Sunday, October 5, 2025

அமெரிக்க அதிபரின் எச்சரிக்கையும் மீறி காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குல்....!

 

அமெரிக்க அதிபரின் எச்சரிக்கையும் மீறி காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குல்: 70க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலி

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை எகிப்தில் நடத்த ஏற்பாடு

காஸா, அக்.05- இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையே நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்கதல் நடத்தியதில் 70க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டார்கள்.

20 அம்ச அமைதித் திட்டம்:

காஸாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையே நடக்கும்  கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 20 அம்ச அமைதித் திட்டத்தை முன்மொழிந்தார். இந்த திட்டத்தின் சில பகுதிகளை ஏற்றுக் கொண்ட ஹமாஸ் போராளிகள், மற்ற நிபந்தனைகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என உறுதி அளித்துள்ளது. இதையடுத்து, காஸா மீது நடத்தப்படும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டார்.

எச்சரிக்கையும் மீறி தாக்குதல் :

காஸா மீது தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்க அதிபரின் எச்சரிக்கையும் மீறி இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 70க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டார்கள். இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு ஹமாஸ் மற்றும் பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.  சிறைபிடிக்கப்பட்டவர்கள் சில நாட்களில் விடுவிக்கப்படுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த நிலையில், இஸ்ரேலிய இராணுவம் காஸா மீது குண்டுவீச்சு நடத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 70 பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளது.

எகிப்தில் பேச்சுவார்த்தை :

இந்நிலையில் போர் நிறுத்துவது தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கு முன்னதாக ஹமாஸ் போராளிகளின் குழுவில் இடம்பெற்றுள்ள பேச்சுவார்த்தையாளர்கள் எகிப்தில் ஒன்றுகூடுகின்றனர்.

இதனிடையே .சனிக்கிழமை 04.10.2025 அன்று ஐரோப்பாவில் நடந்த பாலஸ்தீன ஆதரவு பேரணிகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர், காஸாவில் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவும், பிரதேசத்திற்கு மனிதாபிமான உதவிகளை எடுத்துச் செல்லும் ஒரு கடற்படையில் உள்ள ஆர்வலர்களை விடுவிக்கவும் அழைப்பு விடுத்தனர்.

அக்டோபர் 2023 முதல் காஸா மீதான இஸ்ரேலின் போரில் குறைந்தது 67 ஆயிரத்து 100 பேர் கொல்லப்பட்டனர். ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 430 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளதாக நம்பப்படுகிறது. அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேலில் நடந்த தாக்குதல்களில் மொத்தம் ஆயிரத்து 139 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 200 பேர் சிறைபிடிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

=========================

No comments: