Thursday, December 12, 2013

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (15)

" மதுவுக்கு எதிராக ஓர் ( பிரச்சாரம்) போர்.....! "  நாள்: 15


மதுவால் காணாமல் போன மு.க.முத்து !

திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து.

கருணாநிதியின் கலையுலக வாரிசாக திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

கடந்த 1970ஆம் ஆண்டு முத்து திரை உலகில் அறிமுகமானபோது, தமிழக அரசியலில் ஒரு திருப்பத்தை உண்டாக்கியது.

பூக்காரி படத்தில் தொடங்கி பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன், அணையாவிளக்கு என்று தொடர்ந்து பல படங்களில் நடித்தார் மு.க.முத்து.

நடிப்பு மட்டும் இல்லாமல் படங்களில் பாடியும் உள்ளார்.




இவர் பாடிய "நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா"  "சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க "  ஆகிய பல பாடல்கள் மக்களால் மிகவும் விரும்பி கேட்கப்பட்டன.  இன்றும் கேட்கப்படுகின்றன.

ஆனால்,  தெரிந்தோ தெரியாமலோ, மு.க.முத்து மதுப்பழக்கத்திற்கு அடிமையானார்.

தினந்தோறும் மது அருந்தாமல் அவரால் இருக்க முடியவில்லை.


அதனால் தனது உடல்நலத்தை கெடுத்துக் கொண்டார் மு.க.முத்து.

நல்ல திறமை இருந்தும் மதுப்பழக்கத்தால் காணாமல் போனார் மு.க.முத்து..

திரை உலகில் பல சாதனைகள் புரிய வேண்டிய முத்து, மதுப்பழக்கத்தால் அதனை செய்யவில்லை.

மதுப்பழக்கத்தால் தனிப்பட்ட வாழ்க்கையில் இவருக்கு பல்வேறு சோதனைகள் ஏற்பட்டன.

மக்கள் மத்தியிலும், திமுக தொண்டர்கள் மத்தியிலும் முத்துக்கு நல்ல பெயர் இல்லை...


எம்.ஜி.ஆருக்கு போட்டியாக திரை உலகில் நுழைந்த முத்து, பரபரப்பாக பேசப்பட்ட முத்து,
மதுவால் திரை உலகில் மட்டுமல்ல அரசியலிலும் ஓரங்கட்டப்பட்டார்.

மு.க.முத்து ஒரு உதாரணம்தான்.

முத்துவை போன்று, பலர் திறமை இருந்தும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி தங்களது திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்.

திரை உலகில் மட்டுமல்ல, பல துறைகளில் சாதிக்க வேண்டிய இளைஞர்கள், இன்று மதுப்பழக்கதால் தங்களது வாழ்க்கையை சிதைத்துக் கொள்கின்றனர்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: