Saturday, December 14, 2013

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (18)

" மதுவுக்கு எதிராக ஓர் ( பிரச்சாரம்) போர்.....! "  நாள்: 18


மது.....உடல் ஆராக்கியத்திற்கு ஏன் கெடுதலாக இருக்கிறது...?

வாருங்கள்....அதிர்ச்சியூட்டும் தகவல்களை இப்போது பார்க்கலாம்....

அமைதியான இரவு நேரம்....இதமான சூழல்.... மனதை கொள்ளை கொள்ளும் தட்பவெப்பம்...

நீண்ட நாள் பழகிய நண்பர்கள் பலர் கூட இருக்கும்போது,  மதுவை பருகி மகிழ்வது சிலருக்கு உற்சாகத்தை தரும்...ஆனந்தத்தை கொடுக்கும்...

உலகின் பல இடங்களில் உள்ள சமூக அமைப்புகள், மது அருந்துவதை பெரிய குற்றமாக நினைக்கவில்லை.

ஆனால், மது அருந்துவதால் உங்களுடைய வாழ்க்கை பாதிப்பு அடையும் என்பதை நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்களா.....!


ஆம், மதுப்பழக்கம் உங்கள் வாழ்க்கையை  மிகப் பெரிய அளவுக்கு பாதிக்கும்..

சிகரெட் போல், மது கூட உங்களை பழகத்திற்கு அடிமையாக்கி விடும்.

மேலும் பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கும் மது காரணமாக இருந்து வருகிறது...

.மிதமாக மது அருந்துவது நல்லது என சில ஆய்வுகள் கூறினாலும், அதனால் பாதிப்புகள்தான் அதிகம் என்று உலகின் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் திட்டவட்டமாக தெரிவிக்கின்றன.

மதுப்பழக்கம் உள்ளவர்கள் ஏன் குடிப்பதை  நிறுத்த வேண்டும் என்பதற்கு கீழே வரும் அதிர்ச்சி தகவல்களே போதுமானதாக இருக்கும்...


மது அருந்துவதால் இளம் பருவத்திலேயே மரணம் வந்து சேரும் என்கிறது ஆய்வு ஒன்று..

ஆய்வில் மட்டுமல்ல, பல இளைஞர்கள் மதுப்பழககத்திற்கு ஆளாகி இளம் வயதிலேயே உயிரிழப்பது தற்போது உலகம் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறது.

மரணம் மட்டுமல்ல, உடல்நலம் பாதிப்பு, அதனால் சந்திக்கும் பிரச்சினைகள் மதுவால் ஏராளம்.

மது அருந்துவதால், மூளை, கல்லீரல், ஆகியவை விரைவில் பாதிப்பு அடைகின்றன.... அவை செயல்படும் தன்மையை இழக்கின்றன.


மதுப்பழககம் இரத்த அழுத்தம், புற்றுநோய் ஆகிய நோய்கள் வர காரணமாக உள்ளது.

இதனால் உடலில் உள்ள முக்கிய உறுப்புகளுக்கு நிரந்தர சேதம் ஏற்படலாம் .

அது மட்டுமல்ல, மதுப்பழக்கம்  ஒருவரின் உடலில் இருக்கும் சத்துக்களை மாற்றி விடுகிறது. அதனால் உடல் பலவீனம் அடைகிறது..

அதிகம் குடிப்பவர்கள்  பல்வேறு  தொற்று நோய்களுக்கு ஆளாகிறார்கள்... அதனால் அவர்கள்   அடையும் பாதிப்புகள் அதிகம்.

மதுப்பழக்கம் நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் இருந்து பறித்து விடுகிறது.  பலவீனம் அடையச் செய்கிறது.

மதுப்பழகம்  மலட்டுத்தன்மை ஏற்படுத்துகிறது.

தொடர்ந்து மது அருந்தும் ஆண்களுக்கு ஆண்மை குறைந்து, விறைப்புத்தன்மை உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன...

நீண்ட காலம் மதுவை பயன்படுத்தி வந்தால் புற்றுநோய் கட்டாயம் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள்...

மதுப்பழகம், கல்லீரல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய், தொண்டை புற்றுநோய் , குரல்வளை புற்றுநோய் மற்றும் உணவுக்குழாய் புற்றுநோய் போன்ற புற்றுநோய்களுக்கு காரணமாக அமைகிறது என்பது மருத்துவர்களின் எச்சரிக்கை.

இந்த புற்றுநோய்கள் ஏற்பட்டால், அதனால் மதுப்பிரியர்கள் மிகப் பெரிய ஆபத்துக்களை நிச்சயம் சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.


மதுப்பழகம் மனிதனுக்கு உடல் பருமன் ஏற்படுத்தி விடும் மதுவில் கலோரிகள் அதிகம் உள்ளதால், உடல்பருமன் தொடர்புடைய நோய்கள் ஏற்படும்.

பின்னர், உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி,  நடை பயிற்சி என பயிற்சிகளில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும்.

ஆனால், மதுப்பழக்கத்திற்கு ஆளானவர்களுக்கு இந்த பயிற்சிகளால் எந்த நல்ல பலனுக்கும் கிடைக்காது என்பது ஆராய்ச்சியின் முடிவு...

ஆண்களுக்கு மட்டுமல்ல, மதுப்பழகத்திற்கு ஆளான பெண்களுக்கும் மதுவால் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

மதுப்பழகத்திற்கு ஆளான பெண்களுக்கு குழந்தை பிறப்பு குறைபாடுகள் நிச்சயம் ஏற்படும்.

மது குடிக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு  மூளை, இதயம் மற்றும் பிற உறுப்புகளின் பிறப்பு குறைபாடுகள் உள்ள குழந்தைகள் பிறக்கும் என்பதால்,  கர்ப்பிணி பெண்கள் பெரும்பாலும் மதுவை குடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

உடல்நல பாதிப்பு மட்டுமல்ல, மதுவால் மனித உறவுகள் பாதிப்பு அடைகின்றன....

பொதுவாக, ஒருவர் மது அருந்தி விட்டு வீட்டிற்கு செல்லும்போது, அங்கு உள்ள மற்ற உறுப்பினர்களின் அன்பை இழக்கிறார்.

மனைவி, குழந்தைகள், சகோதரிகள், சகோதரர்கள் என அனைத்து தரப்பினரின் அன்பு, மது அருந்துபவருக்கு கிடைப்பதில்லை..

இதேபோன்று, வேலை செய்யும் இடங்களிலும், அலுவலகங்களிலும் மது அருந்துபவர்களுக்கு நல்ல மதிப்பு இருப்பதில்லை.

எனவே  மது, நல்வாழ்க்கையின் அடிப்படையில் மனித உறவுகளை பாதிக்கிறது.

மேலும் பல நாடுகளில் நிகழும் வன்முறைகளுக்கும் மதுவே காரணமாக இருக்கிறது.

மதுப்பழக்கத்திற்கு ஆளானவர்கள் தவறான நடத்தையால் தங்களது குடும்ப வாழ்க்கையை சீரழித்து கொள்கிறார்கள்.

குடிப்பழக்கம், மனிதனுக்கு  மன அழுத்தம்,  கவலை, மற்றும் கடுமையான தூக்கம் அல்லது தூக்கமின்மை  போன்ற உளவியல் பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைகிறது.

மதுப்பிரியர்களே மேலே சொன்ன தகவல்களை கொஞ்சம் கவனமாக படித்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள்...

மதுப்பழக்கத்தை கைவிட்டு, நல்ல பாதுகாப்பான, அமைதியான வாழ்க்கை வாழுங்கள்...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: