"டிஜிட்டல் கற்றல் தளத்தை அறிமுகப்படுத்திய கிங் சல்மான் அரபு அகாடமி"
கிங் சல்மான் சர்வதேச (குளோபல்) அரபு மொழி அகாடமி "அஹ்லான் வா சஹ்லான்" என்ற டிஜிட்டல் கல்வி தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டிஜிட்டல் முயற்சியானது, நெகிழ்வான, ஊடாடும் கற்றல் அனுபவத்தின் மூலம் தாய்மொழி மற்றும் தாய்மொழி அல்லாதவர்களுக்கு அரபு மொழியைக் கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இது, அங்கீகாரம் பெற்ற கல்வி உள்ளடக்கத்தை நவீன தொழில்நுட்பங்களுடன் இணைத்து, பல்வேறு நிலைகள் மற்றும் இலக்குகளைக் கொண்ட கற்பவர்களுக்கு ஆதரவளிக்கிறது.
அரபு மொழி கல்வியின் வளர்ச்சியில் ஒரு தரமான படி :
கிங் சல்மான் சர்வதேச (குளோபல்) அரபு மொழி அகாடமி தொடங்கியுள்ள இந்த "அஹ்லான் வா சஹ்லான்" என்ற டிஜிட்டல் கல்வி தளம் குறித்து அகாடமியின் பொதுச் செயலாளர் அப்துல்லா அல்-வாஷ்மி, அருமையான விளக்கம் அளித்து தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார். "இந்த தளம் அரபு மொழி கல்வியின் டிஜிட்டல் வளர்ச்சியில் ஒரு தரமான படியைக் குறிக்கிறது. அத்துடன் நவீன கற்றல் சூழல்களில் அரபியின் இருப்பை வலுப்படுத்துவதற்கான அகாடமியின் நோக்கத்துடன் ஒத்துப்போகிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
"இந்த திட்டம் கலாச்சார அமைச்சர் இளவரசர் பத்ர் பின் அப்துல்லா பின் ஃபர்ஹானால் ஆதரிக்கப்படும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்றும், நம்பகமான டிஜிட்டல் கருவிகள் மூலம் உள்ளூர் மற்றும் உலகளவில் அரபியை மேம்படுத்துவதற்கான தலைமையின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது" என்றும் அப்துல்லா அல்-வாஷ்மி கூறியுள்ளார்.
==========================================
"இந்த தளம் அரபு மொழி கல்வியின் டிஜிட்டல் வளர்ச்சியில் ஒரு தரமான படியைக் குறிக்கிறது. அத்துடன் நவீன கற்றல் சூழல்களில் அரபியின் இருப்பை வலுப்படுத்துவதற்கான அகாடமியின் நோக்கத்துடன் ஒத்துப்போகிறது"
=============================================
"இந்த தளம் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மேம்பட்ட டிஜிட்டல் தீர்வுகளை வழங்குகிறது. பல்வேறு கற்றல் தேவைகள் மற்றும் நோக்கங்களை பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட திட்டங்களுடன், இது தொடக்க நிலை முதல் மேம்பட்ட நிலை வரை ஐந்து நிலைகளில் ஒருங்கிணைந்த மொழித் திட்டங்களையும், நிர்வாகம், சுகாதாரம் மற்றும் விளையாட்டு போன்ற தொழில்முறை துறைகளில் சிறப்புப் படிப்புகளையும் வழங்குகிறது" என்றும் அல்-வாஷ்மி தெரிவித்துள்ளார். தரப்படுத்தப்பட்ட மதிப்பீட்டு கருவிகள் மற்றும் விரிவான சோதனைகளால் ஆதரிக்கப்படும் நெகிழ்வான சுய-கற்றல் விருப்பங்களிலிருந்து கற்பவர்கள் பயனடைகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஹ்லான் வா சஹ்லான் - சில தகவல்கள் :
“அஹ்லான் வா சஹ்லான்” பல்வேறு கற்றல் குழுக்களுக்கான தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்துடன் ஒரு ஊடாடும் வடிவமைப்பு, ஐந்து மொழிகளை ஆதரிக்கும் பன்மொழி இடைமுகம் மற்றும் தொடர்ச்சியான தொழில்நுட்ப ஆதரவைக் கொண்டுள்ளது. உள்ளடக்கத்தை நிர்வகிக்க, கற்பவர்களை ஒழுங்கமைக்க மற்றும் பகுப்பாய்வு அறிக்கைகள் மூலம் செயல்திறனைக் கண்காணிக்க கல்வி நிறுவனங்களுக்கு மேம்பட்ட கருவிகளும் வழங்கப்படுகின்றன .
புதுமையான டிஜிட்டல் தீர்வுகள் மூலம் அரபு மொழி கல்வியை உலகளவில் விரிவுபடுத்துதல், கற்றல் திறனை மேம்படுத்துதல் மற்றும் கல்வி, கலாச்சாரம் மற்றும் டிஜிட்டல் தகவல்தொடர்புகளில் அரபியின் இருப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கான அகாடமியின் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த வெளியீடு உள்ளது.
கல்வித் தரத்தை தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுடன் இணைக்கும் மேம்பட்ட அரபு டிஜிட்டல் கல்வி சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான மனித திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் இலக்குகளுடன் இந்த முயற்சி ஒத்துப்போகிறது.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்



No comments:
Post a Comment