Tuesday, November 7, 2023

வயசு.....!

வயசு தடையில்லை.....!

வாழ்க்கையில் சாதனை புரிய வயது எப்போதும் தடையாக இருப்பது இல்லை.

ஆமாங்க....

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு இப்போ வயசு 77....

ஆனால், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் தொடர்ச்சியாக செய்து வந்த பணிகள், விடா முயற்சி, ஆர்வம், இவைதான் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தந்திருக்கிறது. 

நம்ம இந்தியாவிலும், சரத்பவார் என்ற மூத்த அரசியல்வாதி தனது 79வது வயதில், மகாராஷ்டிராவில் பிஜேபி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பினார். கடுமையான பிரச்சாரம், முயற்சி, அரசியல் சாணக்கியம் இவைதான் சரத்பவாரின் வெற்றிக்கு முக்கிய காரணங்கள்.  

இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்....

ஆக, 50 வயது ஆகிவிட்டது, இனி ஒன்றும் செய்ய முடியாது என தளர்ந்து விடாமல், தொடர் முயற்சியை செய்யுங்கள் இளைஞர்களே....

வெற்றி நிச்சயம் உங்கள் காலடியில் வந்து விழும்.‘

வாழ்க்கையில் சாதிக்க, சாதனை புரிய வயசு எப்போதும் தடையாக இருப்பது இல்லை. 

இதை நன்கு உணர்ந்துகொண்டால், எல்லோரும் சாதிக்கலாம்.

No comments: