மக்கள் சக்திக்கு முன்பு பாஜகவின் சர்வாதிகாரம்
மண்டியிடும்
பீகாரில்
நடைபெற்ற வாக்காளர் உரிமை பேரணியில்
தமிழ்நாடு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
பாட்னா, ஆக.27- வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற முறைகேட்டினை மக்களுக்கு முன்பு வெளிச்சம் போட்டு காட்டிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்திய மக்களுக்கு நீதி கிடைக்க ஒரு வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பீகாரில் நடைபெற்ற வாக்காளர் உரிமை பேரணியில் இன்று (27.08.2025) அவர் கலந்துகொண்டு உரையாற்றினார். அந்த உரையின் முழு விவரம் வருமாறு:
சமூக நீதி, மதசார்பற்றம் :
வாக்காளர் அதிகாரம் பேரணியை நடத்தும் என்னுடைய சகோதரர்கள் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள். உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 2 ஆயிரம் கிலோ மீட்டர் கடந்து நான் இங்கு வந்திருக்கிறேன். சமூக நீதி, மதசார்பற்றம் ஆகியவற்றின் அடையாளம் தான் லாலு பிரசாத் யாதவ். பீகார் என்றாலே மரியாதைக்குரிய லாலு பிரசாத் யாதவ் தான் எல்லோருக்கும் நினைவுக்கு வருவார்கள். தலைவர் கலைஞர் அவர்களும் லாலு பிரசாத் யாதவ் அவர்களும் மிகவும் நெருக்கமான நண்பர்களாக இருந்தார்கள். எத்தனையோ வழக்குகள், மிரட்டல்கள் வந்தாலும் பாஜகவிற்கு பயப்படாமல் அரசியல் செய்த காரணத்தினால், இந்தியாவில் மிகச்சிறந்த அரசியல் தலைவராக லாலு பிரசாத் யாதவ் உயர்ந்து நிற்கிறார். அவரது வழியில் தற்போது தேஜஸ்வி யாதவ் பணியாற்றி வருகிறார்.
பீகாரை நோக்கும் இந்தியா :
கடந்த
ஒரு மாதமாக இந்தியாவே பீகார் மாநிலத்தை தான் பார்த்துக் கொண்டு இருக்கிறது. இது தான்
பீகார் மக்களுடைய பலம். ராகுல் காந்தியின் பலம். தேஜஸ்வி யாதவின் பலம். இந்தியாவில்
ஜனநாயகத்திற்கு ஆபத்து வரும் காலங்களில் அதற்கான போர் கு‘ரலை பீகார் எழுப்பி இருக்கு
என்பது தான் வரலாறு. ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்கள் ஜனநாயகத்தின் குரலை எழுப்பி மக்கள்
சக்தியை திரட்டினார். அந்த பணியைதான் தற்போது எனது இரண்டு சகோதரர்கள் செய்துக் கொண்டு
இருக்கிறார்கள். இவர்கள் செல்லும் இடமில்லாம் மக்கள் கடல் என வருகிறார்கள். உங்களுடைய
நட்பு அரசியல் நட்பு மட்டுமல்ல, இரண்டு உடன்பிறபுகளின் நட்பு. ஜனாநயாகத்தின் காக்க
மக்கள் நலனுக்காக நீங்கள் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள். பீகார் சட்டமன்ற தேர்தலில்
உங்களுக்கு வெற்றி கிடைப்பது நிச்சயம், தேர்தலுக்கு முன்பே உங்களுடைய வெற்றி உறுதியாகிவிட்டது.
அதன் காரணமாக தான் உங்கள் வெற்றியை தடுக்க பார்க்ககிறார்கள்.
65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் :
நியாயமாக
முறைப்படி வாக்குப்பதிவு நடந்தால் பாஜக தோல்வி அடைந்துவிடும். அதன் காரணமாக மக்களை
தடுக்குகிறார். தேர்தல் ஆணையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு செயல்படுகிறார்கள்.
65 லட்சம் வாக்காளர்களை நீக்க இருப்பது கண்டிக்கக்ததது. இதை நீக்குவதறு தீவிரம் இல்லையா.
அடையாள அட்டையை வைத்துக் கொண்டு இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். சகோதரர்கள்
பெறப் போகும் வெற்றியை தடுக்க முடியாமல் மறைமுக
வழியில் வருகிறார்கள். அநியாயத்தை ஏதிர்த்து நடக்கும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள
நான் தமிழ்நாட்டில் வந்திருக்கிறேன். தேர்தல் ஆணையத்தின் மோசடிகளை ராகுல் காந்தி அம்படுப்படுத்தி
வருகிறார். ஆனால் தேர்தல் ஆணையத்தால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. ஆனால், ராகுல்
காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையம் கூறுகிறார்.
இந்த
மிரட்டலுக்கு ராகுல் காந்தி பயந்துவிடமாட்டார். ராகுல் காந்தியின் வார்த்தைகளில் பயம்
இல்லை. அரசியலுக்கு ராகுல் காந்தி பேசுவதில்லை. எதையும் கவனத்துடன் பேசும் நபர் அவர்.
பாஜக அவர் மீது ஏன் பாய்கிறார்கள் என்றால், தேர்தலை எப்படி கேலிக் கூத்தாக மாற்றிவிட்டது
என்பதை அவர் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டார். மக்கள் கூட்டம் பாஜகவின் மோசடியை நன்கு
அறிந்துகொண்டுள்ளது.
2024
நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கான அடித்தளம் பாட்னாவில் அமைக்கப்பட்டது. பாஜகவின்
கர்வத்தை தகர்த்த இடம் பாட்னா. 400 இடம் என கனவு கண்டவர்கள் 240 இடங்களிலுல் அடக்கியது
மக்கள் சக்திக்கு முன்னால் எப்படிப்பட்ட சர்வாதிகாரம் மண்டியிட வேண்டும் என்பதை பீகார்
மீண்டும் நிரூபிக்க வேண்டும். ராகுல் காந்தி இந்தியாவின் வழக்கறிஞராக இருந்து வருகிறார்.
உங்கள் முலம் இந்தியா மக்களுக்கு நீதி கிடைக்கும். மக்கள் சக்திக்கு இணையாது எதுவும்
இல்லை.பீகாரில் கிடைக்கும் வெற்றி இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு அடித்தளமாக அமையும்.
பீகார் சட்டமன்ற தேர்தல் வெற்றிக்குப்பிறகு நான் நிச்சயம் கலந்துகொள்வேன்.
இவ்வாறு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
- சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment