Thursday, November 9, 2023

நவீன ஷாஜஹான்....!

 நவீன ஷாஜஹான்....!


ஆக்ராவில் தனது மனைவி மும்தாஜுக்கு தாஜ்மஹால் கட்டிய மன்னர் ஷாஜஹானை உங்களுக்கு தெரியும்.
ஆனால், தான் நேசித்த அன்பு மனைவிக்காக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் தாஜ்மஹால் கட்டியது உங்களுக்கு தெரியுமா....
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தபால்காரர் ஃபைசூல் ஹசன் காதரி என்பவர், மறைந்த தன்னுடைய பாச மனைவி தாஜமுல்லி பேகத்திற்கு 5 ஆயிரத்து 500 சதுர அடியில், அழகிய தாஜ்மஹால் ஒன்றை கட்டி, தனது காதலை, அன்பை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளார்.
இப்படி, உண்மையான அன்பை செலுத்திய, ஃபைசூல் ஹசன் காதரி, சாலை விபத்தில் படுகாயம் அடைந்து அலிகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி, அவர் உயிரிழந்தது மிகப் பெரிய சோகம்.

No comments: