எகிப்தில் காஸா அமைதி உச்சி மாநாடு....!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் இந்தியா உட்பட 20 நாடுகள் பங்கேற்பு....!!
காஸா போர் முடிந்துவிட்டது என அதிபர் டிரம்ப் அறிவிப்பு....!!!
பணயக்கைதிகள் விடுவிக்கும் நடவடிக்கைகள் தொடங்கியது....!!!!
கெய்ரோ, அக்.13-காஸா போர் முடிந்துவிட்டது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், திங்களன்று எகிப்திய நகரமான ஷர்ம் எல்-ஷேக்கில் நடைபெறும் காஸா உச்சிமாநாட்டிற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எகிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி ஆகியோர் இணைந்து தலைமை தாங்குவார்கள். இதில் ஐ.நா. தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் இந்தியா உட்பட் 20க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காஸா போர் நிறுத்தம் :
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான போரை நிறுத்த 20 அம்ச அமைதித் திட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்மொழிந்தார். அதன் சில பகுதிகளை ஹமாஸ் ஏற்றுக் கொண்டது. இதேபோன்று இஸ்ரேலும் ஏற்றுக் கொண்டதையடுத்து போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து பணயக்கைதிகளை விடுவித்தல் மற்றும் உதவி வழங்குதல் உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட உள்ளன.
அந்த வகையில் எகிப்தில் இன்று நடைபெறும் உச்சி மாநாட்டில், மேற்கொள்ளப்படும் ஒப்பந்தம் போரினால் பாதிக்கப்பட்ட பிராந்தியத்தில் நீடித்த அமைதிக்கு வழிவகுக்குமா என்பதை தீர்மானிக்கக்கூடும். மேலும் ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்போது,மீதமுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பதற்கான ஹமாஸுக்கு 72 மணி நேர கால அவகாசமும் தொடங்கியுள்ளது. மேலும் இஸ்ரேல் ஆயிரத்த்து 700 பாலஸ்தீன விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பணயக்கைதிகள் விடுவிப்பு :
டிரம்ப் தனது அமைதித் திட்டம் குறித்த எகிப்தில் சர்வதேச உச்சிமாநாட்டிற்குத் தலைமை தாங்குவதற்கு முன்பு, திங்கள்கிழமை காலை காஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கத் தொடங்கும். டிரம்ப் கோடிட்டுக் காட்டிய ஒப்பந்தத்தின் கீழ், கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள மற்றும் சில பிராந்தியங்களில் பஞ்சத்தில் சிக்கியுள்ள காஸாவிற்கு முழு உதவி வழங்க இஸ்ரேல் உடனடியாக அனுமதிக்கும். போர்நிறுத்த ஒப்பந்தம் நீடித்ததாகத் தோன்றினாலும், வரவிருக்கும் பேச்சுவார்த்தைகள் மிகவும் சவாலானதாக இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்தனர். ஏனெனில் முதல் கட்டம் ஒரு சில பிரச்சினைகளை மட்டுமே தீர்த்து, இரண்டாவது கட்டத்திற்கு முக்கியமானவற்றை விட்டுச் சென்றது.
இதனிடையே ஏற்கனவே ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் பணயக்கைதிகளை ஹமாஸ் திங்கட்கிழமை விடுவித்தது. இதேபோன்று இஸ்ரேலும் பாலஸ்தீன கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கைகளை தொடங்கியது.
எகிப்தில் உச்சி மாநாடு :
இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், அதிபர் டிரம்பின் காஸா அமைதித் திட்டத்தின்படி ஒப்பந்தம் மேற்கொள்ள திங்களன்று எகிப்திய நகரமான ஷர்ம் எல்-ஷேக்கில் காஸா உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த காஸா உச்சிமாநாட்டிற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எகிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி ஆகியோர் இணைந்து தலைமை தாங்குவார்கள். இதில் ஐ.நா. தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் இந்தியா உட்பட் 20க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், குறுகிய கால அழைப்பு மற்றும் ஏற்கனவே ஒப்புகொண்ட நிகழ்ச்சிகள் காரணமாக உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்ளவில்லை. ஆனால், இந்திய தரப்பில் வெளியுறவு இணையமைச்சர் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் முழு வடிவம் பெறும் :
எகிப்தில் நடைபெறும் உச்சி மாநாட்டில் இஸ்ரேல் - ஹமாஸ் போராளிகளுக்கு இடையேயான ஒப்பந்தம் முழு வடிவம் பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் காஸாவில் முழு அமைதி திரும்ப மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஒப்பந்தம் வழிவகை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது வரலாற்று சிறப்புமிக்க ஒரு ஒப்பந்தமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே காஸா போர் நிறுத்தம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இனி அனைத்துப் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்றும் அதன் மூலம் பிராந்தியத்தில் முழு அமைதி உருவாக வாய்ப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
- சிறப்புச் செய்தியாளர் :எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment