" முன்னேற்றத்தின் திறமை "
ஆசிரியர் ஜாவீத் வகுப்பறைக்குள் நுழைந்தவுடன், ஒரு வார்த்தை கூட பேசாமல் வகுப்பறையில் இருந்த கரும்பலகையில் ஒரு நீண்ட கோட்டை வரைந்தார்.
பின்னர், வகுப்பில் இருந்த அனைத்து மாணவர்களை நோக்கி, "உங்களில் யார் இந்தக் கோட்டைத் தொடாமல் குறுகியதாக்க முடியும்?" என்று கேட்டு வினா எழுப்பினார்.
அது சாத்தியமற்றது.
இதனால் வகுப்பறையில் அமைதி நிலவியது.
ஆசிரியரின் கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லாததால் மாணவர்களின் கண்கள் சில நேரங்களில் ஆசிரியரையும், சில நேரங்களில் கரும்பலகையும் பார்த்தன.
ஆனால் வகுப்பில் இருந்த புத்திசாலி மாணவர் இறுதியாக அமைதியைக் கலைத்து, "கோட்டைக் குறைக்க, நீங்கள் அதை அழிக்க வேண்டும். மேலும் இந்தக் கோட்டைத் தொடுவதை நீங்கள் தடை செய்கிறீர்கள்" என்று பதிலளித்தார்.
அதற்கு மற்ற மாணவர்களும் தலையை ஆட்டினர். பதில் அளித்த அந்த மாணவருக்கு அவர்கள் ஆதரவளித்தனர்.
ஆசிரியர் ஜாவீத் மாணவர்களை ஆழ்ந்த கண்களால் பார்த்து, எதுவும் பேசாமல், கரும்பலகையில் மற்றொரு கோட்டை வரைந்தார்.
முதல் வரியிலிருந்து சிறிது தூரம் கொடுத்து, ஒரு பெரிய கோட்டை வரைந்தார். இப்போது ஆசிரியர் அந்தக் கோட்டைத் தொடாமலேயே சிறியதாக நிரூபித்ததை வகுப்பில் இருந்த மாணவர்கள் அனைவரும் பார்த்தார்கள்.
==========================================
"மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காமல், அவர்களைப்
பற்றி தவறாகப் பேசாமல், பொறாமைப்படாமல், அவர்களுடன் குழப்பம் அடையாமல் வாழ்க்கையில்
முன்னேற முடியும்"
=======================================
ஆசிரியரின் இந்த முயற்சி மூலம் மாணவர்கள் இன்று தங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய பாடத்தைக் கற்றுக்கொண்டனர். அதாவது, மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காமல், அவர்களைப் பற்றி தவறாகப் பேசாமல், பொறாமைப்படாமல், அவர்களுடன் குழப்பமடையாமல் முன்னேறும் திறமை. அதை அவர்கள் சில நிமிடங்களில் கற்றுக்கொண்டனர்.
மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காமல், அவர்களைப் பற்றி தவறாகப் பேசாமல், பொறாமைப்படாமல், அவர்களுடன் குழப்பம் அடையாமல் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதை அந்த புத்தசாலி ஆசிரியர் ஜாவீத் வகுப்பில் இருந்த மாணவர்களுக்கு மிகவும் எளிய முறையில் சொல்லிக் கொடுத்தார். இதன்மூலம் அன்றைய தினத்தில் நல்ல ஒரு தகவலை, நல்ல பண்பை மாணவர்களுக்கு புரிய வைத்து தனக்குள் மகிழ்ச்சி அடைந்தார்.
நன்றி: அசோக்
குமார் ஹைதரி, இன்குலாப் உர்தூ நாளிதழ்
தமிழில்
: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments:
Post a Comment