உரை....!
2014 முதல், தேர்தல் முறை குறித்து எனக்கு சந்தேகங்கள் உள்ளன. ஏதோ தவறு நடப்பதாக சந்தேகம் இருந்தது.
குஜராத் சட்டமன்றத்துக்கு நடை பெற்ற தேர்தல்களிலும் எனக்கு சந்தேகம் இருந்தது. அமோக வெற்றியுடன் வெற்றி பெறும் திறன் ஆச்சரியமளிக்கிறது.
ராஜஸ்தான் ம,பி குஜராத்தில் காங்கிரஸ் ஒரு சீட்டு கூட வெல்ல முடியாதது எனக்கு வியப்பை ஏற்படுத்தியது
மகாராஷ்டிரா மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் அடுத்த 4 மாதத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைத்தது
மகாராஷ்டிரா 3 வலிமையான கட்சிகள் திடிரென்று காணாமல் போய்விட்டன
மகாராஷ்டிரா மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்குமான இடைவெளியில் 1 கோடி வாக்காளர்கள் புதிதாக இணைந்துள்ளனர்
மராட்டியத்தில் குறுகிய காலத்தில் திடிரென்று புதிதாக சேர்க்கப்பட்ட 1 கோடி வாக்காளர்களின் ஓட்டு பாஜகவுக்கு சென்றுள்ளது.
மராட்டிய தேர்தல் தோல்விக்கு பிறகு தேர்தல் முறை கேடு குறித்து உன்னிப்பாக கவனிக்க தொடங்கினோம்
மகாராஷ்டிராவில் நடந்தது என்னை இந்தப் பிரச்சினையை தீவிரமாக எடுத்துக்கொள்ள வைத்தது. ஆதாரம் இல்லாமல் என்னால் பேச முடியவில்லை. ஆனால் இப்போது எங்களிடம் ஆதாரம் இருப்பதாக சந்தேகமின்றி சொல்கிறேன்.
தேர்தல் ஆணையம் என்ற அமைப்பு செயல்பட வேண்டியபடி செயல்படவில்லை என்பதை முழு நாட்டிற்கும் காட்டுவோம். அது சமரசம் செய்யப்பட்டுள்ளது. ஆதாரத்தைக் கண்டுபிடிக்க எங்களுக்கு 6 மாதங்கள் ஆனது. தேர்தல் ஆணையம் வழங்கும் ஆவணங்களை ஸ்கேன் செய்யவோ அல்லது நகலெடுக்கவோ முடியாது என்பதை அறிந்து நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள். வாக்காளர் பட்டியலில் ஏன் ஸ்கேன் மற்றும் நகல் பாதுகாப்பை தேர்தல் ஆணையம் பயன்படுத்துகிறது?
எதிர்க்கட்சி தலைவர் திரு RahulGandhi
No comments:
Post a Comment