" ஒன்றரைக்கோடி ரூபாய்க்கு விற்பனையான மங்கோலிய பருந்து"
உலகில் நடக்கும் பல விஷயங்கள், சம்பவங்கள் மிகவும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருந்து வருகின்றன. இப்படியும் நடக்குமா ! என்று வியக்கும் வகையில் பல வியப்பான சம்பவங்கள் உலகில் அடிக்கடி நடந்து வருகின்றன. அந்த வகையில் மங்கோலிய பருந்து ஒன்று ஒன்றரைக்கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது என்ற செய்தி நம் அனைவரையும் வியப்பு அடையும் தகவலாக உள்ளது.
உண்மை தாங்க. அந்த மங்கோலிய பருந்தை 6 லட்சத்து 50 ஆயிரம் சவூதி ரியலுக்கு ஒருவர் வாங்கியுள்ளார். அதன் இந்திய மதிப்பு, ஒரு கோடியே 53 லட்சத்து 82 ஆயிரத்து 348 ரூபாயாகும். இப்படி அதிக விலைக்கு விற்கப்பட்ட பருந்து இந்த மங்கோலிய பருந்து என்று உறுதியாக கூறலாம். அத்தகைய பெருமையையும் அந்த மங்கோலிய பருந்து பெற்றுள்ளது.
சர்வதேச பருந்துகள் கண்காட்சி :
சவூதி அரேபியாவின் ரியாத்தில் அண்மையில் சர்வதேச சவூதி பருந்துகள் கண்காட்சி நடைபெற்றது. சர்வதேச பருந்து கண்காட்சியின் வரலாற்றில் முதல்முறையாக, சர்வதேச சவூதி பருந்துகள் மற்றும் வேட்டை கண்காட்சி மங்கோலிய பருந்துகளுக்கு ஒரு சிறப்பு மண்டலத்தை அர்ப்பணித்தது. அவை அவற்றின் விதிவிலக்கான தரத்திற்காக சவூதி இராச்சியம் மற்றும் பிராந்தியத்தில் உள்ள பருந்துகளில் ஒரு தனித்துவமான அந்தஸ்தைக் கொண்டுள்ளன.
இந்த மண்டலம் கிழக்கு ஆசியாவில் உள்ள மங்கோலியாவிலிருந்து வரும் உயர்மட்ட பருந்துகள் இனங்களைக் காட்சிப்படுத்துகிறது. குறிப்பாக மங்கோலியன் ஹர் ஃபால்கன், அதன் பெரிய அளவு, நீண்ட இறக்கைகள் மற்றும் வலுவான சகிப்புத்தன்மைக்கு பெயர் பெற்றது.
இதன் நிறங்கள் வெள்ளை நிறத்தில் இருந்து அடர் பழுப்பு நிறத்தில் உள்ளன. மேலும் இந்த குணாதிசயங்கள் மங்கோலியன் பருந்துகளுக்கு பருந்து வளர்ப்பில் ஒரு நன்மையை அளிக்கின்றன. கடுமையான நிலைமைகளுக்கு அதன் மீள்தன்மை மற்றும் பயிற்சிக்கு விரைவாக பதிலளிக்கும் தன்மைக்கு நன்றி என்றே கூற வேண்டும். இது அமெச்சூர் மற்றும் தொழில் வல்லுநர்கள் இருவரிடமும் மிகவும் விரும்பப்படும் இனங்களில் ஒன்றாகும்.
ஒன்றரைக்கோடி ரூபாய்க்கு விற்பனை :
இப்படி பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்ட இந்த மங்கோலிய பருந்து ஒன்று ரியாத்தில் நடைபெற்ற சர்வதேச சவூதி பருந்துகள் கண்காட்சி 2025-ல், 6 லட்சத்து 50 ஆயிரம் சவூதி ரியாலுக்கு விற்பனையாகியுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் கூற வேண்டுமனால், ஒரு கோடியே 53 லட்சத்து 82 ஆயிரத்து 348 ரூபாயாகும். உலகில் இதுவரை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட பருந்து என்ற பெருமையையும் இந்த மங்கோலிய பருந்து பெற்றுள்ளது. அத்துடன் மிகவும் விலையுயர்ந்த மங்கோலிய பருந்து என்ற பெருமையும் அதற்கு கிடைத்துள்ளது.
கண்காட்சியின் ஒரு பகுதியாக மங்கோலிய பருந்துகளின் ஏலம் தொடர்ந்தது, அங்கு இரண்டு பருந்துகள் மொத்தம் 7 லட்சத்து 78 ஆயிரம் சவூதி ரியாலுக்கு விற்பனை செய்யப்பட்டன. இந்த இரண்டு பருந்துகளின் மதிப்பு இந்திய ரூபாயில் ஒரு கோடியே 84 லட்சத்து 11 ஆயிரத்து 487 ரூபாயாகும்.
முதலாவது, ஒரு ஹர் ஃபார்க் (இளம் பருந்து) 70 ஆயிரம் சவூதி ரியாலுக்கு ஏலம் விடப்பட்டு ஒரு லட்சத்து 28 ஆயிரம் சவூதி ரியாலுக்கு விற்கப்பட்டது. இரண்டாவது, ஒரு ஹர் கர்னாஸ் (முதிர்ந்த பருந்து) ஒரு லட்சம் சவூதி ரியாலில் தொடங்கி 6 லட்சத்து 50 ஆயிரம் சவூதி ரியாலுக்கு விற்கப்பட்டது. இது இதுவரை விற்கப்பட்ட மிகவும் விலையுயர்ந்த மங்கோலிய பருந்து ஆகும்.
பார்வையாளர்களை கவர்ந்த கண்காட்சி :
மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்ற இந்த சர்வதேச சவூதி பருந்துகள் கண்காட்சி 2025 உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த பருந்து ஆர்வலர்களை வெகுவாக கவர்ந்தது. சவூதி மக்கள் மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்த கண்காட்சியில் கலந்துகொண்ட பருந்து வளர்ப்பவர்கள், தங்களுடைய திறமை வாய்ந்த பருந்துகளை கண்காட்சியில் காட்சிப்படுத்தி இருந்தனர். மனதை கவரும் வகையில் அழகாக இருந்த இந்த பருந்துகளைக் கண்ட பருந்து ஆர்வலர்கள், விலையைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், அதிக விலைக்கொடுத்து பருந்துகளை வாங்கிச் சென்றனர்.
சுவையான தகவல்கள் :
சவூதி மக்களுக்கு ஏன் பருந்து மீது இவ்வளவு ஆர்வம் என உலக மக்கள் அனைவருக்கும் நினைக்க தோன்றும். அந்த கேள்விக்கு பதில் என்னவென்றால், சவூதி அரேபியாவின் தேசியப் பறவை அரேபிய பருந்து ஆகும். இது 'ஷாஹீன் பால்கன்' என்றும் அழைக்கப்படுகிறது. சவூதி அரேபியாவில் பருந்து வேட்டையாடுதல் மற்றும் பருந்து வளர்ப்பது ஒரு பாரம்பரிய கலாச்சார அம்சமாகும். சர்வதேச பருந்து வளர்ப்பாளர் சங்கங்களின் ஏலங்கள் சவூதி அரேபியாவில் நடைபெறுகின்றன. அங்கு பருந்துகள் மிகமிக அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. அத்துடன் பல திறமை வாய்ந்த பருந்துகள் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு விற்கப்படுகின்றன. இந்த ஏலங்கள் சர்வதேச பருந்து வளர்ப்பாளர்களையும் ஈர்க்கின்றன. பருந்துகளின் கலாச்சார முக்கியத்துவத்தையும், வளர்ப்பையும் ஊக்குவிப்பதற்காக சவூதி ஃபால்கன் கிளப் போன்ற அமைப்புகள் உள்ளன.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment