Monday, August 4, 2025

பிரிட்டிஷ் வரலாற்றாசிரியரின் கணிப்பு.....!

 

"பிரிட்டிஷ் வரலாற்றாசிரியரின் கணிப்பும்,

அமெரிக்க அதிபர் டிரம்பின் நடவடிக்கைகளும்"

 


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தாம் பதவி ஏற்றுக் கொண்ட நாள் முதல், தற்போது வரை செய்துவரும் நடவடிக்கைகள் அனைத்தும், சிறுபிள்ளைத்தனமாக இருந்து, மிகப்பெரிய நகைச்சுவையை ஏற்படுத்தும் வகையில் உள்ளன.  ஒவ்வொரு நாளும் அவர் உதிர்க்கும் வார்த்தைகள், உலக தலைவர்களை ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருந்து வருகின்றன. உலகின் மிகப்பெரிய வல்லரசு நாட்டில், இப்படி ஒரு நகைச்சுவை தலைவரா என உலக மக்கள் எண்ணத் தொடங்கியுள்ளனர்.

திடீரென சீனாவின் பொருட்களுக்கு கடுமையான வரி விதிக்கப்படும் என அறிவிக்கும் அவர், கனடா உள்ளிட்ட 70 நாடுகளின் பொருட்களுக்கும் வரி விதிப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அத்துடன், தற்போது இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும், ரஷ்யாவுடன் வணிக உறவுகளை வைத்துக் கொள்ளும் இந்தியாவிற்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறுகிறார். ஒருபடி மேல் சென்று, இந்தியாவின் பொருளாதாரம், மிகவும் பலவீனமான பொருளாதாரம் என்றும், பாகிஸ்தானின் இருக்கும் எண்ணெய் வளத்தின் மூலம், அதை இந்தியாவிற்கு வினியோகம் செய்யப்படும் என்றும் வாய்க்கு வந்தபடி வார்த்தைகளை அள்ளி விடுகிறார்.

உக்ரைன் மீதான போரால் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளதால்  ரஷ்யா-அமெரிக்கா இடையே மோதல் போக்கு உள்ளது.  இத்தகைய நிலையில், சோவியத் சகாப்த அணு ஆயுதத் தாக்குதல் திறன்களை ரஷ்யா கொண்டிருந்தது என்பதை டிரம்ப் நினைவில் கொள்ள வேண்டும் என ரஷ்ய முன்னாள் அதிபர் டிமித்ரி மெத்வெதேவின் வெளியிட்ட கருத்தால், ஆத்திரம் அடைந்த  டொனால்ட் டிரம்ப், திடீரென்று அணுஆயுத தாக்குதல் நடத்தும் 2 நீர்மூழ்கி கப்பல்களை ரஷ்யா நோக்கி அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இப்படி வரி விதிப்பு, அணுஆயுத தாக்குதல் என ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்றை கிளப்பிக் கொண்டு, உலக மக்களை எப்போதும் ஒருவித பதற்றத்தில் வைக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் விரும்பி வருகிறார். இந்த பின்னணியில், உலகளவில் தற்போது அமெரிக்கா பொருளாதாரத்தில் மிகவும் வலிமை மிக்க நாடாக உள்ளதா என்ற கேள்வி, சமூக ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொருளாதார நிபுணர்கள், வரலாற்று வல்லுநர்கள் என மத்தியில் எழுந்துள்ளது.

உண்மை நிலை என்ன?

அமெரிக்காவின் தற்போதைய உண்மையான நிலை என்ன என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அமெரிக்காவின் தற்போதைய நிலை என்பது ஒரு சிக்கலான மற்றும் தொடர்ச்சியான மாற்றத்தில் உள்ளது. பொருளாதார ரீதியாக, அமெரிக்கா ஒரு பெரிய மற்றும் வளர்ந்த பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் சில சவால்களை எதிர்கொண்டு வருகிறது. அரசியல் ரீதியாக, நாடு ஒரு வலுவான ஜனநாயக அமைப்பைக் கொண்டுள்ளது. ஆனால் அரசியல் துருவமுனைப்பு மற்றும் பிளவுபடுத்தும் விவாதங்கள் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக உள்ளன. சமூக ரீதியாக, அமெரிக்கா பலவிதமான கலாச்சாரங்கள் மற்றும் இனக்குழுக்களின் கலவையாகும், ஆனால் இன மற்றும் சமூக சமத்துவமின்மை பற்றிய விவாதங்கள் தொடர்கின்றன.

தொழில்துறை மற்றும் தொழில்நுட்பத்தில் ஒரு வலுவான இருப்பு அமெரிக்காவிற்கு உள்ளது. ஆனால் பிற நாடுகள் இந்த துறைகளில் அதன் இடத்தை எடுத்துக்கொள்ளும் போக்கு காணப்படுகிறது. தொழிலாளர் சந்தையில் சில ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. மேலும் சில பகுதிகளில் வேலைவாய்ப்புக்கான அணுகல் குறைவாக உள்ளது.  அமெரிக்காவில் அரசியல் துருவமுனைப்பு மற்றும் பிளவுபடுத்தும் விவாதங்கள் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக உள்ளன.  கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான அணுகல் நாடு முழுவதும் சீரற்றதாக உள்ளது. அமெரிக்காவில் குற்ற விகிதம் சில பகுதிகளில் அதிகமாக உள்ளது, மேலும் சமூக பாதுகாப்பில் கவலைகள் உள்ளன.  இந்த காரணிகளால் அமெரிக்கா ஒரு சிக்கலான மற்றும் தொடர்ச்சியான மாற்றத்தில் உள்ளது என்று கூறலாம்.

அத்துடன், அமெரிக்காவின் தற்போதைய மக்கள் தொகை எண்ணிக்கை சுமார் 35 கோடியாக இருந்து வருகிறது. உண்மையில் பொருளாதாரத்தில் அமெரிக்கா வலிமையான நாடாக இருந்தால், மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஏன் அதிகளவு வரியை விதிக்க வேண்டும் என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகிறார்கள். சொந்த மக்களிடம் இருந்து வரி வசூலிக்கும் தைரியம் இல்லாத காரணத்தால், இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளின் பொருட்கள் மீது அதிக வரி விதித்து அதன்மூலம் தம்முடைய கஜானாவை நிரப்பி, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஒரு தொழில் அதிபராக இருக்கும் டொனால்ட் டிரம்ப் விரும்புகிறார்.  அமெரிக்காவின் மக்கள் தொகையே 35 கோடி, இதன்மூலம், வெளிநாடுகளுக்கு அமெரிக்கா மிகப்பெரிய வணிகச் சந்தை என்று கூற முடியாது. சீனா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் மக்கள் தொகை நூறு கோடியை தாண்டி உள்ளது. இந்த நாடுகளின் வணிகச் சந்தை மிகப்பெரிய சந்தையாக இருந்து வருகின்றன.

அமெரிக்க நாட்டிற்கு தான், தங்களது உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்து, அதன்மூலம், பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நிலையில், இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் இல்லை. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதிக்கும் அதிக வரி விதிப்புகளை ஏற்றுக் கொள்ளாமல், தங்களுடைய சொந்த நாட்டிலேயே பொருட்களை விற்பனை செய்தால், அந்த நாடுகள் பொருளாதார பிரச்சினைகளை எளிதாக தாங்கிக் கொள்ளும். இதேபோன்று, அமெரிக்காவை கைவிட்டு விட்டு, உலகின் பல நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்தாலும், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

உலகின் பல நாடுகள் எடுக்கும் முடிவுகளால், மிகப்பெரிய அளவுக்கு பாதிக்கப்படும் நாடாக அமெரிக்கா மாறிவிடும். அதன் வாங்கும் சக்தி குறைந்து, பொருளாதாரம் படிப்படியாக பின்னோக்கிச் சென்றுவிடும். நிலைமை இப்படி, இருக்க, இந்தியாவை பார்த்து, இந்தியா ஒரு பலவீனமான பொருளாதார நாடு என டிரம்ப் விமர்சனம் செய்கிறார். உண்மையில் உலக நாடுகளில் மிகவும் வலிமையான பொருளாதார நாடாக இந்தியா இருந்து வருகிறது. அத்துடன் பொருளாதார வளர்ச்சியில் தொடர்ந்து முன்னோக்கிக் கொண்டே செல்கிறது. அவ்வப்போது ஒருசில தேக்க நிலை ஏற்படலாம். ஆனால், இந்திய பொருளாதாரத்திற்கு, பொருளாதார வல்லுநர் டாக்டர் மன்மோகன் சிங் உள்ளிட்ட இந்திய பொருளாதார நிபுணர்கள், வலிமையான அடித்தளத்தை போட்டு தந்துள்ளார்கள். இந்த அடித்தளம் காரணமாக, இந்தியா வேகமாக வளரும் பொருளாதார நாடாக இருந்து வருகிறது.  ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் எப்படி இருந்தாலும், நல்ல அடித்தளம் இருப்பதால், இந்திய பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய அளவுக்கு ஆபத்து ஏற்படாது. அமெரிக்காவின் வரி விதிப்பை ஏற்க மறுத்து, பொருட்களை ஏற்றுமதி செய்யாமல் இருந்தால் கூட, இந்திய பொருட்களுக்கு கிராக்கி ஒருபோதும் குறையாது. உலகின் பிற நாடுகளுக்கு அதிகளவு பொருட்கள் ஏற்றுமதி செய்து, அமெரிக்காவின் திமிரை உடைக்கும் வலிமை இந்தியாவிற்கு உண்டு.  நிலைமை இப்படி இருக்க, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்வது வினோதாக இருந்து வருகிறது.

வரலாற்றாசிரியரின் கணிப்பு :

அமெரிக்க அதிபர் டிரம்பின் செயல்பாடுகள் காரணமாக, அமெரிக்காவில் மட்டுமல்லாமல், உலகின் போக்கும் மாறிவரும் இத்தகைய நிலையில், உலக புகழ்பெற்ற வரலாற்றிசிரியர் அர்னால்ட் ஜே. டாய்ன்பீ அவர்கள் நாகரிகங்கள் குறித்து தெரிவித்த கணிப்பு ஒன்று நம் நினைவுக்கு வருகிறது. உலகளாவிய வரலாறு குறித்து பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் அர்னால்ட் ஜே. டாய்ன்பீ எழுதிய 12 தொகுதிகள் கொண்ட வரலாற்று ஆய்வு (Study of History) என்ற நூல், 1934 முதல் 1961 வரை வெளியிடப்பட்டது. இந்த நூல் உலகளவில் மிகப்பெரிய மக்கள் கவனத்தைப் பெற்றது. வரலாற்றுப் பதிவில் 19 அல்லது 21 உலக நாகரிகங்களின் வளர்ச்சி மற்றும் சிதைவைக் கண்டறிந்து, இந்த நாகரிகங்கள் ஒவ்வொன்றிற்கும் தனது மாதிரியைப் பயன்படுத்தி, அவை அனைத்தும் கடந்து செல்லும் நிலைகளை விவரிப்பதே டாய்ன்பீயின் குறிக்கோளாக இருந்தது. தோற்றம், வளர்ச்சி, பிரச்சனைகளின் நேரம், உலகளாவிய நிலை மற்றும் சிதைவு ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த நூல் மனித நாகரிகங்களின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை ஆராய்கிறது. மேலும், நாகரிகங்கள் சவால்களுக்கு பதிலளிக்கும் விதமாக உருவாகின்றன. மேலும் அவை சவால்களுக்கு பதில் என்ற கருத்தின் அடிப்படையில் வீழ்ச்சியடைகின்றன என டாய்ன்பீயின் தெரிவிக்கிறார். நாகரிகங்கள் வீழ்ச்சி அடைவதற்கான காரணங்களை ஆராய்யும் இந்த நூல், சவால்களுக்கு போதிய பதில் அளிக்காதது, ஒரு நாகரிகத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் விளக்கம் அளிக்கிறது. நாகரிகங்களின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியில் ஆன்மீக காரணிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று அவர் கூறுகிறார். வரலாறு வெறும் நிகழ்வுகளின் பதிவு மட்டுமல்ல, இது மனிதகுலத்தின் ஆன்மீக தேடலில் ஒரு பகுதியாகும் என்றும் டாய்ன்பீ கூறுகிறார். இந்த நூல் மனிதகுலத்தின் வரலாற்றை ஒரு புதிய பார்வையில் பார்க்க உதவுகிறது. மேலும், நாகரிகங்களின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி பற்றிய ஆழமான பரிதலை வழங்குகிறது.

டாய்ன்பீ அவர்களைப் பொறுத்தவரை முக்கிய நாகரிகங்கள் என்பது, எகிப்திய, ஆண்டியன், சுமேரியன், பாபிலோனிக், ஹிட்டைட், மினோவான், இந்திய, இந்து, சிரியாக், ஹெலனிக், மேற்கத்திய , ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவம், தூர கிழக்கு, இஸ்லாமிய (அரபு மற்றும் ஈரானிய ), மாயன் , மெக்சிகன் மற்றும் யுகாடெக் ஆகியவற்றுடன்,. மேலும், கருக்கலைப்பு தூர மேற்கத்திய கிறிஸ்தவம், கருக்கலைப்பு தூர கிழக்கு கிறிஸ்தவம், கருக்கலைப்பு ஸ்காண்டிநேவியன்  ஆகிய மூன்று கருக்கலைப்பு நாகரிகங்கள் மற்றும் பாலினேசியன், எஸ்கிமோ, நாடோடி, ஒட்டோமான் , ஸ்பார்டன்  ஆகிய  ஐந்து கைது செய்யப்பட்ட நாகரிகங்கள் என  மொத்தம் 27 அல்லது 29 உள்ளன.

