். அடுத்த ஆண்டு நாம் டெல்லியில் இயங்கும் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழாவை கொண்டாட இருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோன்று, ஒவ்வொரு மாநில முஸ்லிம் லீக் அலுவலகங்களிலும் வழக்கம் போல சுதந்திர விழா கொண்டாடப்படும்.

பிரிட்டீஷ் ஆட்சியில் இருந்த நாட்டின் சுதந்திரத்திற்கு முஸ்லிம்கள் சாதாரணமானது அல்ல. முஸ்லிம்கள் ஆற்றிய பங்களிப்பை யாரும் மறைக்கவும் மறுக்கவும் முடியாது. முஸ்லிம்களின் தியாகம் இல்லாமல், நாடு விடுதலை அடைந்து இருக்க முடியாது. ஆனால் தற்போது முஸ்லிம்களை ஒதுக்கிவிட்டு, அவர்களின் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகளை ஒருசில செய்து வருகிறார்கள். அவர்களின் சதி வேலைகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து எதிர்த்து குரல் கொடுத்து வருகிறது.

.யூ.முஸ்லிம் லீகின் செயல்பாடுகள் காரணமாக, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் வலிமையாக இருக்கும் .யூ.முஸ்லிம் லீக் தற்போது நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் முஸ்லிம்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் முறையான அமைப்புகள் உருவாக்கப்பட்டு, முஸ்லிம் லீக் இயங்கி வருகிறது.

தலைநகர் டெல்லியில் வரும் 24ஆம் தேதி காயிதே மில்லத் சென்டர் திறக்கப்பட இருப்பதே, இதற்கு முக்கிய சான்றாக இருந்து வருகிறது. இந்த காயிதே மில்லத் சென்டர், நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வலுவான முஸ்லிம் லீக் அமைப்புகளை உருவாக்க தனது பணிகளை இனி தொடர்ந்து ஆற்றும். தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள், பணிகள் மூலம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் .யூ.முஸ்லிம் லீகின் வளர்ச்சி வேகம் எடுத்துள்ளது. இந்த வளர்ச்சி இன்னும் விரிவு அடைந்து சமுதாயத்திற்கு பலன் அளிக்கும் வகையில் இருக்கும் என்பது உறுதி.

ஆளுநருக்கு கண்டனம் :

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் குறித்து தவறான கருத்தை தெரிவித்து இருக்கிறார். நாடு பிரிவினைக்கு முஸ்லிம் லீகும் ஒரு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வரலாற்றை சரியாக தெரியாமல், அல்லது அறிந்துகொள்ளாமல், ஆளுநர் இப்படி கருத்து கூறி இருப்பது வன்மையாக கண்டனத்திற்குரியது. முஸ்லிம் லீக் எப்போது பிரிவினையை ஆதரிக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் பிரிவினைக்கு முக்கிய காரணமாகும்.

நாடு விடுதலை அடைந்தபிறகு, .யூ.முஸ்லிம் லீக் நாட்டின் ஒற்றுமைக்கும், முன்னேற்றத்திற்கும் ஆற்றிவரும் பங்களிப்பை அனைவரும் அறிந்த ஒன்றாகும். இப்படிப்பட்ட இயக்கத்தின் மீது குரோத எண்ணத்துடன் தமிழக ஆளுநர் வன்மமான கருத்துகளை தெரிவித்து, முஸ்லிம் லீகை கடுமையாக சாடி இருப்பதற்கு நாங்கள் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம். உண்மையான வரலாற்றை ஆளுநர் படிக்க வேண்டும். முஸ்லிம்களின் தியாகங்களை அறிந்துகொள்ள வேண்டும். சுதந்திரத்திற்கு முஸ்லிம்கள் ஆற்றிய பங்களிப்பைகளை அறிந்துகொண்டு, இனி முஸ்லிம்களையும், முஸ்லிம் லீகையும் விமர்சனம் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அனைவரும் பணியாற்ற வேண்டும் :


தற்போதைய ஒன்றிய பாஜக ஆட்சியில் இந்திய முஸ்லிம்கள் நெருக்கடியான காலக்கட்டத்தில் இருந்து வருகிறார்கள். முஸ்லிம்கள் குறித்தும் இஸ்லாமிய மார்க்கம் குறித்தும் பொய் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. இஸ்லாம் வந்த மதம் என்று பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. உண்மையில், இந்தியாவின் தமிழகத்தில் இருந்து தான் இஸ்லாம் அரேபியாவிற்கு சென்றது. பின்னர் மீண்டும் இந்தியாவிற்கு வந்தது. இதுதான் உண்மை வரலாறு ஆகும்.

இஸ்லாம் வந்த மதம் கிடையாது. தமிழகத்தின் சொந்த மதமாகும். உண்மையான ஆய்வுகள் இதை தான் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. உண்மை இப்படி இருக்க, இஸ்லாம் மதம் குறித்தும், இஸ்லாமியர்கள் குறித்தும், பரப்பப்படும் தவறான கருத்துகளை நாம் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற முன்வர வேண்டும். இந்த பணியில் .யூ.முஸ்லிம் லீக் தொண்டர்கள் இன்றுமுதல் ஈடுபட வேண்டும். அதன்மூலம் தவறான பரப்புரைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

முஸ்லிம்களின் தியாகங்களை மறைத்துவிட்டு, இஸ்லாம் அந்நிய மதம் என்று செய்யப்பட்டு வரும் பிரச்சாத்தை நாம் அனைவரும் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும். அனைத்து மக்களிடமும் சகோதர நேயத்துடன் பழகி, இஸ்லாமிய நெறிமுறைகளை எடுத்துக் கூற வேண்டும். இதன்மூலம், இந்திய முஸ்லிம்கள் குறித்து பரப்பப்படும் தவறான எண்ணங்களை நிச்சயம் களையும். இந்த பணியில் முஸ்லிம் லீகினர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசினார்.

================================

No comments: