"பாரிஸில் நடைபெறும் சர்வதேச கண்காட்சியில் சவூதி பேரீச்சம்பழங்கள்"
உலக அளவில் புகழ்பெற்று விளங்கும் சவூதி பேரீச்சம்பழங்கள், மக்கள் மத்தியில் எப்போதும் விரும்பி சாப்பிடப்படுகின்றன. சுவையில் மட்டுமல்லாமல், உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும் சவூதி பேரீச்சம்பழங்களுக்கு உலக நாடுகள் மத்தியில் நல்ல கிராக்கி இருந்து வருகிறது. இதனால், பல்வேறு நாடுகளுக்கு சவூதி பேரீச்சம்பழங்கள் அதிகளவு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இப்படி அதிகளவில் பேரீச்சம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதால், சவூதி முழுவதும் பேரீச்சம்பழப் பண்ணைகள் அதிகளவில் இருந்து வருகின்றன. இதனால், சவூதி விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் எப்போதும் கிடைத்து வருகிறது.
இப்படி, உலக மக்களிடைய விரும்பப்படும் சவூதி பேரீச்சம்பழங்கள் குறித்து மேலும் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சவூதி அரேபிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உள்நாட்டில் நடைபெறும் கண்காட்சிகளில் மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளில் நடைபெறும் சர்வதேச கண்காட்சிகளிலும் சவூதி பேரீச்சம்பழங்கள் இடம்பெற்று, மக்கள் மத்தியில் அதன் பெருமை கொண்டு சேர்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறும் சர்வதேச கண்காட்சியில் சவூதி பேரீச்சம்பழங்கள் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளனது.
சிர்ஹா பேக் மற்றும் ஸ்நாக் கண்காட்சி :
சவூதி கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள சவூதி சமையல் கலை ஆணையம், இந்த வாரம் பாரிஸில் நடைபெறும் சர்வதேச சிர்ஹா பேக் மற்றும் ஸ்நாக் 2026 கண்காட்சியில், சவூதி ராஜ்ஜியத்தின் பரந்த மற்றும் பன்முகத்தன்மை கொண்ட சமையல் பாரம்பரியத்தை காட்சிப்படுத்துகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சவூதி சமையல் கலை ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மாயாதா பத்ர், "சிர்ஹா பேக் மற்றும் ஸ்நாக் என்பது சமையல் நிபுணத்துவம் மற்றும் புதுமைகளின் முன்னணி உலகளாவிய கூட்டமாகும். இது சவூதி அரேபியா நமது சமையல் பாரம்பரியத்தின் பன்முகத்தன்மையையும் நமது சுவைகளின் பன்முகத்தன்மையையும் வெளிப்படுத்த ஒரு முக்கிய தளமாக அமைகிறது" என்று கூறியுள்ளார்.
===============================================
"பாரிசில் நடைபெறும் கண்காட்சியில் பேரீச்சம்பழத்தின் பல்வேறு மற்றும் தனித்துவமான சுவைகள் மூலம் பார்வையாளர்களுக்கு வழிகாட்டும். பேரீச்சம்பழ விற்பனையாளர்களையும், சவூதி கலாச்சாரத்தை பிரெஞ்சு சமையல் உத்வேகத்துடன் இணைக்கும் சீஸ் மற்றும் பேரீச்சம்பழ ஜோடி அனுபவத்தையும் ஆணையம் காட்சிப்படுத்துகிறது"
===============================================
ஜனவரி 18 முதல் 21 வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் பேரீச்சம்பழத்தின் பல்வேறு மற்றும் தனித்துவமான சுவைகள் மூலம் பார்வையாளர்களுக்கு வழிகாட்டும். பேரீச்சம்பழ விற்பனையாளர்களையும், சவூதி கலாச்சாரத்தை பிரெஞ்சு சமையல் உத்வேகத்துடன் இணைக்கும் சீஸ் மற்றும் பேரீச்சம்பழ ஜோடி அனுபவத்தையும் ஆணையம் காட்சிப்படுத்துகிறது.
அனுபவங்களின் முக்கிய அம்சம், சவூதி சமையல்காரர்களின் நேரடி சமையல் அனுபவங்கள் ஆகும், அவர்கள் பிரெஞ்சு நுட்பங்களை சவூதி பேரீச்சம்பழங்களுடன் கலந்து இனிப்பு வகைகள் மற்றும் பேஸ்ட்ரிகளில் தனித்துவமான தோற்றத்தை உருவாக்குகிறார்கள். இவை அனைத்தும் சவூதி காபி மூலம் வழக்கமான சவூதி விருந்தோம்பலுடன் கலாச்சார அனுபவத்தை நிறைவு செய்கின்றன.
சவூதி பேரீச்சம்பழங்களின் பெருமை :
இந்த விற்பனையாளர் அனுபவங்கள் மூலம், சமையல் கலை ஆணையம் சவூதி பேரீச்சம்பழங்களை ஒரு பிரீமியம் மூலப்பொருளாக வழங்குகிறது. சமகால சமையல் நுட்பங்கள் மூலம் பாரம்பரிய சுவைகளை எவ்வாறு மறுபரிசீலனை செய்யலாம் என்பதை நிரூபிக்கிறது. அதேநேரத்தில் இந்த முக்கிய சர்வதேச தளங்கள் மூலம் உள்ளூர் உற்பத்தியாளர்களையும் ஆதரிக்கிறது.
கூடுதல் சுவையான தகவல்கள் :
சவூதி அரேபியா ஆண்டுதோறும் 1 புள்ளி 9 மில்லியன் டன்களுக்கு மேல் பேரீச்சம்பழங்களை உற்பத்தி செய்கிறது. அத்துடன் 300 க்கும் மேற்பட்ட வகைகளை வழங்குகிறது. சவூதி கலாச்சாரத்தின் மையமாக இருந்தாலும், அதன் பேரீச்சம்பழ ஏற்றுமதியின் மதிப்பு சவூதி ரியால் மதிப்பில் 1 புள்ளி 6 பில்லியனைத் தாண்டியுள்ளது, மேலும் இது 130 க்கும் மேற்பட்ட நாடுகளை உலகளாவிய அளவில் சென்றடைகிறது.
இப்படி உலக அளவில் புகழ்பெற்று விளங்கும் சவூதி பேரீச்சம்பழங்கள், உலகில் வாழும் மக்களில் யாரும் விரும்பாமல் இருக்க மாட்டார்கள். சவூதி அரேபியாவிற்கு செல்லும் மக்கள், தங்கள் நாடுகளுக்கும் மீண்டும் திரும்பும்போது, அங்கிருந்து பேரீச்சம்பழங்களை வாங்கிகொண்டு சென்று, உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் தந்து மகிழ்ச்சி அடைவது எப்போதும் வழக்கமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக உம்ரா, ஹஜ் புனித பயண காலங்களில் பேரீச்சம்பழங்களின் விற்பனை பல மடங்கு எப்போதும் அதிகமாக இருக்கும். இன்னும் ஒரு மாதத்தில் புனித ரமலான் மாதம் தொடங்குவதால், பேரீச்சம்பழங்களை விற்பனை செய்யவும், அதன் சுவை குறித்து மக்களிடைய பிரபலம் படுத்தவும் சவூதி அரேபியா அரசு தற்போது தீவிர கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்





No comments:
Post a Comment