நாகரிகங்கள் இன அல்லது சுற்றுச்சூழல் காரணிகளின் விளைவாக அல்ல, மாறாக கடினமான நாடு, புதிய நிலங்கள், அடிகள் மற்றும் பிற நாகரிகங்களின் அழுத்தங்கள் மற்றும் தண்டனை போன்ற சவால்களுக்கு விடையிறுப்பாக மிகவும் பழமையான சமூகங்களிலிருந்து பிறக்கின்றன என்று டாய்ன்பீ வாதிடுகிறார் . நாகரிகங்கள் பிறப்பதற்கு, சவால்கள் ஒரு சிறந்த வழிமுறையாக இருக்க வேண்டும் என்றும்  அதிகப்படியான சவால்கள் நாகரிகத்தை நசுக்கும் என்றும்  மேலும் மிகக் குறைந்த சவால்கள் அதை தேக்கமடையச் செய்யும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.  நாகரிகங்கள் அவற்றின் வெவ்வேறு சூழல்கள் மற்றும் அவை எதிர்கொள்ளும் சவால்களுக்கான வெவ்வேறு அணுகுமுறைகள் காரணமாக வெவ்வேறு வழிகளில் வளர்கின்றன என்று அவர் வாதிடுகிறார். சவால்களுக்கு தீர்வுகளைக் கண்டறிபவர்கள், மற்றவர்களை தங்கள் புதுமையான வழியைப் பின்பற்ற ஊக்குவிக்கிறார்கள்.

"ஒரு அரசியல் உலக ஒழுங்கை, ஒரு பொருளாதார உலக ஒழுங்கிற்கான கட்டமைப்பை உருவாக்க அழைக்கப்படுவதற்கான சவால். இப்போது நமது நவீன மேற்கத்திய சமூகத்தை எதிர்கொள்கிறது" என்று 1939 ஆம் ஆண்டில், டாய்ன்பீ எழுதினார். நாகரிகங்களின் சிதைவு, பௌதீக சூழலின் மீதான கட்டுப்பாட்டை இழப்பதாலோ, மனித சூழலின் மீதான கட்டுப்பாட்டை இழப்பதாலோ அல்லது வெளியில் இருந்து வரும் தாக்குதல்களாலோ ஏற்படுவதாக டாய்ன்பீ பார்க்கவில்லை. மாறாக, அது படைப்பு சிறுபான்மையினரின் சீரழிவிலிருந்து வருகிறது. இது இறுதியில் படைப்பாற்றலை நிறுத்தி வெறும் ஆதிக்க சிறுபான்மையினராக சிதைகிறது. படைப்பாற்றல் மிக்க சிறுபான்மையினர் தங்கள் "முன்னாள் சுயத்தை" வழிபடுவதால் சீரழிந்து விடுகிறார்கள் என்றும், இதன் மூலம் அவர்கள் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள் என்றும், அவர்கள் எதிர்கொள்ளும் அடுத்த சவாலை போதுமான அளவு எதிர்கொள்ளத் தவறிவிடுகிறார்கள் என்றும் அவர் வாதிடுகிறார்.

ஆதிக்க சிறுபான்மையினர் தங்கள் அதிகாரத்தையும் செல்வாக்கையும் பாதுகாக்க ஒரு உலகளாவிய அரசை உருவாக்க முயல்கின்றனர். ஒரு நாகரிகம் உடைந்ததற்கான இறுதி அறிகுறி, ஆதிக்க சிறுபான்மையினர் ஒரு உலகளாவிய அரசை உருவாக்குவதே ஆகும் என்று அவர் வாதிடுகிறார். இது தற்போதுள்ள சமூக ஒழுங்கிற்குள் அரசியல் படைப்பாற்றலைத் தடுக்கிறது. இதற்கு சிறந்த உதாரணம் ரோமானியப் பேரரசு. இருப்பினும் பல ஏகாதிபத்திய ஆட்சிகள் உதாரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. "முதலில் ஆதிக்க சிறுபான்மையினர், அனைத்து உரிமைகளுக்கும் பகுத்தறிவுக்கும் எதிராக, தனக்குக் கிடைக்காத மரபுரிமை சலுகை நிலையை வலுக்கட்டாயமாகப் பிடிக்க முயற்சிக்கின்றனர். பின்னர் பாட்டாளி வர்க்கம் அநீதியை வெறுப்புடனும், பயத்தை வெறுப்புடனும், வன்முறையை வன்முறையுடனும் திருப்பிச் செலுத்துகிறது.

இருப்பினும், முழு இயக்கமும் ஆக்கப்பூர்வமான செயல்களில் முடிகிறது. ஆதிக்க சிறுபான்மையினர் ஒரு உலகளாவிய அரசை உருவாக்குகிறார்கள், உள் பாட்டாளி வர்க்கம் ஒரு உலகளாவிய தேவாலயத்தையும், வெளிப்புற பாட்டாளி வர்க்கம் காட்டுமிராண்டித்தனமான போர்க் குழுக்களின் கூட்டத்தையும் உருவாக்குகிறார்கள்." என்று டாய்ன்பீ குறிப்பிடுகிறார்.  நாகரிகங்கள் சிதைவடையும் போது, சமூகத்திற்குள் ஒரு பிளவு இருப்பதாக வாதிடும் டாய்ன்பீ, இரண்டு சாத்தியக்கூறுகளை முன்வைக்கிறார். மேற்கத்திய நாகரிகம், இஸ்லாமிய சமூகம், இந்து சமூகம் மற்றும் தூர கிழக்கு ஆகிய  அனைத்தும் மேற்கத்திய நாகரிகத்துடன் இணையலாம். அல்லது மேற்கத்திய நாகரிகம் அதன் பிரச்சனைகளின் காலத்திற்கு பிறகு ஒரு 'உலகளாவிய அரசை' உருவாக்கி, சிதைந்து, இறந்து போகலாம்.

உலகளவில் இஸ்லாமிய எழுச்சி :

வரலாற்றாசிரியர் அர்னால்ட் ஜே. டாய்ன்பீயின் கணிப்புப்படி, தற்போது மேற்கந்திய நாகரிகம் மெல்ல மெல்ல வலிமை இழந்து வருகிறது. உலக ஈடுபாடுகளில் மட்டுமே கவனம் செலுத்தி, ஒழுக்க நெறிகளை பின்னுக்குதள்ளி, அமைதி இல்லாத ஒரு வாழ்க்கையை வாழும் நாகரிகமாக மேற்கந்திய நாகரிகம் இருப்பதால், அதில் இருந்து மக்கள் மெல்ல மெல்ல வெளியே வர தொடங்கியுள்ளனர்.  அதேநேரத்தில், ஆன்மிக நெறிகளில் உறுதியாக இருக்கும் இஸ்லாமிய நாகரிகம், உலக மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவுக்கு கவர்ந்து எழுச்சிப் பெற்று வருகிறது. இம்மை, மறுமை ஆகிய இரண்டு அழகிய வாழ்க்கைக்கு இஸ்லாமிய வாழ்க்கை நெறி, அழகிய வழிகளை, மிகவும் எளிமையான வாழ்க்கை முறைகளை சொல்லி தருவதால், அதன் பக்கம், உலக மக்களின் கவனம் தற்போது திரும்பியுள்ளது.

நகைச்சுவை நாயகர் டொனால்ட் டிரம்பை அதிபராக கொண்ட அமெரிக்காவில் கூட, இஸ்லாமிய நெறி முன்எப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்நாட்டின் பல பகுதிகளில் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தின் பக்கம் மக்கள் விரைந்து வந்துகொண்டே இருக்கிறார்கள். தற்போது அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்துவரும் பல நடவடிக்கைகள் மூலம், அமெரிக்கா எப்படி மெல்ல மெல்ல தனது பலத்தை இழந்து பலவீனம் அடைந்து சிதைந்து வருகிறது என்பதையும் மேற்கிந்திய நாகரிகம் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து, படிப்படியாக சிதைந்து வருவதையும் வரலாற்றாசிரியர் அர்னால்ட் ஜே. டாய்ன்பீ சரியாக கணித்து இருப்பது வியப்பை தருகிறது. நாகரிகங்களின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியில் ஆன்மீக காரணிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. வரலாறு வெறும் நிகழ்வுகளின் பதிவு மட்டுமல்ல, இது மனிதகுலத்தின் ஆன்மீக தேடலில் ஒரு பகுதியாகும். அதிகப்படியான சவால்கள், நாகரிகத்தை நசுக்கும். மிகக் குறைந்த சவால்கள் அதை தேக்கமடையச் செய்யும் என்ற அர்னால்ட் ஜே. டாய்ன்பீயின் கணிப்பு வார்த்தைகள் தற்போதைய உலக நடப்புகளை உன்னிப்பாக கவனிக்கும்போது, ஆய்வு செய்யும்போது, உண்மையாகி வருகின்றன என்றே கூறலாம்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: