போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்கள்.....!
24 குழந்தைகள் உட்பட 90 பாலஸ்தீனர்கள் உயிழிப்பு.....!!
காஸா, அக்.29- போர் நிறுர்தத ஒப்பந்தத்தை மீறி காஸாவில் இஸ்ரேல் மீண்டும் நடத்திய வான்வழித்தாக்குதல்களில் 24 குழந்தைகள் உட்பட 90 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்ட சம்பவம் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல், ஹமாஸ் போராளிகளுக்கு மத்தியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட 20 அம்ச அமைதித் திட்டத்தின்படி, எகிப்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் போரை நிறுத்த உடன்பாடு கையெழுத்தானது. இதையடுத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் குழவின்ர் விடுவிடுத்தினர்.
காஸா மீது மீண்டும் தாக்குதல் :
இத்தகைய சூழ்நிலையில் காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. சிறிய அளவில் நடைபெற்ற இந்த தாக்குதல்கள் செவ்வாய்கிழமையன்று (28.10.2025) மீண்டும் பெரிய அளவில் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, வான்வழித்தாக்குதல்களை நடத்திய இஸ்ரேல் 24 குழந்தைகள் உட்பட 90 பாலஸ்தீன மக்களை கொன்றது. இஸ்ரேலிய விமானங்கள் நடத்திய தாக்குதலில் ஏராளமான மக்கள் படுகாயம் அடைந்தனர். தெற்கு காஸாவில் உள்ள ரஃபாவில் நடந்த துப்பாக்கிச் சூடு பரிமாற்றத்தைத் தொடர்ந்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சக்திவாய்ந்த தாக்குதல்களுக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து காஸாவில் கொலைகள் நடந்துள்ளன.
டொனால்ட் டிரம்ப் கருத்து :
இந்நிலையில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் காஸா போர் நிறுத்தம் ஆபத்தில்'இல்லை என்று அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 2023 அக்டோபரில் தொடங்கியதிலிருந்து காஸா மீதான இஸ்ரேலின் போரில் குறைந்தது 68 ஆயிரத்து 527 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 395 பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments:
Post a Comment