Thursday, December 19, 2013

மதுவுக்கு எதிராக ஓர் போர்...! (22)

" மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!"  நாள் : 22



ஆரோக்கியமான வாழ்வுக்கு என்ன செய்ய வேண்டும்....?

ஐந்து முக்கிய விதிகளை, வழிமுறைகளை,  வாழ்க்கையில் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்...

அந்த ஐந்து முக்கிய விதிகளில் ஒன்று, மதுப்பழக்கத்தை கட்டாயம் கைவிட வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை..

ஆம், தோழர்களே, நீங்கள் ஆரோக்கியமாக, நல்ல வாழ்வை வாழ விரும்பினால், நிச்சயம் மதுப்பழக்கத்திற்கு அடிமையாக கூடாது..

சரி, ஆரோக்கிய வாழ்வுக்கான ஐந்து விதிகளை முதலில் பார்க்கலாம்...


1. புகை பிடிப்பதை கைவிட வேண்டும்.

2. உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும்..

3. ஆரோக்கியமான, நல்ல சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.

4. மதுப்பழக்கம் கட்டாயம் இருக்கக் கூடாது. குறிப்பாக அதிகளவு மதுவை அருந்தவே கூடாது.

5. நாள்தோறும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்...


இதுதான், ஆரோக்கிய வாழ்வுக்கு மருத்துவர்கள் கூறும் நல்ல ஆலோசனைகள்...

மேலும், மதுப்பழக்கத்தை கைவிட்டாலே, 60 சதவீத நோய்களை தவிர்த்து விடலாம் என்பது மருத்துவர்களின் கணிப்பு...

குறிப்பாக,  இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் மதுப்பழக்கத்தால் ஏற்படுவதாக ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

எனவே, மதுப்பழக்கம், புகைப்பிடித்தல் ஆகியவற்றை கைவிட வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.


இங்கிலாந்தின் கார்டிப் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறை பேராசிரியராக பணிபுரிபவர் பீட்டர் எல்வூட்,

ஆரோக்கியமான வாழ்வுக்கு ஒருவர் தனது வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொண்டாலே போதும் என்கிறார் இந்த பேராசிரியர்.

அதாவது, மேலே குறிப்பிட்ட ஐந்து விதிகளை வாழ்க்கையில் நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும் என்பது பேராசிரியர் பீட்டர் எல்வூட்டின் அறிவுரை.

இதனால், மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அலைய வேண்டிய அவசியம் இருக்காது என்பது எல்வூட்டின் கருத்து.


இந்த ஆரோக்கியமான வழிமுறைகளை கடைப்பிடித்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும், முதிய வயதிலும் ஆரோக்கியமாக வாழலாம் என்றும் இங்கிலாந்து பேராசிரியர் கருத்து தெரிவித்துள்ளார்.

எனவே, முதியவர்கள் இதனை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது எல்வூட்டின் வேண்டுகோள்.

ஆரோக்கியமான வாழ்வு குறித்து சவுத் வேல்ஸ் பகுதியில் 35 வயதுக்கு உட்பட்ட சுமார் 2 ஆயிரத்து 235 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், பல சுவையான தகவல்கள் கிடைத்துள்ளன.


அதில், முக்கியமானது, மதுப்பழக்கம் இல்லாதவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வதாக தெரியவந்துள்ளது.

மேலும், அவர்கள் சுறுசுறுப்பாகவும், நல்ல திறமையுடனும் செயல்படுவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆக, ஆரோக்கிய வாழ்வுக்கு மது அருந்துவதை கட்டாயம் கைவிட வேண்டும் என்பது தெள்ளத் தெளிவாக தெரிய வருகிறது.

உலகின் பல பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளும், அதை உண்மை என நிரூபித்து வருகின்றன...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: