Wednesday, December 18, 2013

லாலு வந்துட்டாரு.....!

வந்துட்டாரு அய்யா ! வந்துட்டாரு.....!!  லாலு வந்துட்டாரு..... !!!   

மோடிக்கு இனி கிலி கிலி....!!!


கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட லாலு, ராஞ்சி பிர்சா முண்டா மத்திய சிறையிலிருந்து இரண்டரை மாதத்துக்கு பிறகு ஜாமீனில் விடுதலையானார்.

சிறைக்கு வெளியே கூடியிருந்த நிருபர்களிடம் லாலு கூறியதாவது:

டெல்லியில் வலுவாக காலூன்ற மதவாத சக்திகள் முயற்கின்றன. அவர்களை விரட்டியடிப்பதற்காக நான் வந்துவிட்டேன்.

நரேந்திர மோடியோ, பாஜக அல்லது ஆர்எஸ்எஸ் அமைப்போ தங்களின் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள இடம்தரமாட்டோம்.

அஸ்தினாபூரில் இருந்து மதவாத சக்திகள் வெளியேற்றப்படுவார்கள்.

மத சார்பற்ற சக்திகளை வலுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் பயணம் செய்யப் போகிறேன் என்றார் லாலு.


இதைத் தொடர்ந்து அவர் ராஞ்சியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தியோரி கோயிலுக்கு புறப்பட்டுச் சென்றார். கோயில் அருகில் அங்கு கூடியிருந்த தொண்டர்களிடையே லாலு பேசுகையில், "நான் சிறைக்கு சென்றவுடன் எனது கதை முடிந்துவிட்டதாக சிலர் நினைத்தார்கள்.

சமோசாவில் ஆலு (உருளைக்கிழங்கு) இருக்கும் வரை பீகாரில் இந்த லாலு இருப்பான் என்பதை அவர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.

நரேந்திர மோடிக்கு பின்னால் தொழிலபதிபர்கள் உள்ளனர். மதவாத சக்திகளிடம் இருந்து மக்கள் விலகியிருக்க வேண்டும்.


வரும் தேர்தலில் பீகாரில் பாஜகவுக்கும், அதன் கூட்டணியில் இருந்து பிரிந்த சென்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்" என்றார் லாலு...

இதேபோன்று, ராஷ்டிரிய ஜனதா தளம், மதச்சார்பற்ற கட்சிகளுடனேயே 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி அமைக்கும் என லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

ஜாமீனில் தான் விடுதலையான நிலையில், தேர்தல் கூட்டணி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் லாலு கூறினார்.


லாலுவின் ரஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் லோக் ஜன சக்தி கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி அமைக்கும் என பரவலாக கூறப்பட்டு வரும் நிலையில், லாலு மதச்சார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேசியுள்ளார்.

ஜாமீனில் விடுதலையாகி லாலு சிறையில் இருந்து வெளியே வந்திருப்பது, மோடி உள்ளிட்ட பிஜேபி தலைவர்களுக்கு ஒருவித கிலிகிலியை ஏற்படுத்தி உள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் மோடிக்கு எதிராக லாலு மேற்கொள்ளும் பிரச்சாரம் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களிடையே நல்ல மாற்றத்தை எற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.


எனவே, லாலுவை தடுக்க சில மதவாத சக்திகள் முயற்சி செய்யும் என்றும்  நினைக்கப்படுகிறது. குறிப்பாக வடநாட்டு ஊடகங்கள் இந்த சதியை செய்யும் என்றும் அச்சப்படுகிறது.

எது எப்படியோ, லாலு நிறு ஹீரோவாக வந்திருப்பது இந்திய அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்கும் என்றே நம்பப்படுகிறது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: