அன்புக்கு நான் அடிமை....!
வேலூர் டான்போஸ்கோ பள்ளிக்கூடத்தில் முதல் வகுப்பில் சேர்ந்தபோது தலைமை ஆசிரியர் கையால் தலையை சுற்றி காதை தொட சொன்னார்.
அப்படி தொட்டபோது எனக்கு ஐந்து வயது பூர்த்தியாகி விட்டது எனக் கூறி எழுதப்பட்ட தேதிதான் தற்போதைய என் பிறந்தநாள் தேதி.
அதாவது 04.01.1961.
ஆனால் என்னுடைய உண்மையான பிறந்த நாள் தேதி அந்த ஆண்டவனுக்கு தான் தெரியும்.
இருந்தும் நான் பிறந்தநாள் கொண்டாட்டம் எதுவும் கொண்டாடாதபோதும் என் மீது உண்மையான அன்பு கொண்ட நல்ல உள்ளங்கள் ஒவ்வொரு ஆண்டும் எனக்கு வாழ்த்துகளை கூறி என்னை தங்களுடைய அன்பு மழையில் திக்குமுக்காட வைத்து விடுகின்றனர்.
அந்த வகையில் இந்த ஆண்டும் காலை முதல் வாழ்த்துகள் குவிந்தன.
முகநூல், வாட்ஸ்அப், டுவிட்டர், செல்பேசி மற்றும் நேரில் வாழ்த்துக் கூறி என்னை உற்சாகம் அடையச் செய்த அனைத்து தோழர்கள், தோழிகள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு எனது நன்றிகள்...!
எப்போதும் தோழமையுடன் வழக்கம் போல இனியும் பயணிப்போம்.
அனைவருக்கும் நன்றி.
No comments:
Post a Comment